நான் கண்ணதாசனின் தாசன்...| Dinamalar

நான் கண்ணதாசனின் தாசன்...

Updated : ஜூன் 29, 2017 | Added : ஜூன் 29, 2017 | கருத்துகள் (8)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisementநான் கண்ணதாசனின் தாசன்...

கலைமகள் தமிழுக்கு தந்த வீணையான கண்ணதாசனின் 91வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் பல இடங்களில் அவரது விழாக்கள் கொண்டாடப்படுவதாக சுவர் விளம்பரங்களும்,போஸ்டர்களும்,பிளக்ஸ்களும் அறிவிக்கின்றன.

கடந்த 25 ஆண்டுகளாக அவரது புகழ் பரப்புவதையும்,பாடுவதையும்,மீட்டுவதையும் தன் பிறவிக்கடமையாக செய்துவருபவர் ஒருவர் இருக்கிறார் இதோ 26வது வருடமாக அவரது 91வது பிறந்த நாளை கொண்டாட தயராகிவருகிறார்.

அவர்தான் காவிரிமைந்தன்.

இத்தனைக்கும் இவர் கண்ணதாசனை அவர் வாழும் காலத்தில் ஒரு முறைகூட பார்த்தவர் இல்லை.

பள்ளிப்பருவத்தில் இவருக்கு தமிழாசிரியராக வந்த விவேகானந்தன் எளிய முறையில் இலக்கணத்தை போதிக்க நிறைய கண்ணதாசன் பாடல்களை கையாண்டிருக்கிறார்.அந்த பாடல் வரிகளின் வசீகரம் காரணமாக ஈர்க்கப்பட்ட காவிரிமைந்தன் கண்ணதாசனுக்குள் நுழைய பின் அவரையே உலகமாகக் கொண்டுவிட்டார்.

கண்ணதாசனை படிக்க படிக்க, அவரது பாடல்களைப் பாடப்பாட இவருக்குள்ளும் தமிழ் உணர்வு பொங்க கவிஞனாக கட்டுரையாளனாக பேச்சாளனாக புத்தக ஆசிரியனாக மாறினார்.

கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கம் அமைத்தவர் சென்னை பம்மலில் கடந்த 91ம் ஆண்டு முதல் கண்ணதாசனை மையப்பொருளாக வைத்து கவியரங்கம் பட்டிமன்றம் நடத்திட மக்கள் மத்தியில் அமோக வரேவேற்பு.

தொடர்ந்து கடந்த 25 ஆண்டுகளாக பல்வேறு ஆளுமைகளைக் கொண்டு கண்ணதாசனுக்கு விழா நடத்திவருகிறார் இவரது குழு முயற்சிதான் தற்போது வாணிமகால் அருகே கம்பீரமாகக் காணப்படும் கண்ணதாசன் சிலை.பிழைப்பு தேடி வளைகுடா நாட்டிற்கு சென்ற போதும் விழா நடத்த சென்னை வந்துவிடுவார்.

பாலைவன நாட்டில் இருந்த போதும் பைந்தமிழ் வளர்க்க இவர் தவறவில்லை பல்வேறு அமைப்புகள் வாயிலாகவும் ஊடகங்கள் வாயிலாகவும் தமிழையும் கண்ணதாசனையும் உயர்த்திப் பிடித்துக்கொண்டே இருக்கிறார்

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக 'என் பார்வையில் கண்ணதாசன்' என்ற நுாலினை எழுதியுள்ளார்.கண்ணதாசனைப் பற்றி நுாறு பேர் எழுதிய கட்டுரைகளும் இந்த கட்டுரைகளுக்கு இவர் பின்னுாட்டம் போட்டுள்ளதும்தான் இந்த புத்தகத்தின் சிறப்பு.

கண்ணதாசனைப் பற்றி நான் என்ன சொல்ல என்று ஆரம்பித்து கட்டுரையாளர்கள் ஒவ்வொருவரும் ஒரு புதிய செய்தியை சொல்லி இருக்கின்றனர் இவர்களுக்கான காவிரிமைந்தனின் கவித்துமான தமிழில் பின்னுாட்டம் தந்திருக்கிறார். இது புதுமையாகவும் அற்புதமாக வெளிப்பட்டு இருக்கிறது.

சென்னை அடையாறு இந்திரா நகர் இளைஞர் விடுதியில் 01/7/2017 சனிக்கிழமை மாலை 6 மணியளவில் நடைபெறும் கவியரசு கண்ணதாசன் விழாவில் இந்த புத்தகம் வெளியிடப்படுகிறது.அரங்கில் சலுகை விலையில் புத்தகம் விற்கவும் செய்யப்படுகிறது.கண்ணதாசன் புகழின் உச்சம் தொட்டது காதல் கடலிலா? தத்துவ மலையிலா? என்ற தலைப்பில் சுவராசியமான பட்டிமன்றமும் நடைபெற உள்ளது.

தமிழருவி மணியன் புத்தகத்தின் வாழ்த்துரையில் கூறியுள்ளது போல கவியரசரின் கவிதைகளைப் பற்றி எண்ணுவதே ஒரு இனிய சுகானுபவந்தான்.எளிமையான சொற்களைக் கொண்டு தமிழில் மயக்கம்தரும் கவிதைகளைத் தந்தவர் அவர்.

உணர்வுகளை உசுப்பிவிடும் போராட்டக்களம் அமையாத சூழலில் ஒரு கவிஞன் பாடிய பாடல்கள் காலத்தை வென்று வாழ முடியுமென்றால் அவன் உண்மையில் ஒரு மகா கவிஞனாகத்தான் இருந்திருக்கமுடியும்.

அந்தக் கவிஞரை தன் இளமை முதல் இன்று வரை விடாமல் காவிரிமைந்தன் சுவாசிக்கிறார் என்றால் இது அன்பினால் செய்யப்படும் அறப்பணி,என்றும் சொல்லியிருக்கிறார்.

காவிரிமைந்தனின் அறப்பணி தொடர வாழ்த்த விரும்பவர்களும், இவரது புத்தகம் தொடர்பாக விசாரிக்க விரும்புபவர்களும் தொடர்பு கொள்ள வேண்டிய எண்:9444236999.

-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arumugam - Paris,பிரான்ஸ்
14-ஜூலை-201715:25:48 IST Report Abuse
Arumugam மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மட்டுமே புகழுக்கும் பெருமைக்குமுரியவர். அவர்மட்டும் இன்னும் சில காலம் உயிரோடு வாழ்ந்திருந்தால் கவியரசு, கவிப்பேரரசு என்ற தம்பட்டம் தென்பட்டிருக்காது.
Rate this:
Share this comment
Cancel
Justin - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
05-ஜூலை-201713:45:41 IST Report Abuse
Justin திரு காவேரி மைந்தன் அவர்கள் எனது நண்பர் என்பதை விட அவருக்கு நான் நண்பனாக இருப்பதை பெருமையாக நினைக்கிறேன் .அவரின் தமிழ் கட்டுரைகள் பலமுறை நான் வாசித்து இருக்குறேன் .அவருடன் ஒன்றாக வேலை பார்த்த போது அவர் கண்ணதாசன் மீது வைத்த பாசம் நேரில் பார்த்து இருக்கிறேன், அவரது பணி மேலும் சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் .
Rate this:
Share this comment
Cancel
வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா
04-ஜூலை-201718:45:42 IST Report Abuse
வந்தியதேவன் கண்ணதாசன் வரிகளை காதலிக்காதவர்களே இல்லை... என் தந்தை அவர் வரிகளை அவ்வப்போது வாழ்க்கையுடன் ஒப்பீடு செய்து எடுத்துக் காட்டுவார்... சிறிய வயது முதலே கவியரசரின் வரிகள் மேல் காதல்... நன்றாக நினைவிருக்கிறது... எனது பத்து, பனிரெண்டு வயதில்.... தி.மு.க. கூட்டம்... காஞ்சிபுரம் காந்தி சாலையில்... இவர் உரையாற்றுகிறார்... மதியழகன் போன்ற தி.மு.க. முன்னணிப் பேச்சாளர்கள் உரையாற்றுகின்றனர்... நான் சொல்வது பிளாக் அண்ட் ஒயிட் காலம்... மேடைக்கு கீழே அவருக்கு அருகில் (அந்த கூட்டத்தின் சவுண்ட் சர்வீஸ் ஓனர் என் பக்கத்து வீட்டுக்காரர் என்பதால்... அவர் மைக் செட் ஆம்பிளிவையரிடம் அமர்ந்திருந்தே) அவரை நேரில்... மிக அருகில் பார்த்து.. அவர் பேச்சில் ஒரு ஈர்ப்பு இருந்து... இரும்பை இழுக்கும் காந்தம் போல... மேடைக்கு அருகில் இருந்தவர்களை அவர் பேச்சு... மெஸ்மெரிசம் செய்து அப்படியே அசையாமல் அமர வைத்திருந்தது... இதற்கப்பால்... பத்து அல்லது பனிரெண்டாவது வகுப்பு பயிலும் பருவத்தில்... நான் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சென்றிருந்தபோது.. அங்கே இந்துமத சங்கத்தின் சார்பாக ஒரு கதாகாலட்சேபம் ஏற்பாடு செய்திருந்தனர்... உரையாற்றுபவர் யார் என்று தெரியாமல் ராஜகோபுரத்தில் அருகில் உள்ள பேய் கோபுரம் அருகே வருகிறேன்... ஒரு அம்பாசிடர் கார் என்னை இடிக்கும் அளவுக்கு அருகில் வந்து நிற்கிறது... அதிலிருந்து... நெடிய... சந்தனகலர் ஜூப்பா, பட்டு வேட்டியுடன் ஒரு நெடிதுயர்ந்த... சந்தன கலருடன்கூடிய ஒரு உருவம் இறங்கி... “சீக்கிரம் இறங்குங்கள்” என்று ஒரு காந்த குரல் ஒலிக்கிறது. காரின் பின்பக்கத்தில் அவர் துணைவியார்... அவர் மகள் இறங்குகின்றனர்... அப்போதுதான் உணர்ந்தேன்... அந்த காந்தக் குரல் கவியரசர் கண்ணதாசனுடையது என்று... எதோ ஒரு தைரியத்தில் அவர் அருகில் சென்று வணக்கம் தெரிவித்து... அவருடனே... அவருக்கு அருகிலேயே சுமார் நாற்பது, ஐம்பது அடி அவருடனே நடந்தேன்... அவர் உடையிலிருந்த நறுமணமும்... அவர் பார்வையும் என்னை சொக்க வைத்தன... பிறகு மேடையில் அமர்ந்து... அர்த்தமுள்ள இந்து மத சொற்பொழிவாற்றினார்... தனது காந்தக் குரலில்.. இது அவரைக் கண்ட சிறந்த அனுபவம்... எத்தனை கவிஞர்கள் வந்தாலும், சென்றாலும் கவியரசு கண்ணதாசன் போல் ஒரு பய பொறக்க முடியாது... எழுதவும் முடியாது... அவர் பிறப்பு முதல் இறப்பு வரை... விஞ்ஞானம் முதல் அஞ்ஞானம் வரை... வீடு முதல் சுடுகாடு வரை... பக்தி முதல் முக்தி வரை.... என அவர் எழுதாத பாடல்கள்... அவர் தொடாத துறைகள் இல்லை... வாழ்க கண்ணதாசன் புகழ்... இப்புவி இருக்கும் வரை...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X