மூவருக்கு எம்.எல்.ஏ., பதவி: புதுச்சேரியில் நுழைகிறது பா.ஜ.,| Dinamalar

மூவருக்கு எம்.எல்.ஏ., பதவி: புதுச்சேரியில் நுழைகிறது பா.ஜ.,

Added : ஜூலை 03, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

புதுச்சேரி: புதுச்சேரியில் பா.ஜ.,வை சேர்ந்தவர்கள் நியமன எம்.எல்.ஏ.,க்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி சட்டசபைக்கு பொதுத் தேர்தல் மூலம் 30 எம்.எல்.ஏ.,க்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இது தவிர மூன்று பேரை நியமன, எம்.எல்.ஏ.,வாக நியமிக்க முடியும். அதற்கான பட்டியலை கவர்னருக்கு, மாநில அரசு பரிந்துரை செய்யும். அதை, மத்திய உள் துறை அமைச்சகத்திற்கு கவர்னர் அனுப்பி, ஒப்புதல் பெறுவார். காலம் காலமாக, இந்த நடைமுறையே மரபாக பின்பற்றப்பட்டு வருகிறது.
புதுச்சேரியில், முதல்வர் நாராயணசாமி தலைமையில், காங்., அரசு பொறுப்பேற்று ஓராண்டு ஆகியும், நியமன எம்.எல்.ஏ., பதவி நிரப்பப்படாமல் இருந்து வந்தது. கவர்னருக்கும், ஆட்சியாளர்களுக்கும் மோதல் காரணமாக இந்த நிலை நீடித்தது.
இந்நிலையில், காங்., கட்சியை சேர்ந்த மூவரை நியமன, எம்.எல்.ஏ.வாக நியமிக்க, ஆளுங்கட்சி தயாராகி வந்த நிலையில், பா.ஜ., பிரமுகர்களை நியமன, எம்.எல்.ஏ.,களாக்க கவர்னர் சிபாரிசு செய்துள்ளதாக தகவல் பரவியது.
'நியமன, எம்.எல்.ஏ., விவகாரத்தில், தன்னிச்சையாக மத்திய அரசுக்கு பரிந்துரைக்க கவர்னருக்கு அதிகாரமில்லை; நியமன எம்.எல்.ஏ.,க்களை கவர்னர் நியமிக்க இடைக்கால தடை விதிக்க வேண்டும' என, சென்னை ஐகோர்ட்டில், கடந்த 27ல், காங்., எம்.எல்.ஏ., லட்சுமிநாராயணன் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு, வரும் 5ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.
இந்நிலையில் புதுச்சேரி மாநில பா.ஜ., தலைவர் சாமிநாதன், மாநில பா.ஜ., பொருளாளர் சங்கர், கல்வியாளர் செல்வகணபதி ஆகிய மூவரை நியமன
எம்.எல்.ஏ.,க்களாக நியமித்து
மத்திய உள்துறை அமைச்சகம்
உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆளும் காங்., கட்சியினரிடம் கலந்தாலோசிக்காமல், நியமன எம்.எல்.ஏ.,க்களாக நியமிக்கப்பட்டது, புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி
உள்ளது.
இதுதொடர்பாக, அமைச்சரவை கூட்டம் நடத்தி, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முதல்வர், நாராயணசாமி ஆலோசனை நடத்தினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
04-ஜூலை-201712:18:43 IST Report Abuse
Pasupathi Subbian நாராயணசாமியை பொருத்தமட்டும் அவர் சார்ந்த காங்கிரசின் கொள்கை , அனைவருக்கும் பதவி, அதை அவர் அமுல்படுத்த முயலுகிறார். ஆனால் மத்திய அரசு பி ஜெ பி அது தனது ஆளுமையை புதுச்சேரி மாநிலத்தில் நுழைக்க திட்டமிடுகிறது. யார் வெற்றிபெறுவார்கள் என்பது போக போக தெரியும். தற்பொழுது இந்த பிரச்சனை நீதிமன்றத்தில் உள்ளபடியால், இதில் நாம் கருத்துக்கூறுவது தவறு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X