சும்மா இருந்து சம்பளம் வாங்கும் 5,000 ஆசிரியர்களை மாற்ற முடிவு Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
சும்மா இருந்து சம்பளம் வாங்கும்
5,000 ஆசிரியர்களை மாற்ற முடிவு

தென் மாவட்ட அரசு பள்ளிகளில் உபரியாக உள்ள, 5,000 பட்டதாரி ஆசிரியர்களை, வட மாவட்டங்களுக்கு மாற்ற, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

சும்மா,இருந்து,சம்பளம்,வாங்கும்,5,000 ஆசிரியர்களை,மாற்ற, முடிவு

தமிழகத்தில், ஆண்டுதோறும் மே மாதம் நடத்தப்படும் கவுன்சிலிங் மூலம், அரசு பள்ளி ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்படுவர். ஆனால், 2011க்கு பின், பள்ளிகள் திறந்த பின், ஜூலையில், இந்த கவுன்சிலிங் நடத்தப்பட்டது.
இதனால், பாதி பாடங்களை ஒரு ஆசிரியரும், மீதி பாடத்தை மற்றொரு

ஆசிரியரும் நடத்தும் நிலை ஏற்பட்டது; மாணவர்களுக்கு கற்பித்தலில் சிக்கல் ஏற்பட்டது.
இதற்கு தீர்வு காண, இந்தாண்டு, பள்ளிகள் திறக்கும் முன், மே மாதமேஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப் பட்டது. இதில், 10 ஆயிரம் பேர் வரை, இட மாறுதல் பெற்றனர்.
இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட மாவட்டங் களிலும், வேலுார், கிருஷ்ணகிரி, தர்மபுரி, அரியலுார், பெரம்பலுார் போன்ற மாவட் டங்களிலும், போதிய மாணவர்கள் இருந்தும், பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாகஉள்ளன.

அதேநேரத்தில், தென் மாவட்டங்களில், 5,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உபரியாக உள்ளதாக, பள்ளி கல்விதுறை கண்டறிந்துள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம், பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது.
பள்ளிகளில், தற்போது மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது; ஆக., 31க்குள், மாணவர்

Advertisement

சேர்க்கையை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, மாணவர்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு, அவர்களின் விகிதத்தை விட அதிகமாக உள்ள உபரி ஆசிரியர்களை, வட மாவட்டங்களுக்கு மாற்ற, பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.


- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sriramulu Narasuchettiar - cuddalore,இந்தியா
06-ஜூலை-201716:27:01 IST Report Abuse

Sriramulu Narasuchettiarஇதையெல்லாம் மே மாதத்தில் செய்து இருந்தால் நல்லது. அப்படி ஒரு வழக்கத்தை கடைப்பிடித்தால் அரசு பள்ளிகளுக்கு மவுசு கூடும். ஆனால் அரசியல்வாதிகள் செய்யவிடமாட்டார்கள்

Rate this:
Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா
05-ஜூலை-201716:29:04 IST Report Abuse

Barathanசொந்த ஊர்களில் அல்லது அருகாமையில் பனி செய்யும் ஆசிரியர்கள் அனைவரையும் சுமார் 300km க்கு அப்பால் உள்ள பள்ளிகளுக்கு மாற்றம் செய்ய வேண்டும்.

Rate this:
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
04-ஜூலை-201700:05:23 IST Report Abuse

Rajendra Bupathiஇப்பதான் கலந்தாய்வுல? லட்ச கணக்குல குடுத்துட்டு அவனவன் சொந்த ஊரு பக்கம் போயி இருக்கான்? இப்ப மறுபடியுமா? நடக்கட்டும் நடக்கட்டும்? வசூல் நல்லா நடக்கட்டும்?

Rate this:
மேலும் 15 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X