அ.தி.மு.க., பிரிவால் அதிகாரிகள் காட்டில் மழை; உளவுத்துறை எச்சரிக்கையை புறக்கணிக்கும் அவலம் Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
அ.தி.மு.க., பிரிவால் அதிகாரிகள் காட்டில் மழை
உளவுத்துறை எச்சரிக்கை புறக்கணிக்கும் அவலம்

அ.தி.மு.க., பல அணிகளாக பிரிந்து கிடப்பதை சாதகமாக்கி கொள்ளும் அதிகாரிகள், இஷ்டம் போல் செயல்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக, தமிழக உளவுத்துறை போலீசாரின் அறிக்கைகள் புறக்கணிக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.

 அ.தி.மு.க.,பிரிவால்,அதிகாரிகள்,காட்டில்,மழை,உளவுத்துறை எச்சரிக்கை, அவலம்


மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில், முக்கிய முடிவுகள், கட்சி, அதிகாரிகள் களையெடுப்பு போன்றவற்றை, உளவுத்துறையின் அறிக்கையின்படியே, எடுப்பது வழக்கம். அவரது மறைவுக்கு பின், முதல்வரான பழனிசாமி ஆட்சியில், உளவுத்துறைக்கான முக்கியத்துவம் குறைந்து விட்டது.

இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் போலீஸ் உள்ளிட்ட அதிகாரிகள்,

தங்களின் இஷ்டம் போல் ஆட்டம் போட்டு வருகின்றனர்.உளவுத்துறை, டி.எஸ்.பி., ஒருவர் கூறியதாவது:

ஜெ., உயிருடன் இருந்த வரை, உளவுத்துறை யின் அறிக்கைக்கு முக்கியத்துவம் அளிக்கப் பட்டது. அவரின் மறைவுக்கு பின் உளவுத் துறையை, ஆட்சியாளர்கள் ஒரு பொருட்டாகவே கருதுவது இல்லை.
தமிழக அரசு துறைகளில், மேல்மட்ட அதிகாரிகள் முதல், மாவட்ட அதிகாரி கள் வரை, இஷ்டம் போல், லஞ்சம், மாமூல், விதி மீறல் போன்றவற்றுக்கு துணை போகின்றனர். அ.தி.மு.க., வினர், பல அணிகளாக பிரிந்து கிடப்பது, அவர்களுக்கு சாதகமாகி விட்டது.

உதாரணமாக, தர்மபுரி மாவட்டத்தில் கள்ளச் சாராயம், போலி மது விற்பனையால், உயிர் பலிக்கு வாய்ப்புள்ளதாக அறிக்கை அனுப்பப்பட்டது. ஆனால், அதன் மீது நடவடிக்கை இல்லாதால், நான்கு பேர் உயிரிழந்தனர்.
சேலத்தில், குட்கா லாரி கடத்தப்பட்ட சம்பவத்தில், உயர் அதிகாரிகளின் தொடர்பு குறித்துஅறிக்கை அளித்த போதும், நடவடிக்கை இல்லாததால், அதிகாரிகளை ரவுடிகள் வளைத்து போட்டுள்ளனர்.

இருந்தும், உளவுத் துறையின் சார்பில், அன்றாடம் அளிக்கப்படும் அறிக்கைகள் மீது, நடவடிக்கை

Advertisement

அல்லது முடிவு எடுப்பதில் தொய்வு ஏற்படுவதால், ஆங்காங்கே சட்டம்,ஒழுங்கு - பிரச்னை, அத்து மீறல், குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
டாஸ்மாக் கடை, பாலில் கலப்படம், மணல் குவாரி, லாட்டரி போன்றவை குறித்து, அரசுக்கு முன்கூட்டியே அறிக்கை அளித்தாலும், சம்பந் தப்பட்ட அதிகாரிகளுக்கே அந்த அறிக்கை திரும்பி வருவது, பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.

மொத்தத்தில், உளவுத்துறையின் அறிக்கை புறக்கணிக்கப்படுவது, அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுவது மட்டுமின்றி, மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அம்பி ஐயர் - புதுக்கோட்டை,இந்தியா
03-ஜூலை-201721:37:38 IST Report Abuse

அம்பி ஐயர்காவல் துறையில் மட்டும் தானா.... உள்ளாட்சி அமைப்புகளில் கொள்ளையோ கொள்ளை..... எப்படியும் சின்னம் வரும் வரைக்கும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை.... அதுவரை அதிகாரிகள் முதல் கடை நிலை ஊழியர் வரை.... யோகம் தான்..... அகப்பட்டதைச் சுருட்ட வேண்டியதுதான்....

Rate this:
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
03-ஜூலை-201721:10:47 IST Report Abuse

SIVA. THIYAGARAJANஇதெல்லாம்கருத்தில் கொண்டுதான் அம்மா அவர்கள் கடை திறந்தார்கள் . உளவு காக்கிக்கு மதிப்பு தந்து மதித்தார்கள். அம்மா இருந்தால் இப்படி இப்பெணக்ள சாராயகடையை நொறுக்குவார்களா>>>??

Rate this:
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
03-ஜூலை-201721:08:57 IST Report Abuse

SIVA. THIYAGARAJANடாஸ் மார்க் கடையை உடைக்கும் அழிக்கும் பெணகள்>>> இப்படி கள்ள சாராயம் போலி மது விற்பனையில் மாண்ட வர்களுக்கு இம்மாதர்கள் என்ன பதில் சொல்கிறார்கள். அன்பு மணி என்ன ரெமிடி சொல்ப்போகிறார் .அய்யோ பாவம்.>>>

Rate this:
மேலும் 14 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X