அரசு பள்ளியில் இலக்கிய மன்றம் துவக்க விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பள்ளியில் இலக்கிய மன்றம் துவக்க விழா

Added : ஜூலை 10, 2017

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த கங்கலேரி அரசு உயர்நிலைப்பள்ளியில், இலக்கிய மன்ற துவக்க விழா நேற்று நடந்தது. விழாவில் தமிழாசிரியர் பன்னீர்செல்வம் வரவேற்றார். பள்ளியின் தலைமை ஆசிரியர் சாயிகுமார் தலைமை வகித்தார். ஓசூர் கல்வி மாவட்டம் சின்னதின்னூர் அரசு உயர்நிலைப்பள்ளி தமிழாசிரியர் ராம்குமார் பங்கேற்று, தமிழ் இலக்கணத்தை ஆடல் பாடலுடன் எளிமையாக எப்படி கற்றுக்கொள்வது என்பதை, பல சான்றுகளுடன் எடுத்துக் கூறினார். இதில், கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர், மாணவர்கள் எவ்வாறு ஒழுக்கத்துடன் நடந்து கொள்வது என்பது பற்றி பேசினார். மேலும், பள்ளி மாணவ, மாணவியரின் பேச்சுப் போட்டி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. தமிழாசிரியர் பைரப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X