எல்லையை தாண்டிய மணல் கொள்ளை: அதிகாரிகளின் அலட்சியமான நடவடிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

எல்லையை தாண்டிய மணல் கொள்ளை: அதிகாரிகளின் அலட்சியமான நடவடிக்கை

Added : ஜூலை 03, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ப.வேலூர்: ப.வேலூர் அருகே, நன்செய்இடையாறு காவிரி ஆற்றில் அனுமதியின்றி மணல் ஏற்றிச்சென்ற, 50க்கும் மேற்பட்ட மாட்டுவண்டிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.
பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு, ஆற்றுப்பாதுகாப்பு திருச்சி கோட்டம் மூலம் கரூர் மாவட்டம், நன்செய் தோட்டக்குறிச்சி காவிரியாற்றில், மாட்டு வண்டிகள் மூலம் மணல் எடுக்க அனுமதி அளித்துள்ளது. அதன்படி அப்பகுதியினர் மாட்டு வண்டிகளில் மணல் எடுத்துச்செல்கின்றனர். அதிகளவில் மணல் அள்ளியதன் காரணமாக அப்பகுதியில் மணல் குறைவாக இருப்பதால், மறு கரையான நாமக்கல் மாவட்டம் ப.வேலூர் அருகே உள்ள நன்செய் இடையாறு காவிரியாற்றில், தோட்டக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த, 20க்கும் மேற்பட்டவர்கள் மணல் அள்ள வந்த மாட்டு வண்டிகளை சிறை பிடித்தனர். அதேபோல், நேற்று முன்தினம் காவிரியாற்றில் மணல் எடுப்பதற்காக நன்செய் தோட்டக்குறிச்சியில் அனுமதி சீட்டு பெற்று, எல்லை மீறி நன்செய் இடையாறு காவிரியாற்றில் மணல் எடுப்பதற்காக வந்த, 50க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளை, நன்செய் இடையாறு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தடுத்து நிறுத்தி ஈடுபட்டனர். தகவலறிந்த ப.வேலூர் தாசில்தார் விஜயலட்சுமி மற்றும் போலீசார், மாட்டு வண்டி உரிமையாளர்களை எச்சரித்து அனுப்பினர். இருந்தும், கடுமையான நடவடிக்கை இல்லாததால், மணல் கொள்ளை நடப்பது சர்வ சாதாரணமாகிவிட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X