மோடியின் வருகை அமெரிக்காவுக்கு பெருமை: டிரம்ப்| Dinamalar

மோடியின் வருகை அமெரிக்காவுக்கு பெருமை: டிரம்ப்

Updated : ஜூன் 28, 2017 | Added : ஜூன் 27, 2017 | கருத்துகள் (51)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

வாஷிங்டன்: ‛மோடியின் வருகை அமெரிக்காவுக்கு பெருமை சேர்க்கிறது' என அதிபர் டிரம்ப் பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவித்தார்.


பெருமை:

இதுகுறித்து டிரம்ப் தெரிவித்ததாவது: மோடியின் வருகை அமெரிக்காவிற்கு பெருமை சேர்க்கிறது. பொருளாதாரத்தில் முக்கிய பணி செய்து வெற்றி கண்டவர் மோடி. இந்தியா ராணுவ உபகரணங்கள் வாங்கியதற்கு நன்றி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மோடியின் வருகை அமெரிக்காவிற்கு பெருமை: டிரம்ப்

தொடர்ந்து, அதிபர் டிரம்புக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், ‛எனக்கு அளித்த வரவேற்பு, 125 கோடி இந்தியர்களுக்கும் அளித்த வரவேற்பு' எனக் கூறினார்.
இச்சந்திப்பில் இரு தலைவர்களும் அதிக நேரம் பேச உள்ளதால், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மேலும் வலுப்பெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது. பயங்கரவாதம், ராணுவ உபகரணங்கள் உள்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து இருவரும் விரிவாக ஆலோசிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 'விசா' பிரச்னையை, பிரதமர் மோடி முன்னிறுத்துவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இரு தரப்பிற்கும் இடையேயான பேச்சுவார்த்தை வெள்ளை மாளிகையில் உள்ள அமைச்சரவை கூட்ட அரங்கில் துவங்கியது.



Advertisement




வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Kumar - coimbatore,இந்தியா
27-ஜூன்-201721:01:26 IST Report Abuse
Ramesh Kumar . //இந்தியா ராணுவ உபகரணங்கள் வாங்கியதற்கு நன்றி.// அதே சமயத்தில் விசா விவகாரத்தில் பெப்பே....
Rate this:
Share this comment
Cancel
JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா
27-ஜூன்-201716:46:57 IST Report Abuse
JEYAM தமிழன் JEYAM டிரம்பு உண்மையிலேயே மகா கில்லாடிப்பா... நம்மவரை அமெரிக்கா க்கு வாங்கன்னு கூப்பிட்டு, அங்குள்ள, வீணாப்போன ஆளில்லா விமானங்களை , இவர் தலையில் கட்டி, ஐஸும் கொஞ்சம் வைத்து, ஒரு டின்னர் கொடுத்து, பல லட்சம் கோடிகளுக்கு வியாபாரம் பார்த்துவிட்டார்... இப்போ சொல்லுங்க .?. யார் புத்திசாலி ?
Rate this:
Share this comment
Maverick - Corpus Christii,யூ.எஸ்.ஏ
27-ஜூன்-201717:06:53 IST Report Abuse
Maverickநிச்சயம் நீ இல்லை. நீ மக்கு மங்கூசு தான்......ஆனா பேச்செல்லாம் பெரிய டிபன்ஸ் செகிரேட்டரி ரேஞ்சுக்கு ..அவுத்து வுடுறான்......
Rate this:
Share this comment
27-ஜூன்-201718:25:48 IST Report Abuse
வளர்ச்சியை எதிர்பார்ப்பவன் அமெரிக்காவுல உள்ள மாவெரிக் தம்பி , நம்ம பேட்டையை விட்டுட்டு எப்ப போனீங்க.. சொல்லவே இல்லை....
Rate this:
Share this comment
NRK Theesan - chennai,இந்தியா
27-ஜூன்-201720:54:33 IST Report Abuse
NRK Theesanஅமெரிக்காவுக்குள் அனுமதிக்காதீர்கள் என்று கடிதம் எழுதி காணாமல் போனார்களே அரசியல் அனாதைகள் அவர்கள் தான் புத்திசாலி ....
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
27-ஜூன்-201716:37:37 IST Report Abuse
Endrum Indian வேடிக்கை வினோதம் 3 வருடங்களுக்கு முன்பு "கோத்ரா செயல்கள்" காரணம் காட்டி விசாவை நிராகரித்த அதே அமெரிக்கா இந்த மாதிரி சொல்கின்றது என்றால் இந்தியாவில் நடக்கும் எல்லா தீமைகளுக்கும் காங்கிரஸ் தான் மூல காரணம் என்று பட்டவர்த்தனமாகத்தெரிகின்றது (டாஸ்மாக் நாட்டில் விஷ திராவிடக்கட்சிகள் போல)
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X