இந்துக்கள் தீவிரவாதிகளாக இருக்கமுடியாது | இந்துக்கள் தீவிரவாதிகளாக இருக்கமுடியாது : அனில் விஜ்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

இந்துக்கள் தீவிரவாதிகளாக இருக்கமுடியாது : அனில் விஜ்

Added : ஜூன் 22, 2017 | கருத்துகள் (134)
Advertisement
இந்துக்கள், தீவிரவாதி, அனில் விஜ்,சண்டிகர்,ஹரியானா, அமைச்சர் அனில் விஜ்,  சம்ஜெளதா எக்ஸ்பிரஸ், காங்கிரஸ்  அரசு, விசாரணை 
பாக்கிஸ்தான், Hindus, terrorists, Anil Viz, Chandigarh, Haryana, Minister Anil Viz, Samjhauta Express, Congress Government, Investigation
Pakistan,

சண்டிகர்: 'இந்துக்கள் தீவிரவாதிகளாக இருக்கமுடியாது, ''இந்து தீவிரவாதி '' என்ற சொல்லுக்கே அர்த்தம் கிடையாது 'என ஹரியான மாநில மூத்த அமைச்சர் அனில் விஜ் தெரிவித்துள்ளார்.

ஹரியானா மாநிலம் சண்டிகரில் அம்மாநில அமைச்சர் அனில் விஜ் நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். சந்திப்பின்போது கடந்த 2007 ம் ஆண்டு நடந்த சம்ஜெளதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டு வெடிப்பு சம்பவத்தில் பாக்கிஸ்தானியர்கள் ஈடுபட்டிருப்பதாக வெளியான தகவல் குறித்து கேள்வி எழுப்பபட்டது.

அதற்கு பதிலளித்த அணில் விஜ் கூறுகையில் :'' இந்த குண்டு வெடிப்பில் 68 பேர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவத்தை இந்து தீவிரவாதிகள் நடத்தினர் என்ற ரீதியில் அப்போதைய மத்திய காங்., அரசு விசாரணை மேற்கொண்டது. தற்போது பாக்கிஸ்தானியர்கள் தான் செய்தார்கள் என அம்பலமாகியுள்ளது. இச்சம்பவம் மூலம் ''இந்து தீவிரவாதிகள்'' இருக்கிறார்கள் என்ற அரசியல் சதியை காங்., அரசு முன்னெடுத்தது. இந்துக்கள் எப்பொழுதும் தீவிரவாதிகளாக இருக்கமுடியாது. 'இந்து தீவிரவாதிகள்' என்ற சொல்லுக்கு அர்த்தமே கிடையாது. '' என கூறினார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X