ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.,க்கு ஓட்டு போட அன்புமணி நிபந்தனை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.,க்கு ஓட்டு போட அன்புமணி நிபந்தனை

Added : ஜூலை 01, 2017 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

திருநெல்வேலி: ''காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு ஒப்புக்கொண்டால் ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.,அணி வேட்பாளருக்கு ஓட்டளிப்பேன், இல்லையெனில் தேர்தலை புறக்கணிப்பேன்,'' என பா.ம.க., இளைரணி தலைவர் அன்புமணி கூறினார்.
திருநெல்வேலியில் பா.ம.க.,சார்பில் தாமிரபரணியை பாதுகாக்க வலியுறுத்தி பாபநாசம் துவங்கி நெல்லை வழியே துாத்துக்குடி வரையிலும் இரண்டு நாள் பிரசார ஊர்வலம் நடக்கிறது. ஊர்வலத்தை அன்புமணி துவக்கி வைக்கிறார்.
இதற்காக நெல்லை வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜனாதிபதி தேர்தலில் எம்.பி., என்ற முறையில் எனது ஓட்டினை பா.ஜ.,வேட்பாளருக்கு அளிக்க ஒரு நிபந்தனையை தெரிவித்துள்ளோம். ஒரு மாத காலத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என உறுதி மொழியளிக்க கேட்டுள்ளோம். இல்லையெனில் இந்த தேர்தலை புறக்கணிப்பேன்.
தமிழகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை, இந்திய அளவில் 8 சதவீத ஓட்டுக்களை கொண்டுள்ளது.
எனவே தமிழகத்தின் முக்கிய பிரச்னைகளான நீட் தேர்வு, மீத்தேன் பிரச்னை, முல்லை பெரியாறு போன்ற முக்கிய பிரச்னைகளில்
மத்திய அரசு தமிழகத்திற்கு நல்ல முடிவுகளை அறிவிக்க வலியுறுத்தலாம்.
பா.ஜ.,வின் பினாமி முதல்வராக பழனி
சாமி செயல்படுகிறார். குட்கா விற்பனையை அனுமதிக்க லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலகவும், போலீஸ் அதிகாரிகள் மீது
நீதிவிசாரணை நடத்தக்கோரியும்
கவர்னரை சந்திக்க உள்ளோம்.
ஜூலை 4ல் சென்னையில் பா.ம.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
adalarasan - chennai,இந்தியா
01-ஜூலை-201723:00:07 IST Report Abuse
adalarasan இவர் ஒருவருக்காவது காவேரி ஞாபகம் இருக்கே? வாழ்த்துக்கள்? பிரதான எதிர்க்கட்சி? ஊஹூம்...?
Rate this:
Share this comment
Cancel
Gnanaprakasam Arumugam - Chennai,இந்தியா
01-ஜூலை-201712:01:21 IST Report Abuse
Gnanaprakasam Arumugam தமிழகத்தின் ஒரே நம்பிக்கை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X