2019ல் ஆட்சிக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது : லாலு| Dinamalar

2019ல் ஆட்சிக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது : லாலு

Added : ஜூலை 05, 2017 | கருத்துகள் (50)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
லாலு பிரசாத், 2019 லோக்சபா தேர்தல், பிரியங்கா, ராகுல், நிதிஷ்குமார்

பாட்னா : பாட்னாவில் தனியார் டிவி சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்த ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத், 2019 லோக்சபா தேர்தல் பிரியங்கா தலைமையில் காங்., எதிர்கொள்ள வேண்டும் என்றார்.
மேலும், மாயாவதி, அகிலேஷ், ராபர்ட் வதேரா, பிரியங்கா, கெஜ்ரிவால், எங்கள் குடும்பம், மம்தா ஒன்றாக இணைந்து கூட்டணி அமைத்தால், நாங்கள் ஆட்சிக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது. நாங்கள் பீகாரில் ஏற்கனவே பலம் பெற்று உள்ளோம். சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் எங்களுடன் வந்து இணைந்தால் உ.பி., பஞ்சாப் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் நாங்கள் ஆட்சியை பிடிப்போம். அகிலேசும், மாயாவதி கூட்டணி வைப்பதற்கு மிக வலுவான வாய்ப்புக்கள் உள்ளது. அவர்கள் மட்டும் ஒன்று சேர்ந்து விட்டால் 2019 தேர்தல் எங்களுடையதாகி விடும் என்றார்.
2019 லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள போகும் கூட்டணி கட்சி தலைவர்களின் பெயர்களில் ராகுலின் பெயரையோ அல்லது நிதிஷ்குமாரின் பெயரையோ லாலு தெரிவிக்கவில்லை. ஜனாதிபதி தேர்தலில் ஏற்கனவே எதிரெதிராக சென்று விட்டதால் விரைவில் கூட்டணியில் இருந்து நிதிசை கழற்றி விட லாலு முடிவு செய்து விட்டதையே இந்த பேட்டி காட்டுவதாக உள்ளது.



2019ம் ஆண்டில் பா.ஜ., கேம் ஓவர்: லாலு கணிப்பு

Advertisement




வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anoop - Los Angeles,யூ.எஸ்.ஏ
06-ஜூலை-201700:32:21 IST Report Abuse
Anoop இது யாரு. .... சொன்னதா? :)
Rate this:
Share this comment
Cancel
X. Rosario Rajkumar - TRICHY,இந்தியா
05-ஜூலை-201723:48:07 IST Report Abuse
X. Rosario Rajkumar காமராஜர் ஆட்சியைத் தாங்க. இல்லேன்னா ஒன்னும் பேசாதீங்க.
Rate this:
Share this comment
Cancel
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
05-ஜூலை-201721:20:02 IST Report Abuse
Swaminathan Chandramouli லாலு நீங்கள் கூடிய சீக்கிரம் சிறை செல்ல போகிறீர்கள் .பிறகு எதற்கு இந்த தெனாவெட்டு பேச்செல்லாம் . உங்களுக்கு எந்த நல்ல நீதியரசர் ஜாமீன் கொடுத்தார் . நீங்கள் சுரண்டிய சொத்தில் அவருக்கு எவ்வளவு பங்கு ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X