விளம்பரங்களில் ஜெயலலிதா படம் அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
விளம்பரங்களில் ஜெயலலிதா படம்
அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை, அரசு விளம்பரங்களில் ஜெயலலிதாவின் புகைப்படத்தை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட மனுவுக்கு மூன்று வாரங்களில் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐகோர்ட்,High court  விளம்பரம்,Advertisement, ஜெயலலிதா, Jayalalitha,சென்னை,Chennai, தமிழக அரசு,Tamil Nadu government டிராபிக்' ராமசாமி,Traffic Ramasamy, மறைந்த முதல்வர் ஜெயலலிதா,late Chief Minister Jayalalithaa, சொத்து குவிப்பு,property accumulation, குற்றவாளி,culprit,   நீதிபதி இந்திரா பானர்ஜி,Judge Indira Banerjee, நீதிபதி எம்.சுந்தர்,Justice M Sundar,

தவறாக பயன்படுத்தக் கூடாது.


சென்னையை சேர்ந்த 'டிராபிக்' ராமசாமி தாக்கல் செய்த மனு:அரசின் திட்டங்கள், சாதனைகள் குறித்து பத்திரிகைகளில் விளம்பரங்கள் வெளியிடப்படுகின்றன. அதில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படம் இடம்பெறுகிறது. அ.தி.மு.க.,வினரைப் பொறுத்தவரை சொந்த செலவில் அவர்கள் கட்சி தலைவியின் புகைப்படத்தை போட்டு கொள்ளலாம்.

அதேபோல அதிகாரிகளும் சொந்த செலவில் ஜெயலலிதாவின் புகைப்படத்தை பயன்படுத்தலாம். ஆனால் பொது மக்களின் பணத்தை தவறாகபயன்படுத்தக் கூடாது.

குற்றவாளியின் படம்சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் குற்றம் பற்றி தெளிவாக கூறப்பட்டுள்ளது. ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரின் புகைப்படத்தை பயன்படுத்தி பொது மக்களின் பணத்தில் அரசு விளம்பரங்கள் வெளியிடப்படுகின்றன. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் ஒரு குற்றவாளியின் புகைப்படத்தை அரசு விளம்பரங்களில் பயன்படுத்துவதில்லை. அரசு அதிகாரிகளுக்கு இதுபற்றி தெரியும்என்றாலும் அரசியல்
வாதிகளின் நிர்ப்பந்தத்தால் இவ்வாறு செய்கின்றனர்.இது ஒரு தவறான முன்னுதாரணமாகி விடும். எனவே

Advertisement

துவக்கத்திலேயே தடுக்க வேண்டும். இதுகுறித்து அரசுக்கு மனு அனுப்பினேன்; எந்த நடவடிக்கையும் இல்லை. என் மனு மீது நடவடிக்கை எடுக்கவும் பொது மக்கள் பணத்தை தவறாக பயன்படுத்துவதை தடுக்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி நீதிபதி எம்.சுந்தர் அடங்கிய 'முதல் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு மூன்று வாரங்களில் அரசு பதிலளிக்கும்படியும் அதற்கு மனுதாரர் தரப்பில் இரண்டு வாரங்களில் பதிலளிக்கவும் உத்தரவிட்டு விசாரணையை ஆக., 28க்கு முதல் பெஞ்ச் தள்ளிவைத்தது.


Advertisement

வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
04-ஜூலை-201721:03:00 IST Report Abuse

அப்பாவிஅரசு அலுவலகங்களில் ஆண்களுக்கு கையிலும், பெண்களுக்கு நெத்தியிலும் ஜெ.யின் படத்தை பச்சைகுத்தி வுடச்சொல்லுங்கள். அப்பதான் மாகளின் நிரந்தர முதல்வராக அம்மா நிலைப்பார்...இவிங்க ஆட்டையப் போடுவாங்க. முதல் கட்டமா அதிமுக தலைவர்கள் இதைச் செய்யலாம்.

Rate this:
sattanathan - Rijeka,செக் குடியரசு
04-ஜூலை-201716:42:37 IST Report Abuse

sattanathanஅரசு அலுவலகங்களில் தான் வைக்க வேண்டும் என்றால், காவல் நிலையத்தில் குற்றவாளிகள் பலகையில் ஒட்டி வைக்கலாம்.

Rate this:
Nancy - London,யுனைடெட் கிங்டம்
04-ஜூலை-201720:08:10 IST Report Abuse

Nancyசூப்பர்...

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
04-ஜூலை-201716:25:15 IST Report Abuse

Endrum Indianசிகரெட் பாக்கெட்டில் "Cigarette Smoking is Injurious to Health" இருப்பது போல ஜெயலலிதாவின் போட்டோ அல்லது அவர் பெயருக்கு பக்கத்தில் - "குற்றவாளி என்று சுப்ரீம் கோர்ட்டால் அறிவிக்கப்பட்டவர்" என்ற பதமும் அதனருகில் சிகப்பு எழுத்துக்களில் இருக்கவேண்டும். அப்புறம் தான் அதை விளம்பரத்தில் கொடுக்கவேண்டும் என்று சொல்லவேண்டும் இந்த கோர்ட் இப்போது.

Rate this:
Nancy - London,யுனைடெட் கிங்டம்
04-ஜூலை-201720:10:15 IST Report Abuse

Nancyரயில் பஸ் மற்றும் காவல் நிலையத்தில் குற்றவாளிகள் பலகையில் ஒட்டி வைக்க வேண்டும் , இதை பார்த்து மக்கள் திருந்த ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும்...

Rate this:
மேலும் 15 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X