ரசிகர்கள் பாசக்காரங்க - சிலிர்க்கும் சிருஷ்டி டாங்கே| Dinamalar

ரசிகர்கள் பாசக்காரங்க - சிலிர்க்கும் சிருஷ்டி டாங்கே

Added : ஜூலை 09, 2017
Advertisement
ரசிகர்கள் பாசக்காரங்க - சிலிர்க்கும் சிருஷ்டி டாங்கே

மண்ணில் உலவும் வெண்ணிலவு... கன்னக்குழியில் உருகும் வண்ணக் கனவு, அந்தி மாலையில் இளசுகளின் மனதை கிளுகிளுக்க வைக்கும் குல்பி ஐஸ் என தர்மதுரை, மேகா, அச்சமின்றி, சரவணன் இருக்க பயமேன் போன்ற தமிழ் சினிமாக்களில் ஹீரோயின்கள் வரிசையில் இடம் பெற்ற நடிகை சிருஷ்டி டாங்கே தினமலர் வாசகர்களுக்காக ஜாலியான பேட்டி...* சினிமா வாய்ப்பு?பிளஸ் 2 வரை படித்துள்ளேன். அப்போதே சினிமா வாய்ப்பு கிடைத்ததால் தொடர்ந்து நடித்து வருகிறேன். சினிமா தேடி வரவில்லை. யதார்த்தமாக அமைந்துவிட்டது.* ஆசை?'சம்திங் கிரியேட்டீவ்'வாக எதையாவது செய்யணும்னு ஆசைங்க. சினிமா வாய்ப்பு இல்லை என்றால் 'இன்டீரியர் டெக்கரேஷன், பேஷன் டிசைனிங்' துறை ரொம்ப பிடிக்கும். அந்தப்பக்கம் போய் இருப்பேன்.* பிடித்த ஊர்?சினிமா படங்கள் சூட்டிங்கிற்காக நிறைய இடங்கள் சுற்றி வந்துள்ளேன். இருப்பினும், எனக்கு மிகவும் பிடித்த ஊர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர்தாங்க. அடிக்கடி அங்கே போவேன்.* ஹீரோ முக்கியத்துவம்?பழைய படங்களில் ஹீரோவுக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். தற்போது ஹீரோயின்களுக்கும் முக்கியத்துவம் தருகின்றனர். அந்த மாதிரியான சினிமா படங்கள் நிறைய வெளிவருகிறது.* மகளிருக்கு அட்வைஸ்?எதைச் செய்தாலும் நல்லா செய்ங்கன்னு சொல்வேன். அட்வைஸ் பண்ற அளவிற்கு நான் ரொம்ப பெரிய ஆள் இல்லை. (சிரிக்கிறார்) நம்புங்க நான் ரொம்ப சின்னப்பொண்ணுங்க.* பிடிச்சவங்க?நடிகை ஜோதிகா எனக்கு பிடித்த ஹீரோயின். நான் தல 'அஜித்' தோட ரசிகை. இருந்தாலும் தனுஷ் நடிப்பும் ரொம்ப பிடிக்கும்.* உங்கள் நடிப்பு...?இதுவரை பத்து படங்கள் நடித்துள்ளேன். 'முப்பரிமாணம்' படத்தில் வித்தியாசமான வேடம். எனக்கு பிடித்த படம் மட்டுமில்லை, அனைவருக்கும் பிடிக்கும் படமும் இதுதான்.* சண்டை போடுவீங்களா?வீட்ல இல்லீங்க. படத்துலனா ஆசை தான். எல்லா கேரக்டர்களும் பண்ணுவேன். குறிப்பாக ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க ஆசை. ஜோதிகா நடித்த 36 வயதினிலே, தற்போது நடிக்கும் மகளிர் மட்டும் போன்ற பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதையாக இருந்தால் நன்றாக இருக்கும்.* உங்கள் ரசிகர்களுக்கு?எங்கே போனாலும் ரசிகர்கள் உற்சாகமாக, அன்புடன் வரவேற்பு தருகின்றனர். தமிழ் ரசிகர்கள் ரொம்ப பாசக்காரங்களா இருக்காங்க. அதை அப்படியே தக்கவைத்துக் கொள்ளணும்னு விரும்புகிறேன்.தொடர்புக்கு: srushtidange@yahoo.com

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X