தமிழகம் முழுவதும் 1,000 தியேட்டர்கள் மூடல்; கேளிக்கை வரியை நீக்கக்கோரி நடந்தது Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தமிழகம் முழுவதும் 1,000 தியேட்டர்கள் மூடல்
கேளிக்கை வரியை நீக்கக்கோரி நடந்தது

தமிழக அரசின் கேளிக்கை வரியை நீக்கக்கோரி, மாநிலம் முழுவதும் நேற்று, 1,000க்கும் மேற்பட்ட சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன.நாடு முழுவதும் நடைமுறைக்கு வந்துள்ள ஜி.எஸ்.டி.,யில், சினிமா டிக்கெட்டுக்கு, 28 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இது தவிர, தமிழக அரசின் கேளிக்கை வரி என, உள்ளாட்சிகள் மூலம், 30 சதவீத வரி விதிக்கப்படுகிறது.

தமிழகத்தில், 1000, தியேட்டர்கள், மூடல்

நாடு முழுவதும், ஒரு முனை வரி நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், தியேட்டர் உரிமையாளர்கள், 58 சதவீத வரி செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.அதனால், 'கேளிக்கை வரியை, தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்' என வலியுறுத்தி, தியேட்டர் உரிமையாளர்கள் நேற்று முதல், காலவரையற்ற ஸ்டிரைக் துவக்கினர்.
தமிழகம் முழுவதும், 1,000க்கும் மேற்பட்ட தியேட்டர்கள் மூடப்பட்டன. படக்காட்சிகள் ரத்தானதால், பொது மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். சினிமா சார்ந்த, 10 லட்சம் பேர் வேலையின்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து, தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர், அபிராமி ராமநாதன் கூறுகையில், ''சட்டத்தை மீறி, நாங்கள் எந்த செயலிலும் ஈடுபடவில்லை; இயலாமையால் தியேட்டர்களை மூடியுள்ளோம்.

முதல்வரிடம் பேசி


''இதை, நிதி அமைச்சரிடமும் தெளிவுப்படுத்தி உள்ளோம். விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது; அதுவரை தியேட்டர்களை திறக்க மாட்டோம்,'' என்றார்.


நிதி அமைச்சர் ஜெயகுமார் கூறுகையில், ''திரைப்படங்களுக்கு வழக்கமாக விதிக்கும் வரி தான் விதிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், தியேட்டர் உரிமையாளர்களின் கோரிக்கை குறித்து, முதல்வரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
தியேட்டர் உரிமையாளர்கள் சங்கச் செயலர், ஸ்ரீதர் கூறுகையில், ''எங்களின் நியாயமான கோரிக்கைக்கு அரசு நிச்சயம் உதவும். சினிமா என்றாலே, அது தியேட்டர் தான். இதை
வீட்டிலேயே பார்க்கும் திட்டமெல்லாம், பயன் அளிக்காது,'' என்றார்.
இதற்கிடையில், தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர்,விஷால், நடிகர் சங்கத் தலைவர், நாசர், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர், சுரேஷ், தமிழ்நாடு திரைப்பட வர்த்தக சபை தலைவர், அபிராமி ராமநாதன் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள், நேற்று முதல்வர் பழனிசாமியை, தலைமைச் செயலகத்தில் சந்தித்து, கேளிக்கை வரியை ரத்து செய்யும்படி வலியுறுத்தினர்.

15 சதவீதம் சம்பளம் குறைப்பு


கவிஞர் வைரமுத்துவின் மகனான, சினிமா பாடலாசிரியர் மதன் கார்க்கி, 'கேளிக்கை வரியில் மாற்றம் வரும் வரை, சம்பளத்தில், 15 சதவீதம் குறைத்துக் கொள்கிறேன்' என, அறிவித்துள்ளார். 'மதன் கார்க்கியை பின்பற்றி, நடிகர்களும், இயக்குனர்களும் சம்பளத்தைக் குறைத்தால், திரைத்துறைக்கு விரைவில், புதிய விடியல் பிறக்கும்' என, திரைத்துறையினர் கூறியுள்ளனர்.

சினிமா மீது விதிக்கப்பட்ட வரியை வரவேற்கிறேன். 50 ரூபாய்க்கு விற்ற டிக்கெட்டை, இன்று, 130 ரூபாய்க்கு விற்கின்றனர். 25 ரூபாய்க்கு விற்க வேண்டிய, பாப்கானை, 100 ரூபாய்க்கு விற்கின்றனர்; பார்க்கிங் கட்டணமும் அதிகம். வரியைக் குறைத்தால், இவற்றை குறைக்கப் போவதில்லை. எவ்வளவு டிக்கெட் விற்றாலும், தியேட்டரில் படத்தை பார்க்க விரும்புவோர் நிச்சயம் பார்ப்பர்.தியேட்டர் உரிமையாளர்கள் கவலைப்படத் தேவையில்லை.-முகமது தாவூத், 39,ஐ.டி., ஊழியர், பரணிப்புதுார்

Advertisement


'போராட்டம் தேவையற்றது'


'தமிழக அரசின் கேளிக்கை வரியை ரத்து செய்யக்கோரி, தியேட்டர் உரிமையாளர்கள் நடத்தும் ஸ்டிரைக் தேவையற்றது. தியேட்டர்களில் பல வகையில் நடக்கும் கட்டணக் கொள்ளைக்கு முடிவு கட்ட வேண்டும்' என, பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தியேட்டர் உரிமையாளர்கள் போராட்டத்தில் நியாயம் இல்லை. 10 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் தொழில் செய்பவர்களே வரி செலுத்தும் போது, கோடிக்கணக்கில் பணம் புரளும் இவர்கள் வரி செலுத்துவதே சரியான முறை.
பொதுவாக, திரைத்துறையினர் முறையாக வரி கட்டுவதில்லை. மேலும், தரமான படங்கள் ஏதும் வருவதில்லை; ஆபாசம், வன்முறையை திணிக்கும் படங்களே அதிகம் வெளியாகின்றன. -விக்னேஷ்வரி பூபாலன், 28, குடும்பத் தலைவி, திருவொற்றியூர்

ஜி.எஸ்.டி.,யால் மக்களுக்கான அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏறியுள்ளது. அத்துடன், மக்களின் பொழுதுபோக்கான சினிமா டிக்கெட்டின் விலையையும் ஏற்றினால், பாதிப்பு அதிகமாக இருக்கும்.-ஆர்.சரவணன், 47, புழல்

சினிமாவுக்கு விதிக்கப்பட்டிருக்கும் அதிகப்படியான வரியால், திருட்டு, 'விசிடி' அதிகரிக்கும். நடுத்தர மக்களின் ஒரே பொழுதுபோக்கு சினிமா தான். அதிலும், வரிச் சுமையை ஏற்படுத்துவது தவறு.-ராஜேந்திரபாபு, 42, தனியார் நிறுவன ஊழியர், கொடுங்கையூர்


திருட்டு, 'விசிடி' அதிகரிக்கும் என்பதால், கேளிக்கை வரியை அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். தியேட்டருக்கு மாற்றாக, வீடுகளுக்கே சினிமாவை கொண்டு செல்லும், டி.டி.எச்., வந்தால் வரவேற்போம்.-ஆர்.சங்கர், 47, தனியார் நிறுவன ஊழியர், பாடியநல்லுார்
-நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
KuttiKullaNari - chennai,இந்தியா
07-ஜூலை-201711:36:11 IST Report Abuse

KuttiKullaNariசினிமா தான் ஒரே பொழுது போக்கா இருந்துச்சு ஒரு காலத்துல. இதுனால தான் நாடகங்கள் எல்லாம் அழிஞ்சு போச்சு. இனி அதையாவது வளர்க்கலாம்

Rate this:
Vasanthakumar - Chennai,இந்தியா
04-ஜூலை-201718:28:18 IST Report Abuse

VasanthakumarYou can continue your strike for one month or one year. There is no issue for us. We will download the movies from the Internet.

Rate this:
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
04-ஜூலை-201718:04:42 IST Report Abuse

Rajendra Bupathiகுறைஞ்சது ஒரு மாசமாவது மூடட்டும்? பிறகு பார்க்கலாம் சினிமா துறையின் யோக்கியதையை? சும்மா நாறி போயிடாது?

Rate this:
மேலும் 29 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X