மல்லையாவை ஆஜர்படுத்தினால் மட்டுமே விசாரணை: சுப்ரீம் கோர்ட்| Dinamalar

மல்லையாவை ஆஜர்படுத்தினால் மட்டுமே விசாரணை: சுப்ரீம் கோர்ட்

Added : ஜூலை 14, 2017 | கருத்துகள் (9)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
விஜய் மல்லையா,Vijay Mallya, கோர்ட் அவமதிப்பு வழக்கு,Court contempt case, சுப்ரீம் கோர்ட், Supreme Court, புதுடில்லி, New Delhi, விசாரணை, Investigation, வாங்கி மோசடி ,  Fraud, லண்டன் கோர்ட்,  London Court,

புதுடில்லி: அவமதிப்பு வழக்கில் மல்லையா இல்லாமல் விசாரணை நடத்த இயலாது என சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.வங்கியில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கி மோசடி செய்த பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனில் வசித்து வருகிறார். பல முறை அவருக்கு சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. தொடர்ந்து அவர் மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்நிலையில், மல்லையாவை நாடு கடத்தும் நடவடிக்கைகளை மத்திய அரசு துவக்கியுள்ளது. இது தொடர்பான வழக்கு லண்டன் கோர்ட்டில் நடந்து வருகிறது.இந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: மல்லையா இல்லாமல் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்க முடியாது. அவர் இல்லாமல் வழக்கு விசாரணை நடத்த முடியாது எனக்கூறினார்.அட்டர்னி ஜெனரல் கூறுகையில், மல்லையாவை நாடு கடத்துவது தொடர்பான வழக்கு லண்டன் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கு டிசம்பர் 4க்குள் நிறைவடையும் வாய்ப்பு உள்ளதாக கூறினார்.மல்லையாவுக்கு தண்டனை தரமுடியாது: சுப்ரீம் கோர்ட்

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ramasamy naicken - Hamilton,பெர்முடா
14-ஜூலை-201723:20:10 IST Report Abuse
ramasamy naicken இப்படி முதலிலேயே தெளிவாக சொல்லி இருந்தால் கர்ணனும் லண்டனுக்கு சென்று இருப்பாரே.
Rate this:
Share this comment
Cancel
Hari Doss - Pollachi,இந்தியா
14-ஜூலை-201719:26:56 IST Report Abuse
Hari Doss Mallaiya obtained during UPA regime, at this juncture UPA is responsible for this crime
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
14-ஜூலை-201716:22:33 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் இருந்தவனை வெளியே விட்டுட்டு வேடிக்கை காட்டும் மோடி அரசாங்கம்.
Rate this:
Share this comment
Appu - Madurai,இந்தியா
14-ஜூலை-201719:39:18 IST Report Abuse
Appuநடந்து முடிந்த கதை....இனி மல்லையாவை ஆளும் பாஜக அரசு மட்டும் அல்ல அடுத்து ஆள போகும் காங்கிரசால் கூட நாடுகடத்தி இங்கே கொண்டுவர இயலாது...சட்டத்தின் ஓட்டைகள் மட்டும் அல்ல அரசுகளும்,,மந்திரிமார்களும் மக்களிடம் நடிக்க மட்டும் இவரை நாடுகத்த முயற்சிப்பதாக நடிப்பார்கள் தவிர கொண்டு வந்து உண்மையான மக்கள் நல ஆட்சி என்பதை நிரூபிக்க மாட்டார்கள் என்பது எனது ஏகமனதான கருத்து......
Rate this:
Share this comment
Cancel
Gnani - Casabalanca,மொராக்கோ
14-ஜூலை-201716:14:42 IST Report Abuse
Gnani நமது நாடு அந்நிய முதலீட்டை ஈர்க்க தொழிலதிபர்களை அழைக்கிறது. மற்ற நாடுகளோ மொத்தமாக கொள்ளை அடித்த அதிபர்களை அழைத்து புகலிடம் கொடுக்கிறது. நம் நாடு சிறு சிறு முதலீட்டை நோக்கி செல்கிறது ஆனால் மற்ற நாடுகளோ இதுபோன்ற ஆட்களை கொண்டு ஜாக்பாட்டாக அங்கிருந்து அந்நிய செலாவணியை ஈட்டுகிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
vasanthan - Moscow,ரஷ்யா
14-ஜூலை-201715:28:41 IST Report Abuse
vasanthan இங்கே இருந்த மாவீரன் நீதி அரசர் கர்ணனை நீதிமன்றம் கொண்டுவரவே இந்த போலீஸ் பட்ட பாட்டை பார்த்தோம் இப்போது இங்கிலாந்திலிருந்து ஒரு பிராடை பிடிப்பது அவளவு சுலபமா?
Rate this:
Share this comment
Cancel
appaavi - aandipatti,இந்தியா
14-ஜூலை-201715:26:14 IST Report Abuse
appaavi முதல்ல கடன் கொடுத்தவன் கழுத்தை பிடியுங்க...எதை நம்பி கடன் கொடுத்தான். ஒரு சின்ன தொழில் ஆரம்பிக்கவே ஆயிரத்தெட்டு டாக்குமெண்ட்ஸ் கேட்கிறான்...இதை எப்படி விட்டானுங்க.
Rate this:
Share this comment
Cancel
ezhumalaiyaan - Chennai,இந்தியா
14-ஜூலை-201715:19:34 IST Report Abuse
ezhumalaiyaan நியாயம்தான்.சம்மந்தப்பட்ட குற்றவாளியின் கூற்றையும் கேட்டு தீர்ப்பு அளிப்பதுதான் நியாயமானது.
Rate this:
Share this comment
Muthu Ramalingam - THOOTHUKKUDI ,இந்தியா
14-ஜூலை-201715:53:40 IST Report Abuse
Muthu Ramalingamஇப்பொழுதாவது உச்சநீதிமன்றத்திற்கு இவ்வாறு கூற தொிந்ததே... ஆளே இ்ல்லாமல் விசாரணை செய்வது என்பது ஆளே இல்லாத ஊாில் ஐந்து ஆறு டீக்கடை திறப்பது போன்றதே.........
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை