‛பயங்கரவாதத்தை வேரறுப்போம்': டிரம்ப் - மோடி | ‛பயங்கரவாதத்தை வேரறுப்போம்': டிரம்ப்-மோடி சபதம்| Dinamalar

‛பயங்கரவாதத்தை வேரறுப்போம்': டிரம்ப்-மோடி சபதம்

Updated : ஜூன் 28, 2017 | Added : ஜூன் 27, 2017 | கருத்துகள் (161)
Advertisement

வாஷிங்டன்: ‛ பயங்கரவாதத்தை வேரறுக்க இந்தியா- அமெரிக்கா அரசு இணைந்து பாடுபடும்' என டிரம்ப்-மோடி இருவரும் தெரிவித்துள்ளனர்.
இந்தியா- அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தை வெள்ளை மாளிகையில் உள்ள அமைச்சரவை கூட்ட அரங்கில் நடந்தது. இதனையடுத்து செய்தியாளர்கள் மத்தியில், பிரதமர் மோடியும், அதிபர் டிரம்பும் பேட்டியளித்தனர்.


பயங்கரவாதத்தை வேரறுப்போம்: மோடி-டிரம்ப் சபதம்

இரக்கம் இல்லை:


டிரம்ப் பேசியதாவது:இந்தியா அமெரிக்காவின் உண்மையான நண்பன். இருநாடுகளுக்கிடையேயான உறவு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வலுவாக உள்ளது. இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒழிக்க இந்தியா - அமெரிக்கா இணைந்து செயல்படும். பயங்கரவாதத்தின் மீது இருநாடுகளுக்கும் இரக்கம் கிடையாது. ஊழலுக்கு எதிரான மிகப்பெரிய பார்வை கொண்டவர் மோடி. இந்தியாவிற்கு அதிக எரிவாயு ஏற்றுமதி செய்ய எதிர்பார்க்கிறோம்.
அடுத்த இரண்டு வாரத்தில் இந்தியாவில் இந்திய வரலாற்றில் மிகப்பெரிய வரிமாற்றங்கள் நடைமுறைக்கு வரவுள்ளது. ஜி.எஸ்.டி., போன்ற வரிக்கொள்கையை அமெரிக்காவும் பின்பற்றும். இந்தியா- அமெரிக்க உலக தொழில் முயற்சி தூதுகுழுவை வழி நடத்த என் மகள் இவான்காவிற்கு மோடி அழைப்பு விடுத்துள்ளார். மோடியின் அழைப்பை இவான்கா ஏற்பார் என நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


பயங்கரவாதத்தை ஒழிப்போம்:


தொடர்ந்து மோடி பேசியதாவது:டிரம்ப்பையும், அவரது குடும்பத்தையும் இந்தியாவுக்கு வரவேற்கிறேன். பயங்கரவாதத்தை வேரறுப்பதே எங்களது பேச்சுவார்த்தையின் முக்கிய சாராம்சம். பயங்கரவாதத்தை ஒழிக்க இரு நாடுகளும் முன்னுரிமை வழங்குகிறோம். இருநாடுகளும் இணைந்து பயங்கரவாதத்தை வேரறுக்கும். இந்தியாவின் முன்னணி திட்டங்களில் அமெரிக்காவிற்கு முக்கிய இடம் ஒதுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (161)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bairava - madurai,இந்தியா
01-ஜூலை-201701:14:31 IST Report Abuse
bairava ஒரு ஊர்ல ஒரு அய்யோக்கியனும் ,மொள்ளமாரியும் இருந்தானுங்களாம் அவனுங்க அரசியலில் சேர்ந்து தேர்தலில் சொன்னனங்களும் நாங்க இந்த ஊரை அப்புடி செய்வோம் ..இப்புடி செய்வோம்னு கடைசியில் ஊர் எல்லாத்தையும் வாழும் மக்களையும் சேர்த்து 5. 6. நாடுகளுக்கிட்ட இவன் அத செய்வான் இவன் இத செய்வான் அப்புடின்னு சொல்லி விற்றுவிட்டு மக்கள் அனைவரும் உங்கள் அடிமைகள் என்று எழுதிக்கொடுத்துவிட்டு சாமியாரை போல் வேடம் அணிந்து துறவறம் சென்றார்களாம்
Rate this:
Share this comment
Cancel
Jeyaseelan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
27-ஜூன்-201719:18:53 IST Report Abuse
Jeyaseelan பயங்கரவாதத்தை வேரறுப்போம் ஆனால் தீவிரவாதிகளை வழக்கும் நாட்டுக்கு நிதி உதவி செய்வோம். அமெரிக்காவிடம் ஏமாந்து போனது தெரியாமல் சிரித்துக்கொண்டே கட்டிப்பிடிக்கும் மோடியை என்ன சொல்வது? இந்தியன் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தன மானத்தை இழந்து தவிக்கிறான்.
Rate this:
Share this comment
Cancel
JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா
27-ஜூன்-201718:58:25 IST Report Abuse
JEYAM தமிழன் JEYAM ஹய்யா ஜாலி... மேவெரிக் காண்டாயிட்டான்... எல்லாரையும் கலாய்ச்சிகினு இருந்தான்... இன்னைக்கு நான் கலாய்த்த கலாய்ப்பில், இனி வழிக்கு வந்துருவான்னு நினைக்கிறேன்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X