வேதபுரிமாமாவிற்கு ஒரு மரியாதை...| Dinamalar

வேதபுரிமாமாவிற்கு ஒரு மரியாதை...

Added : ஜூன் 26, 2017 | கருத்துகள் (14)
Advertisement

சந்திரசேகரேந்திர சரசுவதி சுவாமிகள் காஞ்சி காமகோடி பீடத்தின் 68வது பீடாதிபதியாவார். பரவலாக இவர் பரமாச்சாரியார்,மகாசுவாமி மற்றும் மகா பெரியவாள் என அழைக்கப்பட்டவர்,அழைக்கப்படுபவர்.
இவரிடம் பத்து வயதில் தஞ்சமடைந்து பின் அவரது காலம் முழுவதும் அவரிடம் உதவியாளராக இருந்து ஒடியாடிவர்தான் வேதபுரி.இப்போது வேதபுரிமாமா என்று அனைவராலும் அன்போது அழைக்கப்படும் இவருக்கு தற்போது வயது 91.

இவரை கவுரப்படுத்தும் விதமாக மதுரை அனுஷத்தில் அனுகிரஹம் அமைப்பின் சார்பில் சென்னையில் விழா எடுக்கப்பட்டது.
மேடையில் பெரியவரின் சிலைக்கு நடைபெற்ற அபிஷேகம் ஆராதனைகளை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டு இருந்தவர் பின் அவருடனான தனது தொடர்புகளை நெகிழ்ச்சியாக பகிர்ந்துகொண்டார்.

வயது முதிர்வின் காரணமாக வார்த்தைகளும் சம்பவங்களும் கோர்வையாக வந்து விழவிட்டாலும் அவர் சொன்ன சில விஷயங்கள் பலரது மனதை தொட்டது அதில் இருந்து சில விஷயங்கள்.

வேதபுரி என்று அவர் அழைப்பது மிகவும் அன்பாக இருக்கும் அவருக்கான பாரா அதாவது பாதுகாப்பாளன் என்ற முறையில் அறை வாசலில் உலாவிக்கொண்டு இருக்கும் போது சும்மா நடந்து கொண்டிருக்காதே பகவான் பெயரை சொல்லிக்கொண்டே நட உடம்புக்கும் சரி மனதிற்கும் சரி களைப்பு இருக்காது என்பார்.

தினமும் காலையில் எழுந்திருந்து அனுஷ்டானம் முடித்து ஸ்ரீஆதிசங்கரருக்குத் தானே அபிஷேகம் செய்வார். சில சமயம் ஸ்ரீ பாலு, ஸ்ரீகண்டன் செய்வார்கள். பெரியவா பக்கத்தில் இருந்து பார்ப்பார் மாலை ஸ்ரீஆதிசங்கரரின் பாதுகை யானையின்மேல் ஊர்வலமாக பக்கத்தில் உள்ள கோவில்களுக்கு எடுத்துச் செல்லப்படும். கோவில் குளத்துக்கு எடுத்துச் செல்லும்போது ஆசார்யாள் படத்துக்கு குடை பிடித்து சாமரம் வீசிச் செல்வோம் ஸ்ரீபெரியவா நடு நாயகமாக ராஜா மாதிரி அசைந்து அசைந்து ஆனந்தமாக நடந்து வருவார்.பார்க்கக் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
குளத்தில் பாதுகைக்கு அபிஷேகம் முடிந்து, பாதுகையைத் துடைத்து அலங்காரம் செய்து ஊர்வலமாக வரும்போது மயில் தோகையால் ஆன விசிறியால் ஊர்வலம் முழுதும் சாமரம் வீசிக்கொண்டே வருவார்.அவ்வளவு குரு பக்தி!! பெரியவா ஆதிசங்கரர்பாதத்திற்கு பூஜை செய்து, தீபம் காண்பித்து, தோடகாஷ்டகம் சொல்லி நமஸ்காரம் செய்வார்கள். ஒவ்வொரு சுலோகத்திற்கும் தண்டத்தால் பாதுகையின் குமிழைத்தொட்டு தொட்டு வந்தனம் செய்வார்கள்.

பெரியவர் தன் குருவிற்கு செய்யும் பூஜை ! ஆனால் எனக்கு ஸ்ரீபெரியவா தனக்கே தான் செய்து கொள்ளும் பூஜையாகத் தோன்றும். ஏனென்றால் பெரியவா ஆதிசங்கரரின் மறு அவதாரம் அல்லவா? இப்படி பல விஷயங்களை பகிர்ந்துகொண்ட வேதபுரிமாமாவின் பாதத்தில் விழுந்து பலரும் ஆசிபெற்று சென்றனர்.
-எல்.முருகராஜ்Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bakthavathsalam Vathsalam - Chennai,இந்தியா
05-ஜூலை-201714:48:23 IST Report Abuse
Bakthavathsalam Vathsalam வேதபுரி மாமா தற்போது எங்கே இருக்கிறார் என்று யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்க.
Rate this:
Share this comment
Cancel
unmai nanban - Chennai,இந்தியா
05-ஜூலை-201714:10:47 IST Report Abuse
unmai nanban Nadamaadiya deivam magaa periyavaal.
Rate this:
Share this comment
Cancel
ganapati sb - coimbatore,இந்தியா
03-ஜூலை-201712:47:17 IST Report Abuse
ganapati sb மஹாபெரியவாவின் தெய்வத்தின் குரல் காலத்தால் அழியாத ஞான பெட்டகம் அவருக்கு பாராவாக இருக்கும் வாய்ப்பு பெற்ற பெரியவர் வேதபுரிக்கு நமஸ்காரங்கள்
Rate this:
Share this comment
Cancel
visweswaran a. subramanyam - Edmonton,கனடா
01-ஜூலை-201704:58:08 IST Report Abuse
visweswaran a. subramanyam வணக்கம் மகா பெரியவரின் பெருமையினை நுகரும் வண்ணம் இப்போது நிறைய பக்த கோடிகள் பத்திரிகைகளிலும், வலை தளங்களிலும், வலைப்பூக்களிலும், அலைபேசி மென்பொருள்கள் வாயிலாகவும் எழுதி வருகிறார்கள். அவற்றையெல்லாம் தொகுத்து வெளியிடவும், பின்னாளில் அவைகளை ஒரு புத்தகமாக வெளியிடவும் தினமலர் போன்ற மஹானுபாவர்களின் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கும் பத்திரிகைகள் முன் வரலாமே வாழ்க வளமுடன்
Rate this:
Share this comment
Cancel
vns - Delhi,இந்தியா
30-ஜூன்-201723:11:52 IST Report Abuse
vns பெரியவா வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பதே பெரிய பாக்கியம்.. ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
Rate this:
Share this comment
sankar - trichy,இந்தியா
10-ஜூலை-201721:04:48 IST Report Abuse
sankarஇதில் என்ன பெருமை . அவரை போல் முடிந்தால் அவரையும் தாண்டி அனுப்புது பெறுவது சிறப்பு...
Rate this:
Share this comment
sankar - trichy,இந்தியா
10-ஜூலை-201721:08:57 IST Report Abuse
sankarஇங்கேய கருது கூறிய அனைவருக்கும் நாமும் தெய்வம் தான் (தெய்வாம்சம் பொருந்தியவர்கள் ) நாமும் அவரை போல் அல்லது அதையும் தாண்டி செல்ல முடியும் என்ற எண்ணம் இருப்பதாக தெரியவில்லை .ஆதி சங்கரர் சொன்னது ஏகம் சத் . அதை அடைய முயலவேண்டும் ....
Rate this:
Share this comment
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
22-ஜூலை-201719:07:51 IST Report Abuse
கதிரழகன், SSLC@sankar - trichy,இந்தியா: நம் அனைவராலும் செல்ல முடியும், அடக்கமாக, மமதை இல்லாது, சான்றோர் காட்டிய பாதையில் செல்வோம் ன்னு போயி நாங்க சேந்துடுவோம். உங்க குரலிலே ஒரு கர்வம் தெரியுது, மத்தவுக மேல குறை சொல்லும் தொனி இருக்கு, அது உங்களை பாவம் செய்ய வைக்கும். கர்வம் கோவம் எல்லாம் கண்ணை மறைக்கும். நல்லவனை, நல்லூழ் கொண்டவனை ஒரு கணம் தருமம் மறக்கச்செய்யும். ஆயிரம் அசுவ மேத யாகம் செஞ்சு தேவேந்திர பதவி பெற்ற நகுடனை அழித்தது எது? அவன் கர்வம் கொண்டான். கர்வம் ஆசையை தூண்டியது. ஏழு முனி தூக்கும் பல்லாக்கில் ஏறி, அகத்தியனை காலால் உதைக்க தூண்டியது. நம்மால் இறைவன் பாதம் அடைய முடியும் என்று நம்பு, ஆனால் நான் ஒருவனாக, ஆசாரியன் வழிகாட்டல் இல்லாத சேர முடியும் ன்னு கர்வம் கொள்ளாதே....
Rate this:
Share this comment
sankar - trichy,இந்தியா
10-ஆக-201702:36:28 IST Report Abuse
sankarஎன்குரலில் தெரிவது கர்வமில்லை . ஆதி சங்கரர் மோட்சமடைந்தார் ராமகிருஷ்ணர் மோட்சமடைந்தார் என்று நினைத்து கொண்டிருந்தஅழ என்ன பயன் நம் சுய மோட்சத்துக்கு நாம் தான் உழைக்க வேண்டும் இதை சொன்னது விவேகானந்தர் அவரு கர்வமானவரா??? பெரியவர்களை பணிவதால் மட்டும் முக்தி கிடையாது . எல்லோரையும் இறைவன் என்ரூ எண்ணுபவனுக்கு பெரியவரும் சிரியவரும் ஒன்றாய்தான் தோன்றும் . (Nalla விதமாக ) நாமே கடவுள் என்று எண்ணுவது கர்வமில்லை நான் மட்டும் தான் கடவுள் என்று தான் என்ன கூடாது . நீங்கள் கூறிய நகுடான் அந்த ரகமாக இருக்கலாம் . இறைவனை அடைய ஆச்சர்யன் துணை தேவை . அந்த ஆசார்யன் மனிதனாக இருக்க வேண்டும் என்று அவசியாயமில்ல போதி மரமாக இருக்கலாம் , வாழ்க்கை அனுபவமாக இருக்கலாம் இல்லாய் புத்தகமாக இருக்கலாம் அல்லது ஒரு சிறு சம்பவமா இருக்கலாம் . ஆசார்யன் வைத்து கொள்வது தவறில்லை . ஆசார்யன் மட்டும்தான் வழி என்று எண்ணுவது தவறு . நீங்கள் சொன்னவர்கள் எல்லாம் எதோ ஒரு பதவியை அடைய இறைவனை நாடினார்கள் . இறைவனை அடைவது அதாவது இறைவணனாக மாறும் முயற்சி செய்தால் இதில் எங்கு கர்வம் வருகிறது ????...
Rate this:
Share this comment
Cancel
CHANDRA GUPTHAN - doha,கத்தார்
29-ஜூன்-201711:15:20 IST Report Abuse
CHANDRA GUPTHAN காஞ்சி மஹா பெரிவா பாதாரவிந்தங்களுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள் . திரு வேதபுரி மாமாவிற்கும் அனந்த கோடி நமஸ்காரங்கள் . பூவுடன் சேர்ந்த நாரும் மணக்கும் சிறு வயதிலிருந்து பெரியவாளுக்கு சேவை செய்த பாக்கியம் இவருக்கு கிட்டியதே அதுவே எத்தனையோ ஜென்மத்து பிரார்த்தனையும், பூஜா பலன்களும் ஆகும் . அவருக்கு விழா எடுத்தவர்களும் புண்ணிய ஆத்மாக்களே . உங்கள் அனைவருக்கும் என் நமஸ்காரங்கள் . இறைவனும் மஹா பெரிவாளும் இவருக்கு நல்ல ஆரோக்கியத்தையும் , நீண்ட ஆயுளையும் கொடுத்து நமக்கு நல் வழிகாட்ட அருள்புரிய வேண்டுகிறேன் . நம: பார்வதி பதயே ஹர ஹர மகாதேவா . ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
Rate this:
Share this comment
Cancel
Ganapathy - Bangalore,இந்தியா
29-ஜூன்-201708:45:21 IST Report Abuse
Ganapathy பெரியவா சொன்ன ஒருகாரியாதியுலும் என்னால் உண்மையாக கடை பிடிக்கமுடியவில்லை எனக்கு என் மீதே வெறுப்பு வருகிறது . மீண்டும் மீண்டும் அவர் இங்கு பிறக்கவேண்டும் .இது அவருக்கு அவசியமில்லை என்னை போல தருதலைக்கு தான் அவசியம் . அவரை பற்றி வாழ்த்துவதற்கு கூட எனக்கு யோக்கியதை இல்லை .அனாலும் சொல்கிறேன் விஞ்ஞானம் மற்றும் ஆன்மிகம் இதை பெரியவா போல ஒருங்கிணைந்து சொல்பவர்கள் கிடையாது .தெய்வத்தின் குரல் படிக்கும்போது பெரிவளே நேரில் பிரவசனம் பண்ணும்விதமாக தோன்றும் . ஒரு சிறு விஷயத்தை பகிர்ந்து கொள்கிறேன் .பெரிவளின் பல சமயம் மொழி குறித்து அது உருவான விதம் குறித்து விளக்குவார் . ஒரு கட்டுரையில் கலபம் என்ற சொல்லுக்கு அர்த்தம் விளக்கி உள்ளார் .கட்டுரையை படிக்க தொடங்கும்போதே மலையாளத்தில் இதுபோல சொல் ஒன்று உண்டே அது பற்றி கூறுவாரா என்று எண்ணுற்றேன், அவருக்கு மலையாளம் தெரியமா என்று சிறுபிள்ளைத்தனமா எண்ணத்துடன் மேலும் படித்தேன்,. தெய்வத்திற்கு நிகர் யார், பெரிவாளுக்கு நிகர் யார், கட்டுரையை இப்படி முடிக்கிறார் , " நம்முடைய குருவாயூரப்பானு குங்குமமும் சந்தனமும் சேர்ந்து ஒரு அலங்காரம் பண்ணுவார்கள் அதற்கு கலபம் என்று பெயர்" என்று முடித்தார் . என்ன செய்வது கண்ணீருடன் என்ன அகங்காரத்தை போக்குங்கள் என்று பிரார்த்தனை சேவித்தேன்
Rate this:
Share this comment
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
28-ஜூன்-201710:57:48 IST Report Abuse
Cheran Perumal மஹா பெரியவருக்கு நாம் செய்யும் பூஜை அவர் சொன்னபடி வாழ்ந்து காட்டுவதே ஆகும். ஒரு சிறிய விஷயத்திலாவது அவரது உபதேசத்தை கடைபிடிக்க முயற்சி செய்வோம்.
Rate this:
Share this comment
Cancel
Rajalakshmi - Kuwait City,குவைத்
27-ஜூன்-201714:07:14 IST Report Abuse
Rajalakshmi ஆஹா ...காஞ்சி மஹாசுவாமிகளை நினைப்பதே பெரிய புண்ணியம்.
Rate this:
Share this comment
Cancel
Manian - Chennai,இந்தியா
27-ஜூன்-201701:40:47 IST Report Abuse
Manian Really a lucky time to have some one who new the Great Man. By remembering Adi Shankara, Periyavar was expressing his gratitude to all his teachers, which is lacking now. This gratitude alone will give you inner peace and you will live young. Science says that by reliving the happy days, the body and DNA changes back to the oldern days thus diseases do not touch such people. This is like a get together of friends every 5 years. Thanks for Mama for sharing his experience. Salutation tohim.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை