எம்.பி., அலுவலக வளாகத்தில் பா.ம.க., செயல்வீரர்கள் கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

எம்.பி., அலுவலக வளாகத்தில் பா.ம.க., செயல்வீரர்கள் கூட்டம்

Added : ஜூலை 03, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தர்மபுரி: தர்மபுரி எம்.பி., அன்பு மணி அலுவலக வளாகத்தில், தர்மபுரி மாவட்ட பா.ம.க., செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடந்தது தர்மபுரி எம்.பி., அன்பு மணிக்கு, அரசு சார்பாக, நீதிமன்ற வளாகத்தில் அலுவலகம் ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு நேற்று, தர்மபுரி மாவட்ட பா.ம.க., செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் (மே) சண்முகம் தலைமை வகித்தார். கூட்டத்தில் மாநில துணை பொதுச்செயலாளர் சாந்தமூர்த்தி பேசியதாவது: தர்மபுரி மாவட்ட வளர்ச்சிக்கு பாடுபட்டதோடு, தங்களது சொந்த நிலத்தை நகர வளர்ச்சிக்கு வழங்கிய ராஜகோபால் கவுண்டர், தியாகி தீர்த்தகிரி முதலியார் ஆகியோரை பெருமைபடுத்தும் விதமாக, தர்மபுரி பஸ் ஸ்டாண்ட் நுழைவாயிலில், இருவரின் முழு உருவ சிலையை மாவட்ட நிர்வாகம் நிறுவ வேண்டும். மாவட்ட நிர்வாகம் காலம் தாழ்த்தினால், பா.ம.க., சார்பாக, சிலை அமைக்கப்படும். ஏரியில், நான்கு பேர் மது அருந்தி இறந்தனர். இது போன்ற வேதனையான சம்பவம் தொடராமல் இருக்க, தமிழக அரசு மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X