குத்தாட்டம் பிளஸ் குச்சுப்புடி - 'ஹேப்பி' அர்ச்சனாவுக்கு 'ஹாபி'| Dinamalar

குத்தாட்டம் பிளஸ் குச்சுப்புடி - 'ஹேப்பி' அர்ச்சனாவுக்கு 'ஹாபி'

Added : ஜூன் 25, 2017
Advertisement
குத்தாட்டம் பிளஸ் குச்சுப்புடி - 'ஹேப்பி'  அர்ச்சனாவுக்கு 'ஹாபி'

கங்கையில் தீர்த்தமோ, கவிதையில் யதார்த்தமோ; கண்ணில் காந்தமோ; கற்பனையில் சித்திரமோ; காளையர் நாசி துளைக்கும் மாலைநேர மல்லிகையோ; வான்மீது வகிடெடுக்கும் மின்னலோ; பொங்கும் கடலில் பொதியாய் மிதக்கும் வெண்ணிலவோ என, வண்ணமாய் எண்ணத் தோன்றுபவர். சின்னத்திரை சீரியல்களில் தனக்கென முத்திரையை பதிக்கும் அர்ச்சனாவுடன் ஒரு நேர்காணல்* உங்களை பற்றி?சொந்த ஊர் சென்னை. எம்.பி.ஏ., முடித்துள்ளேன். இயக்குனர் டி.ராஜேந்திரனிடம் தந்தை மேலாளராக உள்ளார். சின்னத்திரையில் புகழ் பெற வேண்டும் என்ற ஆசையால் நடிக்க வந்தேன்.* ஜொலிக்கும் நிகழ்ச்சி?பொதிகையில் மேட்னி ஷோ; தனியார் 'டிவி'க்களில் பல்வேறு நிகழ்ச்சியில் வருகிறேன்.* 'டிவி'நிகழ்ச்சிக்கு முன் தயாரிப்பு ?முன்தயாரிப்பு இல்லாவிட்டால் எதிலும் ஜெயிக்க முடியாது. நடிகர்கள் படங்களை முன்கூட்டியே தெரிந்து வைத்திருப்பேன். என்ன கேள்விகள் கேட்க வேண்டும் என்பதை எழுதி வைத்தும் இருப்பேன்.* 'மேக் அப்' இல்லாமல் 'டிவி'யில் ?அப்படி எல்லாம் திரையில் தோன்ற முடியாது. அரிதாரம் பூசுவது நடிப்பிற்கே உள்ள கலை அல்லவா?* பழைய-- புதிய படங்கள் ?பழைய படங்களில் ஆழமான கதை இருக்கும். புதிய படங்கள் வணிக ரீதியில் எடுக்கப்படுகின்றன.* இளைஞர்கள் விருப்பம் ?தற்போதைய இளைஞர்கள் புத்திசாலிகள், அவர்களை ஏமாற்ற முடியாது. தரமான கதைகள் உள்ள படங்களையே விரும்புகின்றனர். நகைச்சுவைக்கு முக்கியத்துவம் தருகிறார்கள்.* இன்றைய பாடல்கள்...பழைய பாடல்கள் மனதிற்கு இதமாக இருக்கும். தற்போதுள்ள கவிஞர்கள் ஆழமான கருத்துக்களையும், தெளிவான சிந்தனைகளையும் சொல்கிறார்கள். இசையில் அந்த கவிதை நனையும் போது, ஸ்வரங்கள் சுண்டி இழுக்கிறது.* உங்கள் அழகு...தினமும் உடற்பயிற்சி செய்வேன், 'ஜிம்'முக்கு செல்வேன். ரசிகர்களை கவர உடற்கட்டு அவசியம். நம் உடலை கட்டுக்குள் கொண்டு வரவும், டாக்டர்களிடம் செல்லாமல் இருக்கவும் உடற்பயிற்சி அவசியம்.* பிடித்தது திரையா, சின்னத்திரையாவீடுகளுக்குள் நுழைந்து ரசிகர்களின் மனதைத் தொடும் ஒரே திரை சின்னத் திரை தான். குடும்ப பிரச்னை, கஷ்ட, நஷ்டங்களை நாங்கள் யதார்த்தமான நடிப்பில் காட்டுகிறோம்.* உங்கள் ரசிகர்கள் ?பொது இடங்களுக்கு சென்றால் என்னை ரசிகர்கள் கூட்டம் மொய்க்கும்.* நடனம் ஆடுவீர்களா ?எனக்கு குத்தாட்டம் போட பிடிக்கும். குச்சுப்புடி, பரதம் ஆடியதும் உண்டு. ஆனால், முறைப்படி கற்கவில்லை.* சண்டை போட்ட அனுபவம் ?வாழ்க்கையை ஒரு முறைதான் வாழப் போகிறோம். யாரிடமும் சண்டை வேண்டாம். நகைச்சுவையே சிறந்த மருந்து. நான் வந்தாலே 'ஹேப்பி' அர்ச்சனா வருவதாக கூறுவார்கள். கோபத்தில் இருப்போரையும் சாந்தப்படுத்த வேண்டும்.archanamay7@gmail.com

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X