ஐ.எம்.பி.எஸ்., கட்டணம்; ரத்து செய்தது எஸ்.பி.ஐ., | Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஐ.எம்.பி.எஸ்., கட்டணம்; ரத்து செய்தது எஸ்.பி.ஐ.,

Added : ஜூலை 13, 2017 | கருத்துகள் (20)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
ஐ.எம்.பி.எஸ்.,IMPS , கட்டணம்,Fees, ரத்து,Cancel, எஸ்.பி.ஐ., SBI,,இன்டர்நெட் பேங்கிங், Internet Banking, மின்னணு பணப் பரிவர்த்தனை,Electronic Cash Transfer,  வங்கி,Banking,  ஜி.எஸ்.டி.,GST,

புதுடில்லி : 'சிறிய அளவிலான மின்னணு பணப் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில், 1,000 ரூபாய் வரையிலான, ஐ.எம்.பி.எஸ்., பரிவர்த்தனைகளுக்கு, இனி, எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படாது' என, எஸ்.பி.ஐ., வங்கி அறிவித்துள்ளது.


கட்டணம்:


ஐ.எம்.பி.எஸ்., கட்டணம்; ரத்து செய்தது எஸ்.பி.ஐ.

ஒருவரின் வங்கிக் கணக்கிலிருந்து, மற்றொருவரின் வங்கிக் கணக்கிற்கு, 'இன்டர்நெட் பேங்கிங்' மூலமோ, மொபைல் போன் வாயிலாகவோ, ஐ.எம்.பி.எஸ்., எனப்படும், உடனடி மின்னணு பணப் பரிவர்த்தனை முறையில், பணம் அனுப்ப முடியும். அந்த வகையில், எஸ்.பி.ஐ., வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும், 1,000 ரூபாய் வரையிலான ஒரு பரிவர்த்தனைக்கு, ஐந்து ரூபாய் கட்டணமும், அதற்கான சேவை வரியும் விதிக்கப்பட்டது. தற்போது, ஜி.எஸ்.டி., அமலுக்கு வந்துள்ளதால், வங்கிப் பரிவர்த்தனை கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.


ரத்து:


இந்நிலையில், சிறிய அளவிலான மின்னணு பணப் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில், 1,000 ரூபாய் வரையிலான, ஐ.எம்.பி.எஸ்., பரிவர்த்தனைகளுக்கு, இனி, எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படாது என, அந்த வங்கியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறு சிறு பரிவர்த்தனைகள் மேற்கொள்வோருக்கு, இந்த அறிவிப்பு மிகவும் பயனுள்ளதாக அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திண்டுக்கல் சரவணன் - ஓசூர்,இந்தியா
13-ஜூலை-201713:29:31 IST Report Abuse
திண்டுக்கல் சரவணன் நல்லது. 1000 என்பது மிகக்குறைவு. 10000 ரூபாயாக நிர்ணயிக்கவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
பெரிய ராசு - Baton Rouge,யூ.எஸ்.ஏ
13-ஜூலை-201712:14:57 IST Report Abuse
பெரிய ராசு SBI மக்கள் புறக்கணித்து 0 பாலன்ஸுக்கு கொண்டு சென்று அவனுக ட்ரவுசரை கழட்ட வேண்டும் கொள்ளைக்கார பாங்கு
Rate this:
Share this comment
Cancel
RVK - Chennai,இந்தியா
13-ஜூலை-201711:28:04 IST Report Abuse
RVK அரசுடமை வங்கிகள் திவால் தருணத்தில் அரசு நிதி ( மக்கள் பணம் ) தரவேண்டும். அப்போது நிதி அமைச்சர் வந்துவிடுவார். இது போன்ற செயல்களுக்கு அவர் சம்மந்தம் இல்லாதவர் போல் நடிப்பார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X