புதுச்சேரியில் 3 எம்.எல்.ஏ.,க்களின் நியமனம் நிராகரிப்பு!.. கிரண்பேடிக்கு கடிதம் அனுப்பினார் பேரவை தலைவர் Dinamalar
பதிவு செய்த நாள் :
புதுச்சேரி,Puducherry, எம்.எல்.ஏ., MLA,நியமனம்,Appointment, நிராகரிப்பு, Rejection,கிரண்பேடி,Kiranbedi, கடிதம், Letter, பேரவை தலைவர் , சபாநாயகர் ,Speaker,சட்டசபை, Assembly, பா.ஜ., BJP, சாமிநாதன்,Swaminathan, சங்கர், Shankar, செல்வகணபதி ,Selvarapathy,மத்திய உள்துறை அமைச்சகம்,Union Home Ministry, மனோஜ் பரிதா, Manoj Pareedha,தலைமை செயலர் ,Chief Secretary,

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபைக்கு, மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட, மூன்று எம்.எல்.ஏ.,க்கள் நியமனத்தை, சபாநாயகர் வைத்திலிங்கம் நிராகரித்தார். இது தொடர்பாக,
கவர்னர் கிரண்பேடிக்கு, அவர் கடிதம் அனுப்பி உள்ளார்.

புதுச்சேரி,Puducherry, எம்.எல்.ஏ., MLA,நியமனம்,Appointment, நிராகரிப்பு, Rejection,கிரண்பேடி,Kiranbedi, கடிதம், Letter, பேரவை தலைவர் , சபாநாயகர் ,Speaker,சட்டசபை, Assembly, பா.ஜ., BJP, சாமிநாதன்,Swaminathan, சங்கர், Shankar, செல்வகணபதி ,Selvarapathy,மத்திய உள்துறை அமைச்சகம்,Union Home Ministry, மனோஜ் பரிதா, Manoj Pareedha,தலைமை செயலர் ,Chief Secretary,


அதனால், கவர்னர் - ஆட்சியாளர்கள் மோதல், விஸ்வரூபம் எடுத்துள்ளது.புதுச்சேரி சட்டசபைக்கு, பா.ஜ.,வை சேர்ந்த சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோரை, நியமன எம்.எல்.ஏ.,க் களாக மத்திய உள்துறை அமைச்சகம் நியமித்தது.தலைமை செயலர் மனோஜ் பரிதா, ஜூலை, 4ல், உத்தரவு ஆணையை மூவரிடமும் முறைப்படி வழங்கினார்.
இது, தலைமை செயலகம் மூலம், அரசு கெஜட்டிலும் வெளியிடப்பட்டது.பின், மூவரும், சட்ட சபையில் சபாநாயகர் வைத்திலிங்கத்தை சந்தித்து, நியமன ஆணையை காண்பித்து, பதவிப் பிரமாணம் செய்து வைக்க கோரினர்.

'உரிய ஆவணங்களை சட்டசபை செயலரிடம் கொடுங்கள். அவர் ஆவணங்களை பரிசீலித்து, பதவியேற்பு குறித்து முடிவு செய்வார்' என, சபாநாயகர் கூறி அனுப்பினார்.இதையடுத்து, நியமன எம்.எல்.ஏ.,க்களாக நியமிக்கப்பட்டவர்கள் குறித்த முழு விபரங்களை கேட்டு, சட்டசபை செயலர் மூலம், தலைமை செயலருக்கு சபாநாயகர் கடிதம் அனுப்பினார்.
விசாரணைஅந்த கடிதத்தில், 'நியமன, எம்.எல்.ஏ.,க்களாக தாங்கள் நியமிக்கப்பட்டு உள்ளோம் எனக்கூறி, மூவர் என்னிடம் வந்து, நியமன உத்தரவு ஆணையை காண்பித்தனர். அதில், சம்பந்தப்பட்ட நபர்களின் பெயர் மட்டுமே உள்ளது.

கட்டுப்படுத்தாது''தந்தை பெயர், முகவரி உள்ளிட்ட எந்த விபரமும் இல்லை. எனவே, சம்பந்தப்பட்ட நபர் தான் நியமன எம்.எல்.ஏ.,வாக நியமிக்கப்பட்டவர் என, அடையாளம் காண்பது அவசியம். அதனால், அதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும்' என, குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆளும் காங்., கட்சி தலையீட்டால், பதவி ஏற்பில் காலம் கடத்துவதாக, கவர்னரிடம் நியமன எம்.எல்.ஏ.,க்கள் முறையிட்டனர். அதை தொடர்ந்து, அன்று இரவே, ராஜ்நிவாசில், மூவருக்கும் கவர்னர் கிரண்பேடி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இதற்கிடையில், மூவரின் நியமனத்தையும் ரத்து செய்யக் கோரி, காங்., - எம்.எல்.ஏ.,

லட்சுமி நாராயணன், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, நாளை விசாரணைக்கு வருகிறது.
இந்நிலையில், மூன்று நியமன எம்.எல்.ஏ.,க்களும், புதுச்சேரி சட்ட சபை செயலர் வின்சென்ட் ராயரை சந்தித்து, சட்டசபையில் தங்களுக்கு இருக்கை ஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுக்க வேண்டும் என, கடிதம் கொடுத்தனர்.
சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகிய மூவருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைப்பது தொடர்பாக, கவர்னரின் செயலர் தேவநீதிதாஸ், சட்டசபை செயலர் மூலமாக, சபாநாயகருக்கு ஏற்கனவே கடிதம் அனுப்பி இருந்தார்.
கவர்னரின் செயலரிடம் இருந்து வந்த கடிதத்தை பார்த்தசபாநாயகர் வைத்திலிங்கம், 'நியமன, எம்.எல்.ஏ.,க்களாக மூவர் நியமிக்கப்பட்டது குறித்து, அதிகாரப்பூர்வமான தகவல், சட்டசபை செயலகத்துக்கு வரவில்லை.
'எனவே, ராஜ்நிவாசில் இருந்து அனுப்பப்பட்டுள்ள கடிதம், சட்டசபை செயலகத்தை கட்டுப்படுத்தாது' எனக்கூறி, கவர்னரின் செயலர் அனுப்பிய கடிதத்தையும், இணைக்கப்பட்டிருந்த ஆவணங்களையும் சட்டசபை செயலர் மூலம் சபாநாயகர் நேற்று அதிரடியாக திருப்பி அனுப்பினார். சபாநாயகரின் இந்த அதிரடி முடிவால், நியமன, எம்.எல்.ஏ.,க்கள் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

கிரண்பேடி விளக்கம்இந்த தருணத்தில், இந்த விவகாரம் தொடர்பாக, இணையதளத்தில், கிரண்பேடி வெளியிட்டு உள்ள விளக்கம்:நியமன எம்.எல்.ஏ.,க் கள் விவகாரத்தில், யூனியன் பிரதேச சட்டம் பிரிவு 3 - 3ன் படி, தனக்குள்ள அதிகாரத்தில் மத்திய அரசு, புதுச்சேரி சட்டசபைக்கு, மூன்று நியமன
எம்.எல்.ஏ.,க்களை நியமித்துள்ளது.
இதுகுறித்த உத்தரவு ஆணை, தலைமை செயலருக்கு அனுப்பப்பட்டது. அதை பெற்ற தலைமைச் செயலர், புதுச்சேரி அரசிதழில் வெளியிட்டார்.அதன்பின், மூன்று பேரும், சபாநாயகரை சந்தித்து பதவிப்பிரமாணம் செய்து வைக்க கோரினர். ஆனால், அவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க தேதியை கூட சபாநாயகர் தெரிவிக்கவில்லை. இது தொடர்பாக அவர்கள் மூவரும், எனக்கு எழுத்து மூலமாக புகார் தெரிவித்து, பதவிப் பிரமாணம் செய்யும்படி கோரினர்.
யூனியன் பிரதேசத்தின் நிர்வாகி என்ற முறையில், நான் அவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தேன். யூனியன் பிரதேச சட்டம் பிரிவு, 11ன் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதுதொடர்பான முறையான தகவல், மத்திய அரசுக்கும், சபாநாயகர் அலுவலகத்திற்கும்

Advertisement

அனுப்பப்பட்டது. ஆனால், நேற்று நியமன எம்.எல்.ஏ.,க்கள் விவகாரம் தொடர்பான அனைத்து கோப்புகளையும், சபாநாயகர் அலுவலகம் திருப்பி அனுப்பி உள்ளது. நியமன, எம்.எல்.ஏ., க்கள் விவகாரம் தொடர்பாக, முறையான தகவல் தெரிவிக்கவில்லை என, காரணம் கூறியுள்ளனர்.
இது தொடர்பாக, உரிய நடவடிக்கை எடுக்க, மத்திய அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நியமன, எம்.எல்.ஏ.,க்கள் விவகாரத்தில், மத்திய அரசு நியமித்து, புதுச்சேரி அரசு இதை அரசிதழில் வெளியிட்டு, சபாநாயகருக்கும் தகவல் தரப்பட்டதே உண்மை.
இவ்வாறு கவர்னர் தெரிவித்துள்ளார்.
மேலும், கவர்னர் செயலரின் சட்டசபை செயலருக்கு அனுப்பிய கடிதம், தலைமை செயலர் வழங்கிய நியமன ஆணை, அரசிதழில் வெளியிட்ட கடிதம் போன்றவற்றையும், இணைய தளத்தில் அவர் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் கவர்னரும், சபாநாயகரும் தனித்தனியாக நேற்று டில்லி விரைந்துள்ளனர்.

'செல்லாக்காசுகள்' நாராயணசாமி ஆவேசம்


''புதுச்சேரி, காங்கிரஸ் ஆட்சியை யாராலும் கலைக்க முடியாது,'' என, முதல்வர் நாராயணசாமி பேசினார்.கவர்னர் கிரண்பேடியின் செயல்பாட்டை கண்டித்து, ஊசுடு தொகுதியில், காங்., சார்பில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியதாவது: புதுச்சேரியில், தி.மு.க., - காங்., கூட்டணியை யாராலும் அசைக்க முடியாது. சேவை செய்வதாக கூறி, கவர்னர் கிரண்பேடி புதுச்சேரிக்கு வந்தார்.

ஆனால், மக்களாட்சிக்கு எதிராக, அதிகாரத்தை பயன்படுத்தி வருகிறார். காங்., ஆட்சி இன்னும் நான்காண்டு நீடிக்கும். யாரும் குறுக்கு வழியில் ஆட்சிக்கு வரலாம் என, பகல் கனவு காண வேண்டாம். எங்களிடம் உள்ள, எம்.எல்.ஏ.,க்கள், 18 பேர் சேர்த்து, 23 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு எங்களுக்கு உள்ளது. காங்., ஆட்சியை யாராலும் கலைக்க முடியாது. புதிதாக நியமிக்கப்பட்டுள்ள, மூன்று நியமன எம்.எல்.ஏ.,க்களும் செல்லாத காசுகள். அவர்களுக்கு சட்டசபையில் ஓட்டுரிமை கிடையாது.

இவர்களை கொண்டு ஆட்சி மாற்றம் செய்ய நினைப்பது பகல் கனவு.நியமன எம்.எல்.ஏ.,க்களை தான் பரிந்துரை செய்யவில்லை என கூறும் கவர்னர் கிரண்பேடி, அன்றே அதை தெரிவிக்காமல், புதுச்சேரி மக்கள் எதிர்ப்பு தெரிவித்த பிறகே இதுபற்றி கூறுகிறார்.
நியமன, எம்.எல்.ஏ.,க்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க விளக்கங்களை கேட்ட சபாநாயகருக்கு உரிய விளக்கம் கொடுக்காமல், இரவோடு இரவாக, கவர்னர் மாளிகையில் பதவிப்பிரமாணம் செய்து வைத்தது எந்த வகையில் நியாயம். இவ்வாறு நாராயணசாமி பேசினார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (166)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
Shree Ramachandran - chennai,இந்தியா
14-ஜூலை-201706:20:37 IST Report Abuse

Shree Ramachandranநாசா தெரிந்து பேசுகிறார். தீ மூ கா மீது உப்புமூட்டை சவாரி செய்யும் காங்கிரஸ், கீழே விழ வேறு நேரம் ஆகாது என்று அவருக்கு தெரியும். இருந்தாலும் வீம்பு குறையவில்லை.

Rate this:
Rajamani Ksheeravarneswaran - bangalore,இந்தியா
13-ஜூலை-201713:39:03 IST Report Abuse

Rajamani Ksheeravarneswaranவெற்றி வெற்றி வெற்றி கர்நாடகத்திற்கு பிறகு தென்னக மாநிலங்களில் பிஜேபிக்கு மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைத்துள்ளனர் ஊழலில் ஊறித்திளைத்த காங்கிரசின் பாவச்செயல்களால் வெறுப்படைந்த மக்கள் இப்படி ஒரு தலைமையை இந்தியாவிற்கு கொடுத்துள்ளனர்.

Rate this:
G Mahalingam - Delhi,இந்தியா
11-ஜூலை-201723:21:21 IST Report Abuse

G MahalingamLast one year Congress was unable the candidates due to internal politics. Bjp took advantage just like Goa and Manipur

Rate this:
SANKAR - calgary,கனடா
11-ஜூலை-201723:08:41 IST Report Abuse

SANKARகிரண் பேடி ஒரு கவர்னருக்கு வேண்டிய பொறுமையும் நிதானமும் இன்னும் பெறவில்லை... நாளொரு மோதல் பொழுதொரு சர்ச்சை கொஞ்சமும் நன்றாக இல்லை... நியமன எம் எல் ஏ க்கள் பற்றிய விபரங்களை (ஆதார் அட்டையோ அல்லது , பெயர் , தகப்பனார் பெயர், வயது விலாசமோ) நியமன கடிதத்தில் கொடுத்திருக்கலாம்...அல்லது பிறகு விளக்கமாக கொடுத்து பிரச்சினையை முடித்திருக்கலாம்... தேவையில்லாமல் பதவி பிரமாணம் செய்து வைத்து ஈகோ பிரச்சினை பேடி என்று பெயர் எடுத்து விட்டார்கள்...

Rate this:
11-ஜூலை-201721:57:03 IST Report Abuse

kulandhaikannanநாசா ஒரு கட்டப் பஞ்சாயத்து பேர்வழி.

Rate this:
Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா
11-ஜூலை-201720:44:00 IST Report Abuse

Barathanநாராயண சாமி CM ஆக வந்த வழியும் சரியில்லை. உண்மையில் நமச்சிவாயம் முதல்வராக தேர்தெடுக்கப்பட்டு முதல்வராக பதவி ஏற்றிருக்க வேண்டும்.

Rate this:
Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா
11-ஜூலை-201720:37:38 IST Report Abuse

Barathanநல்ல வேளை தமிழ் நாட்டுக்கு பிஜேபி அரசாங்கம் ஒரு கவர்னரை போடவில்லை. இங்கேயும் நியமன MLA 234 பேரை கவர்னர் நியமித்து eps பதவிக்கு வேட்டு வைத்திருப்பார்கள்.

Rate this:
Ramesh Kumar - coimbatore,இந்தியா
11-ஜூலை-201720:30:18 IST Report Abuse

Ramesh Kumarஇதென்ன புதுசா ஸ்ரீனிவாசன்னு புது சொம்பு கிளம்பியிருக்கு.... அதுவும் கிரண் பேடி மேட்டருக்கு மட்டும் சொம்படித்திருக்கு......... ஒரு வேளை ஸ்ரீராம் சார் தான் பெயர் மாற்றி வைத்து கொண்டுள்ளாரோ... சே சே அப்படியெல்லாம் இருக்காது என்றே நினைக்கிறேன்....

Rate this:
Madurai Raja - Madurai,இந்தியா
11-ஜூலை-201719:08:16 IST Report Abuse

Madurai Rajaதேசத்தின் மீது நேசம் என்பது என்பது வெறும் மோசடி வேலை. பணம் சம்பாதிப்பதற்காகத் தான் அந்த தேசப்பற்று.

Rate this:
Joseph Chandran - Atyrau,கஜகஸ்தான்
11-ஜூலை-201718:19:22 IST Report Abuse

Joseph Chandranஎங்க தலைக்கு தில்லை பார்த்தாயா?? ஹ்ஹ்ம் இதெல்லாம் தமிழகத்தில் நடக்குமா???

Rate this:
மேலும் 156 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement