பூமிக்கடியில் மின் கம்பி செல்லும் திட்டம் 2 ஆண்டுகளில் முடியும்: அமைச்சர் தகவல்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பூமிக்கடியில் மின் கம்பி செல்லும் திட்டம் 2 ஆண்டுகளில் முடியும்: அமைச்சர் தகவல்

Added : ஜூலை 05, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

சென்னை;''சென்னை மாநகராட்சிமுழுவதும், மின் கம்பி களை, பூமிக்கடியில் கொண்டு செல்லும் திட்டம், இரண்டு ஆண்டுகளுக்குள் முடிக்கப்படும்,'' என, அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.சட்டசபையில், கேள்வி நேரத்தின்போது நடந்த விவாதம்:தி.மு.க., - மா.சுப்பிரமணியன்: சைதாப்பேட்டை, 174வது வார்டு, காமராஜ் நகர், நேரு நகர் பகுதிகளில், மேலே செல்லும், உயரழுத்த மின் கம்பிகளை, பூமிக்கடியில் புதைவடங்களாக மாற்றி அமைக்க, அரசு நடவடிக்கை எடுக்குமா?அமைச்சர் தங்கமணி: பணி நடந்து வருகிறது.
மா.சுப்பிரமணியன்: சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட நகராட்சி, பேரூராட்சிமற்றும் ஊராட்சி பகுதிகளிலும்,மின் கம்பிகளை,பூமிக்கடியில் கொண்டு செல்ல, அரசு நடவடிக்கை எடுக்குமா?அமைச்சர் தங்கமணி: இதற்காக, 2,565 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்குள், சென்னை மாநகராட்சி முழுவதும், மின் கம்பிகள், பூமிக்கடியில் கொண்டு செல்லப்படும்.அ.தி.மு.க., - ரவி: விருகம்பாக்கம், இந்திரா நகரில்,குறுகிய தெருக்கிளில் செல்லும் மின் கம்பிகளை, பூமிக்கடியில் புதைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?அமைச்சர் தங்கமணி: நடவடிக்கை எடுக்கப்படும்.தி.மு.க., - துரை சந்திரசேகரன்: கடலோர மாவட்டங்களில், புயலின்போது மின் கம்பிகள், கம்பங்கள் சேதமடைகின்றன. இதை தவிர்க்க, மின் கம்பிகளை, பூமிக்கடியில் கொண்டு செல்ல வேண்டும். திருவாரூர் போன்ற தேரோடும் வீதிகளிலும், மின் கம்பிகளை பூமிக்கடியில், கொண்டு செல்ல வேண்டும்.
அமைச்சர் தங்கமணி: வேளாங்கண்ணியில் பணி நடந்து வருகிறது. மற்ற இடங்களில் பணி மேற்கொள்ளப்படும்.அ.தி.மு.க., - தங்கதமிழ்செல்வன்: ஆண்டிப்பட்டியில், வனப்பகுதி வழியே செல்லும் மின் கம்பிகளை, பூமிக்கடியில் கொண்டு செல்ல வேண்டும்.அமைச்சர் தங்கமணி: அந்த இடம் மலைப்பகுதி. ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X