பொது செயலர் யார் என்பதை தெளிவுபடுத்துங்க! முதல்வருக்கு தினகரன் ஆதரவாளர்கள் நெருக்கடி Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
பொது செயலர் யார் என்பதை தெளிவுபடுத்துங்க!
முதல்வருக்கு தினகரன் ஆதரவாளர்கள் நெருக்கடி

'முதல்வர் பழனிசாமி மவுனம் காக்காமல், கட்சியின் பொதுச் செயலர் யார் என்பதை, தெளிவுபடுத்த வேண்டும்; இல்லாவிட்டால், பொறுத்திருக்க மாட்டோம்' என, தினகரன் ஆதரவாளர்கள் போர்க்கொடி துாக்கி உள்ளனர். இது, அ.தி.மு.க., சசிகலா அணியில், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பொதுச்செயலாளர் ,General Secretary,  தினகரன்,Dinakaran, முதல்வர் பழனிசாமி ,Chief Minister Palanisamy, அ.தி.மு.க.,  AIADMK,சசிகலா,Sasikala,சர்ச்சை,controversy, லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை,Lok Sabha Deputy Speaker Thambidurai,  ஜனாதிபதி தேர்தல்,Presidential election,  பா.ஜ.,BJP, எம்.பி. அருண்மொழிதேவன்,MP Arunmozhi,எம்.பி அரி,MP Ari, எம்.எல்.ஏ முருகுமாறன்,MLA Murugumaran

அ.தி.மு.க., சசிகலா அணியில், முதல்வர் பழனிசாமி அணி, தினகரன் அணி என, இரு பிரிவுகள் உருவாகி, அவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் பேட்டி அளித்த, லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, 'சசிகலா மற்றும் முதல்வர் ஒப்புதலுடன் தான், ஜனாதிபதி தேர்தலில், பா.ஜ., வேட்பாளருக்கு ஆதரவளிக்க முடிவு செய்யப்பட்டது' என்றார்.

மோதல்


இதற்கு, எம்.பி.,க்கள் அருண்மொழிதேவன், அரி, எம்.எல்.ஏ., முருகுமாறன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். 'கட்சியில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ள சசிகலா பெயரை, தம்பிதுரை ஏன் உச்சரிக்க வேண்டும்' என, கேள்வி எழுப்பினர். இதற்கு, தம்பிதுரை பதில் அளிக்கவில்லை.

மோதல்:


எம்.பி.,க்களின் பேச்சு, தினகரன் ஆதரவாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனால், இருதரப்பினருக்கும்

இடையே ஏற்பட்டுள்ள மோதல், நேற்றும் தொடர்ந்தது. திருத்தணியில், அரக்கோணம், எம்.பி., அரி, நேற்று அளித்த பேட்டி: ஜெ., ஆசியோடு, முதல்வர் பழனிசாமி தலைமையில், அ.தி.மு.க., அரசு சிறப்பாக செயல்படுகிறது. கட்சி தொண்டர்களால், பொதுச் செயலர் தேர்வு செய்யப்பட வேண்டும். இக்கட்டான நிலையில், பொதுச் செயலராக தேர்வானவர் சிறைக்கு சென்றதால், தலைமை கழக நிர்வாகிகள் தான் கட்சியை நடத்த வேண்டும். 'நான் தான் கட்சியை நடத்துவேன்' என, தினகரன் கூறுவதை ஏற்க முடியாது.

எப்படி அதிகாரம்


எம்.எல்.ஏ.,க்கள் சந்திக்க வந்தால், 'என்னை சந்திக்க வர வேண்டாம்; ஏதேனும் தேவை என்றால், முதல்வரை சந்தியுங்கள்' என, தினகரன் கூற வேண்டும். பொதுச் செயலர் தேர்வே செல்லாது என்ற நிலையில், துணை பொதுச் செயலர் எப்படி அதிகாரம் செலுத்த முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கு, தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள் தங்க தமிழ்செல்வன், வெற்றிவேல் ஆகியோர், கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
அவர்கள் இருவரும் கூறியதாவது: தங்க தமிழ்செல்வன்: 'சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வை' என, அமைச்சர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் பேட்டி கொடுப்பது ஏன் என, தெரியவில்லை. பொதுச் செயலர் சசிகலா; துணை பொதுச் செயலர் தினகரன்; தலைமை நிலைய செயலர் முதல்வர் பழனிசாமி என, அனைவரும் கையொப்பமிட்டு, தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி உள்ளோம். எனவே, தவறான செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், முதல்வர் மனம் திறந்து உண்மையை தெளிவுபடுத்த வேண்டும்.

மவுனமே காரணம்வெற்றிவேல்: அரி, யோக்கியமானவர் இல்லை. நால்வர் அணிக்கு சென்று, ஜெ., படத்தை

Advertisement

உடைத்தவர். நான் அனைத்தையும் பேச துவங்கினால், நிறைய பேர் அசிங்கப்பட வேண்டியது வரும்.
சசிகலா இல்லை என்றால், ஆட்சி இருந்திருக்காது; நன்றி மறப்பது தவறு. ஆட்சிக்கு தலைவர் பழனிசாமி; கட்சிக்கு சசிகலா எனக்கூறி வருகிறோம்.முதல்வர் பழனிசாமி, முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் போல மவுனம் காப்பது சரியல்ல.
காங்., வீழ்ச்சிக்கு, ராவின் மவுனமே காரணம்.அது போன்ற சூழல் உருவாகாமல், பிரச்னைகளுக்கு முதல்வர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தவறினால், தவறு செய்வோரை கிள்ளி எறிவது எப்படி என, எங்களுக்கு தெரியும். எங்கள் பொறுமைக்கும் எல்லை உண்டு. சில விஷயங்களை கூற விரும்பவில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்த மோதல் காரணமாக, சசிகலா அணி யார் தலைமையில் செயல்படுகிறது; சசிகலாவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், கட்சியில் தொடர்பு இல்லையா என, சந்தேகங்கள் எழுந்துள்ளன.

இவற்றுக்கு, முதல்வர் உரிய விளக்கம் அளித்தால் மட்டுமே, பிரச்னைக்கு தீர்வு ஏற்படும் என்ற நிலை உள்ளது.
- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
27-ஜூன்-201722:29:00 IST Report Abuse

Rajendra Bupathiஇனிமே ஜெயில்ல இருந்தாதான் பொது செயலாளர்? போதுமா?இல்ல இன்னும் விளக்கம் வேணுமா?

Rate this:
Vijay D Ratnam - Chennai,இந்தியா
27-ஜூன்-201721:15:45 IST Report Abuse

Vijay D Ratnamகடைசி கட்ட ஆட்டம் ஆடிப்பார்க்கிறது மன்னார்குடி மாஃபியா. விடக்கூடாது விட்டால் இவிங்களும் கோபாலபுர மாஃபியா ரேஞ்சுக்கு வளர்ந்துடுவாய்ங்க. தேர்தல் ஆணையம் நியமிக்கப்பட்ட பொதுச்செயலாளர் பதவி செல்லாது, தேர்தல் நடத்தி பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்படவேண்டும் என்று அறிவித்தால் அந்த நிமிடத்தோடு மன்னார்குடி மாஃபியா ஆட்டம் க்ளோஸ். எட்டப்பாடியும் பன்னிர்செல்வமும் இணைந்துவிடுவார்கள். இனி செய்யவேண்டியது தம்பித்துரை மாதிரி கூட இருந்தே குழிபறிக்கும் துரோகிகளை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கவேண்டும். அப்போதுதான் அதிமுக தேறும்.

Rate this:
kc.ravindran - bangalore,இந்தியா
27-ஜூன்-201716:20:13 IST Report Abuse

kc.ravindranநரசிம்மராவ் மவுனம் காத்ததினால் தான் காங்கிரஸ் தோல்வி கண்டது என்கிறார் ஒருவர். அதுபோல் cm மவுனத்தை நிறுத்தி உண்மையை பேசவேண்டும் என்கிறார் மேலும். இவரும் மவுனம் காத்தால் காங்கிரஸ் மாதிரி இவுங்க கட்சியும் தொல்வி அடையுமெனில் வரவேற்க வேண்டிய ஒரு சூழ்நிலை. அண்ணண் பேரை சொல்லி ஏமாத்தி, வாத்தியார் பேரை சொல்லி ஏமாத்தி, அம்மா பேரை சொல்லி ஏமாத்தி, சின்னம்மா பேரில் கதையையே மாத்தி இப்படி மாத்தி மாத்தி ஏமாத்தி நாங்க ஏமாந்த சோணகிரிகளாயிட்டோம் தலைவா நீதான் காப்பாத்தணும். யாரை கூப்பிடுறீங்க தலைவான்னு? அட, நம்ம வடிவேலுங்க

Rate this:
மேலும் 24 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X