சட்டசபையில் வாய் திறக்காதது ஏன்? பன்னீருக்கு ஸ்டாலின் கேள்வி Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
சட்டசபையில் வாய் திறக்காதது ஏன்?
பன்னீருக்கு ஸ்டாலின் கேள்வி

சென்னை: 'தி.மு.க.,வை வீணாக வம்புக்கு இழுத்து, டில்லியில் உள்ள, தன் ஆசான்களிடம், நல்ல பெயர் வாங்க, பன்னீர்செல்வம் முயற்சிக்கிறார்' என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:


முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசு, ஸ்டாலினுடன் ரகசிய கூட்டணி வைத்திருக்கிறது என, ராமநாதபுரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில், பன்னீர்செல்வம் உளறிக்கொட்டியிருக்கிறார்.
பழனிசாமி அரசின் முகத்திரையை, நானும், எம்.எல்.ஏ.,க்களும், தினமும் கிழித்து வருவதை பொறுக்க முடியாமல், வயிற்றெரிச்சலில் பேசுகிறார்.


பா.ஜ.,வின் முகமூடியாக செயல்படுவதில் தனக்கும், பழனிசாமிக்கும் உள்ள கடுமையானபோட்டியில், தி.மு.க.,வை வீணாக வம்புக்கு இழுத்து,

சட்டசபை, Assembly,ஸ்டாலின்,Stalin, கேள்வி,Question, சென்னை,Chennai, தி.மு.க.,DMK, டில்லி, Delhi, பன்னீர்செல்வம் , Panneerselvam, முதல்வர் பழனிசாமி,Chief minister Palanisamy, எம்.எல்.ஏ.,MLA, பழனிசாமி,Palanisamy, பன்னீர்,OPS,Panneer,

டில்லியில் உள்ள தன் ஆசான்களிடம், நல்ல பெயர் வாங்க, பன்னீர்செல்வம் முயற்சிப்பது மட்டும், நன்கு தெரிகிறது.

Advertisement

பழனிசாமி அரசு நீடிப்பதில், தனக்கு உடன்பாடில்லை என, பன்னீர்செல்வம் நினைத்தால், அரசு மீது சட்டசபையில் குற்றச்சாட்டுகளை வைக்க அஞ்சுவது ஏன்? இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Visu Iyer - chennai,இந்தியா
11-ஜூலை-201715:40:30 IST Report Abuse

Visu Iyerஸ்டாலின் நினைத்தால் இந்த ஆட்சியை கலைத்து இருக்கலாமே.. ஸ்டாலின் ரகசிய கூட்டணி இல்லை என்பதை நிரூபணம் செய்ய தி மு க எம் எல் ஏ க்களை ராஜினாமா செய்ய சொல்லி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி இந்த ஆட்சியை கலைத்து இருக்கலாமே.. வாக்களிப்பில் கலாட்டா.. அடிக்கடி வெளிநடப்பு என்ற போலி நாடகம் போடுவது ஏன்...? சி டி ஒன்னு வைச்சு இருக்கேன் என்று கோஷம் போட்டவர் நினைத்தால் இந்த ஆட்சியை கலைத்து இருக்கலாம் இல்லையா.. பதில் சொல்ல வேண்டியவர் ஓ பி எஸ் இல்லை ஸ்டாலின் தான்..

Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
11-ஜூலை-201718:39:07 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்எப்படி அய்யரே? இதென்ன ரம்மியா கலைக்கிறதுக்கு? மோடி மஸ்தான் நினைக்கணும்.....

Rate this:
SANKAR - calgary,கனடா
11-ஜூலை-201723:43:24 IST Report Abuse

SANKARஎப்படி... எப்படி... தி மு க ராஜினாமா செய்தால் ஆட்சி கலைந்து விடுமா... ? அது எப்படி..? தி மு க சட்டசபையில் இருப்பதால் தான் தட்டி கேட்க முடிகிறது... அவர்களையும் ராஜினாமா செய்துவிட சொன்னால் ...அப்புறம் கடிவாளம் இல்லாத குதிரையை போல் இந்த அரசு அரசு வண்டியை கவிழ்த்துவிடும்......

Rate this:
வால்டர் - Chennai,இந்தியா
11-ஜூலை-201715:40:06 IST Report Abuse

வால்டர்ஒரு படத்துல செந்தில் அரசியல்வாதியா நடிச்சிருப்பார். அவர்கிட்ட திருச்செந்தூர்னு ஒரு தொகுதி இருக்குன்னு சொல்லுவாங்க. அதுக்கு அவரு அப்படியான்னு கேப்பாரு. இவருக்கு கீழ இருக்குறவய்ங்க எல்லாம் இப்படித்தான். எங்க ஊருலயும் ஒரு மாய்க்கான் இப்பிடித்தான் பெரிய போஸ்ட் ல இருக்கான். சமஉ ஆனாலும் ஆயிடுவான்.

Rate this:
Balaji - Khaithan,குவைத்
11-ஜூலை-201714:05:16 IST Report Abuse

BalajiOPS இதை எதிர்பாத்துத்தான் அப்படியொரு குற்றச்சாட்டை சொல்லியிருக்கிறார் என்று நான் கருதுகிறேன்....... இதுவரை பன்னீர் பற்றிய செய்திகள் வாராமல் பார்த்துக்கொண்டவர்களே பன்னீர் பற்றி பேச வைத்திருக்கிறார் என்று தெளிவாக தெரிகிறது..........

Rate this:
மேலும் 27 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X