மீராகுமாருடன் போனில் கூட பேச மறுத்த முதல்வர்| Dinamalar

மீராகுமாருடன் போனில் கூட பேச மறுத்த முதல்வர்

Updated : ஜூலை 04, 2017 | Added : ஜூலை 04, 2017 | கருத்துகள் (27)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
மீராகுமார், சந்திரசேகர ராவ், ஜனாதிபதி வேட்பாளர், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி, முதல்வர், ஐ தராபாத்

ஐதராபாத்: காங்., கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் மீராகுமாரை நேரில் பார்ப்பதை தவிர்த்ததுடன், அவருடன் போனில் கூட பேச மறுத்து விட்டார் தெலுங்கானா முதல்வரும், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி தலைவருமான சந்திரசேகர ராவ்.


ராம்நாத்துக்கு ஆதரவு


மீராகுமாருடன் போனில் பேச மறுத்த கே.சி.ஆர்.,

தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி, ஜனாதிபதி தேர்தலில், பா.ஜ., கூட்டணி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இச்சூழ்நிலையில், தனக்கு ஆதரவு தரும்படி கேட்டு, தெலுங்கானா மாநில எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் எம்.பி.,க்களை சந்திக்க கடந்த திங்கட்கிழமை ஐதராபாத் சென்று இருந்தார் மீராகுமார்.
அவரது வருகை குறித்தும், முதல்வர் சந்திரசேகர ராவை சந்திக்க விருப்பம் உள்ளது குறித்தும் முதல்வர் அலுவலகத்திற்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், மீராகுமாரை நேரில் சந்திப்பதை சந்திரசேகர ராவ் தவிர்தது விட்டார்.
இது குறித்து தெலுங்கானா மாநில காங்., தலைவர் உத்தம் குமார் ரெட்டி கூறியதாவது: லோக்சபா சபாநாயகராக மீராகுமார் இருந்த போது தான் தெலுங்கானா மாநில மசோதா கொண்டு வரப்பட்டது. அதற்கு அவர் உதவி புரிந்தார் என்பது முதல்வர் சந்திரசேகர ராவுக்கு தெரியும். இருப்பினும், அவரை நேரில் சந்திக்க மறுத்து விட்டார். இதுதவிர, போனிலாவது பேச வேண்டும் என முதல்வர் அலுவலகத்திற்கு நான் தகவல் தெரிவித்தேன். முதல்வரிடம் கேட்டு விட்டு சொல்கிறோம் என்று கூறிய முதல்வர் அலுவலக ஊழியர்கள் அதன் பிறகு என்னுடன் பேசவேயில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s t rajan - chennai,இந்தியா
06-ஜூலை-201706:26:28 IST Report Abuse
s t rajan நாளை மீரா அசம்பாவிதமாக ஜெயித்து விட்டால் தெலிங்கானவிற்கு வரக்கூடாதென்பாரோ?
Rate this:
Share this comment
Cancel
kowsik Rishi - Chennai,இந்தியா
05-ஜூலை-201716:21:58 IST Report Abuse
kowsik Rishi மீரா குமாரை ஜனாதிபதி வேட்ப்பாளர் என்ற முறையில் தெலுங்கானா முதல்வர் சந்திக்க மறுத்தது மிக சரி தான் இதில் என்ன அநாகரிகம் உள்ளது ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு என்று தீர்மானித்து விட்டு மீரா குமாரை வரவேற்ற உபசரிப்பது தான் அநாகரிகம்
Rate this:
Share this comment
Cancel
Dr Vijaya Choumiyan - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
05-ஜூலை-201700:27:33 IST Report Abuse
Dr Vijaya Choumiyan தன்வினை? அந்த கட்சியறிந்து கொண்டதா? அம்மா அன்னையை பார்க்கவில்லை, பேசக்கூட மறுத்தார், மேடையிலும் தோன்ற மறுத்தார் அவருடன் ஒன்றாக. அன்னையுடன் அம்மா ஒரு செல்ஃபீ எடுத்து கொள்ளவில்லை என்று கூறுகிறாள் என்தோழி. யார் அன்னை யார் அம்மா? அது என்ன வரலாறு?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X