தேர்வு வழிகாட்டல் இல்லை: மாணவர்கள் குழப்பம் Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தேர்வு வழிகாட்டல் இல்லை: மாணவர்கள் குழப்பம்

தமிழகத்தில், பிளஸ் 1 வகுப்புக்கு, பொதுத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் அதற்கான வழிகாட்டல் விதிகள் வெளியிடப்படாததால், ஆசிரியர்களும், மாணவர்களும் குழப்பத்தில் உள்ளனர்.

மாணவர்கள், Students, குழப்பம், Confusion, தேர்வு , Exam,  தமிழகம்,Tamil Nadu,   பொதுத் தேர்வு ,Public Exam,  ஆசிரியர்கள், Teachers, பள்ளிக் கல்வித்துறை ,School Education Department, செய்முறை தேர்வு , Practical Exam,

தமிழக பாடத்திட்டத்தில், பிளஸ் ௧ வகுப்புக்கும், இந்த ஆண்டு முதல் பொதுத் தேர்வு நடத்தப்படும் என, பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
ஒவ்வொரு பாடத்துக்கும், ௨௦௦ மதிப்பெண்ணுக்கு பதில், ௧௦௦ மதிப்பெண்ணுக்கே கேள்விகள் இடம் பெறும்.அதில், செய்முறை தேர்வு உள்ள பாடங்களில், 'தியரி' என்ற, கருத்தியல்

தேர்வுக்கு, 7௦; அகமதிப்பீடு, 10; செய்முறை தேர்வுக்கு, 20மதிப்பெண் தரப்படும். இதில், தேர்ச்சிக்கு, 35மதிப்பெண் எடுக்க வேண்டும்.

கேள்விகள் இடம் பெறுமாஆனால், தேர்வு எப்படி நடத்தப்படும்; வினாத்தாள் முறை என்ன; எந்தெந்த பாடங்களில், எந்த வகை கேள்விகள் இடம் பெறும்; புத்தகத்தில் உள்ள உதாரண கேள்விகள் இடம் பெறுமா என்பது போன்ற வழிகாட்டுதல், இன்னும்வெளியிடப்படவில்லை.
அகமதிப்பீடு மற்றும் செய்முறை தேர்வில், 30 மதிப்பெண் எடுத்து, 'தியரி'யில், ஐந்து மதிப்பெண் எடுத்தால் போதுமா; குறிப்பிட்ட சதவீதம் மதிப்பெண் பெற வேண்டுமா என

Advertisement

தெரியாமல், மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
அதேபோல, மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள, பிளஸ் 1 பாடப் புத்தகத்தில், ௨௦௦ மதிப்பெண்களுக்கு, 'ப்ளூ பிரின்ட்' வழங்கப்பட்டு உள்ளதும், குழப்பத்தை
ஏற்படுத்தி உள்ளது.இது குறித்த, தெளிவான வழிகாட்டல் விதிகளை அரசு வெளியிட வேண்டும் என, ஆசிரியர்கள், மாணவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Kumar - coimbatore,இந்தியா
04-ஜூலை-201707:58:33 IST Report Abuse

Ramesh Kumarஅரசுக்கே சரியான வழிகாட்டுதல் இல்லை.... பின்னே மாணவர்களுக்கு எப்படி வழிகாட்டுவார்கள்.....

Rate this:
Giridharan S - Kancheepuram,இந்தியா
04-ஜூலை-201706:32:03 IST Report Abuse

Giridharan Sஅவசரப்பட்டு அரசு முடிவெடுக்க வேண்டாம். 11 வகுப்பு தேர்வை அடுத்த ஆண்டு முதல் கொண்டு வரட்டும். Proper Planning is must otherwise it will end in a chaos to the learning students.

Rate this:
கைப்புள்ள - nj,இந்தியா
04-ஜூலை-201700:56:44 IST Report Abuse

கைப்புள்ளஆமா அப்படியே என்ன கேள்வி என்றும் சொல்லி விடுங்க, ரொம்ப சவ்கரியமா போய்டும். மக்குகள். ஒரு நாலு காசுக்கு பெறாத உருப்படி அற்ற மாணவர்கள்.

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X