உனக்கு மாலைகள் விழ வேண்டும்...: ராஜூ| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

உனக்கு மாலைகள் விழ வேண்டும்...: ராஜூ

Updated : ஜூலை 05, 2017 | Added : ஜூலை 05, 2017 | கருத்துகள் (26)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
உனக்கு மாலைகள் விழ வேண்டும்...: ராஜூ

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர், சபாநாயகர் ஆகியோருக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ சட்டப்பேரவையில் பாடல் பாடி நன்றி தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்க எழுந்தார். அப்போது ‛‛மாபெரும் சபையினில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்… ஒரு மாற்று குறையாத மன்னவன் இவன் என்று போற்றி புழக வேண்டும் …'' என்ற பாடலை பாடி, மதுரையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர், சபாநாயகர் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்தார்.



அப்போது குறுக்கிட்ட தி.மு.க.வினர் கேள்வி நேரத்தின்போது கேள்வி மட்டுமே கேட்க வேண்டும், புகழாரங்கள் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
05-ஜூலை-201721:24:12 IST Report Abuse
Swaminathan Chandramouli எந்த மாதிரியான மாலைகள் விழ வேண்டும் பாட்டா பிராண்டு மாலையா .வீகேசீ பிராண்டா / கான்பூர் லெதர் மாலையா
Rate this:
Share this comment
Cancel
Balaji - Khaithan,குவைத்
05-ஜூலை-201717:45:28 IST Report Abuse
Balaji இவரெல்லாம் நமது மாநிலத்தின் அமைச்சர்
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
05-ஜூலை-201713:30:00 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் நீர் அமைச்சன் பதவியை விட்டா, விட மாட்டே, உம்மை அமைச்சன் பதவியிலிருந்து தூக்கினா என்ன நடக்கும்னு உனக்கே தெரியும். எப்படிப்பட்ட ஈத்தரைன்னு.. நீரெல்லாம் இந்த பாட்டை கேட்கக் கூட தகுதியில்லாதவர்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X