1,224 டாக்டர்கள், 1,010 நர்ஸ்கள் நியமனம் : அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

1,224 டாக்டர்கள், 1,010 நர்ஸ்கள் நியமனம் : அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு

Added : ஜூலை 04, 2017 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

சென்னை: ''தமிழகத்தில், 1,224 டாக்டர்கள், 1,010 செவிலியர்கள் உட்பட, 4,717 மருத்துவ பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவர்,'' என, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
சட்டசபையில், நேற்று சுகாதாரத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து, அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்ட அறிவிப்புகள்:

தமிழக மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலமாக, 1,224 டாக்டர்கள், 600 சிறப்பு உதவி டாக்டர்கள், 1,010 செவிலியர்கள், சித்தா, ஆயுர்வேதா, ஓமியோபதி, யோகா மற்றும் இயற்கை மருத்துவத் துறைகளில், 137 உதவி மருத்துவ அலுவலர்கள்.
மேலும், 33௩ மருந்தாளுனர்கள், 1,234 ஆய்வக உதவியாளர்கள், ௧௭௯ இதய வரைபட டெக்னிசியன்கள், இயன்முறை சிகிச்சையாளர், நுண்கதிர் வீச்சாளர் மற்றும் விழி ஒளி பரிசோதகர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையில், 26 கோடி ரூபாயில், 'டிஜிட்டல்' நுாலகம் அமைக்கப்படும். காசநோய் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டப் பணிகள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள், 141.14 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும். மேலும், '108' ஆம்புலன்ஸ் திட்டத்திற்கு, ஐந்து கோடி ரூபாயில், 50 வாகனங்கள் வாங்கப்படும்.
அனைத்து, மாவட்டங்களிலும், 5.12 கோடி ரூபாயில், நவீன கண் பரிசோதனை மையம் ஏற்படுத்தப்படும். பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை அலுவலகத்தில், மருத்துவத் துறையில் முதன்முறையாக, 24 மணி நேர பேரிடர் மேலாண்மை மையம், 2.1 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.
வேலுார், திருப்பூர், தேனி, விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய, ஐந்து மாவட்டங்களில், மனநல சிறப்புப் பிரிவுகள், 3.34 கோடி ரூபாயில் அமைக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் அறிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karunchilai - vallam,இந்தியா
05-ஜூலை-201715:27:12 IST Report Abuse
karunchilai வசூல் காட்ல மழைதான்
Rate this:
Share this comment
Cancel
rajan - kerala,இந்தியா
05-ஜூலை-201707:55:21 IST Report Abuse
rajan ஆஹா ஆட்டைய போட்டு கேண்டில் கொளுத்தி காசு பார்த்துட்டானடா. எத்தனை வாட்டி தான் ரைடு பண்ணுவீங்கன்னு சவால் வேற உடுறானே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X