எதிர்க்கட்சிகளின் ஓட்டு கிடைக்கும் என பா.ஜ., உற்சாகம்! Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
உற்சாகம்!
எதிர்க்கட்சிகளின் ஓட்டு கிடைக்கும் என பா.ஜ.,
ஜனாதிபதி தேர்தலில் ராம்நாத் வெற்றிமுகம்

புதுடில்லி: ஜனாதிபதி பதவிக்காக நடக்கும் தேர்தலில், எதிர்க்கட்சி கூட்டணியைச் சேர்ந்த ஓட்டுகளும் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு உள்ளதாக, பா.ஜ., உற்சாகத்தில் உள்ளது.

எதிர்க்கட்சி, ஓட்டு,கிடைக்கும், பா.ஜ., உற்சாகம்


ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம், வரும், 24ல் முடிவுக்கு வருகிறது. புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் தேர்தல், வரும், 17ல் நடக்க உள்ளது.
ஜனாதிபதி வேட்பாளராக பா.ஜ., சார்பில் நிறுத்தப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்த், காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள மீரா குமார், ஆதரவு கேட்டு நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு உள்ளனர்.

ராம்நாத்துக்கு ஆதரவு


பா.ஜ., தலைமையிலான, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இல்லாத, ஐக்கிய ஜனதா தளம், பிஜு ஜனதா தளம், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி, ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ், அ.தி.மு.க., போன்ற கட்சிகள், ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால், 62 சதவீத ஓட்டுகளுடன், அவர் வெற்றி பெறுவார் என, கணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சில எதிர்க்கட்சிகளின் ஓட்டு களும் தங்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது என, பா.ஜ.,வினர் உற்சாகத்தில் உள்ளனர். இது குறித்து, பா.ஜ., மூத்த தலைவர்கள் கூறியதாவது:

உத்தர பிரசேதத்தில், முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான அரசு அமைந்துள்ளது. அந்த மாநிலத்தைச் சேர்ந்த சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ்வாதி கட்சி, மீரா குமாருக்கு ஆதரவு தெரிவித்து உள்ளன.
அதே நேரத்தில், சமாஜ்வாதி கட்சியில், அதன் தலைவரும், முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ்

மற்றும் கட்சியின் நிறுவனரும், அவருடைய தந்தையுமான முலாயம் சிங் யாதவ் இடையே மோதல் போக்கு உள்ளது.

இதைத் தவிர, அகிலேஷ் யாதவ் மற்றும் முலாய மின் சகோதரர் சிவ்பால் யாதவ் இடையேயும் மோதல் போக்கு உள்ளது.ராம்நாத் கோவிந்த், உ.பி., மண்ணின் மைந்தர் என்று முலாயம் கூறியுள்ளார்.
அதேபோல், முதல்வர் யோகி ஆதித்யநாத்தை, சிவ்பால் யாதவ் சமீபத்தில் சந்தித்துள்ளார். இதனால், முலாயம் மற்றும் சிவ்பால் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்களும், எம்.பி.,க்களும், ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவாக ஓட்டளிப்பர் என, எதிர்பார்க்கிறோம்.

முன்னாள் முதல்வர் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியிலும் பிளவு ஏற்பட்டுள்ளது. அங்கிருந்தும், சில ஓட்டுகள் ராம்நாத் கோவிந்துக்கு கிடைக்கும். சமாஜ்வாதி கட்சிக்கு, 54 எம்.எல்.ஏ.,க் கள், ஐந்து லோக்சபா மற்றும், 18 ராஜ்யசபா, எம்.பி.,க்கள் உள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சிக்கு, 19 எம்.எல்.ஏ.,க்களும், ஆறு ராஜ்யசபா எம்.பி.,க்களும் உள்ளனர். உ.பி.,யிலும், மத்தியிலும் பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளதால், எதிர்க்கட்சியினரின் ஓட்டுகளும் கிடைக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

விருப்பத்துக்கு ஏற்ப ஓட்டு


பீஹாரில், எதிர்க்கட்சி வலிமையாக இருந்தாலும், ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவரும், முதல்வருமான நிதிஷ் குமார், ராம்நாத் கோவிந்தை ஆதரித்துஉள்ளார். அதனால், அங்குள்ள கூட்டணி அரசில் இடம்பெற்றுள்ள லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சியின் சிலரின் ஆதரவு, ராம்நாத் கோவிந்துக்கு கிடைக்கும் என, எதிர்பார்க்கிறோம்.

யாருக்கு ஓட்டளிக்க வேண்டும் என்று, கட்சி கொறடா உத்தரவிட முடியாது என்பதால், அவரவர் தங்களுடைய விருப்பத்துக்கு ஏற்ப ஓட்டளிக்கலாம். அதனால், ஏற்கனவே பெரும்பான்மை பலம் கொண்டுள்ள ராம்நாத் கோவிந்துக்கு எதிர்க்கட்சி களின் ஓட்டுகளும் கிடைக்கும் என, எதிர்பார்க்கி றோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஜனாதிபதி வேட்பாளர்கள் தெலுங்கானாவில் பிரசாரம்


ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும், பா.ஜ., வேட் பாளர் ராம்நாத் கோவிந்தும், காங்கிரஸ் வேட்பாளர் மீரா குமாரும், தெலுங்கானா மாநிலத்தில் ஆதரவு

Advertisement

திரட்ட உள்ளனர். ஜனாதிபதி தேர்தல், ஜூலை 17ல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில், ராம்நாத் கோவிந்த் போட்டியிடுகிறார்.

காங்., மற்றும் எதிர்க்கட்சிகள் சார்பில், லோக்சபா முன்னாள் சபாநாயகர், மீரா குமார் போட்டியிடுகிறார். ஜனாதிபதியை, எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதால், இருவரும், ஒவ்வொரு மாநிலத்திற்கும் சென்று, ஆதரவு திரட்டி வருகின்றனர்.

இருவரும், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்கனவே ஆதரவு திரட்டியுள்ளனர். தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்திற்கு, இருவரும் வருகை தருகின்றனர்.

காங்கிரஸ் வேட்பாளர் மீரா குமார், இன்று ஐதராபாத்தில், காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் மற்றும் எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்களை சந்தித்து ஓட்டு சேகரிக்கிறார்.
அதேசமயம், தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங் கானா ராஷ்ட்ரீய சமிதி, பா.ஜ., வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

ராம்நாத் கோவிந்த், நாளை, ஐதராபாத்தில், முதல்வர் சந்திரசேகர ராவ் உள்ளிட்ட அக்கட்சி மூத்த தலைவர்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க் கள் ஆகியோரை சந்தித்து, ராம்நாத் கோவிந்த் ஆதரவு திரட்டுகிறார்.
தொடர்ந்து, பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி கட்சியான தெலுங்குதேசம் கட்சி, எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் ஆகியோரிடம் ஆதரவு கோருகிறார்.


Advertisement

வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஈரோடுசிவா - erode ,இந்தியா
03-ஜூலை-201721:19:13 IST Report Abuse

 ஈரோடுசிவாதனிபட்ட முறையில் பார்த்தால்... மீரா குறை சொல்ல முடியாதவர் தான்...ஆனால் ., அவர் ஏற்றிருக்கும் தலைமைதான் வில்லங்கமானது... எனவே , மதிப்பிருக்கிறதோ இல்லையோ...ராம்நாத்திற்கு தான் என்னுடைய வாக்கு...

Rate this:
Jaya Prakash - Medan,இந்தோனேசியா
03-ஜூலை-201723:22:49 IST Report Abuse

Jaya Prakash" மதிப்பிருக்கிறதோ இல்லையோ...ராம்நாத்திற்கு தான் என்னுடைய வாக்கு " அது சரி அப்பா..... உன்னுடைய பெயரில் வாக்கே இல்லேயே... ஒரு வேலை கள்ள ஓட்டோ..... (அரசியல் அல்ல ஒரு காமெடிக்குதான்)...

Rate this:
Ramesh Kumar - coimbatore,இந்தியா
03-ஜூலை-201719:59:38 IST Report Abuse

Ramesh Kumarஇது வரை நடந்த ஜனாதிபதி தேர்தல்களில் V .V . கிரி (1969 முதல் 1974 வரை இந்திய ஜனாதிபதியாக பதவி வகித்தவர்....சுயேட்சையாக நின்று வெற்றி பெற்றவர். ஸ்தாபன காங்கிரஸ் வேட்பாளரான நீலம் சஞ்சீவ ரெட்டி அவர்களுக்கு போட்டியாக இந்திரா இவருக்கு ஆதரவு அளித்தார்) அவர்களை தவிர வெற்றிபெற்ற மற்றவர்களெல்லாம் மத்தியில் ஆளும்கட்சி யாரோ அவர்களின் வேட்பாளர்கள் தான்...இந்த தேர்தலிலும் இது தான் நடக்கும்....அடுத்த முறை காங்கிரஸ் கைவசம் வரலாம்....

Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
03-ஜூலை-201719:58:58 IST Report Abuse

Malick Rajaசரி வெற்றிபெறுவவர் வரட்டுமே .. ரப்பர் ஸ்டம்ப்க்கு இவ்வளவு தேய்வை இருக்காதே ... ஜனாதிபதி முதல்குடிமகன் அதிகாரத்தில் கடை நிலை ஊழியருக்கு கீழ்தான் ...

Rate this:
மேலும் 23 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X