மக்களின் நம்பிக்கை பெற்ற அரசு; உலகில் முதலிடத்தில் பிரதமர் மோடி Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
மக்களின் நம்பிக்கை பெற்ற அரசு
உலகில் முதலிடத்தில் பிரதமர் மோடி

புதுடில்லி: மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ள அரசுகள் பட்டியலில், 73 சதவீத மக்களின் ஆதர வோடு, உலகில் முதலிடத்தைப் பெற்றுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு என்ற சர்வதேச அமைப்பு, மக்களின் ஆதரவை பெற்றுள்ள அரசுகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், 73 சதவீத மக்களின் ஆதரவைப் பெற்று, பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

இதற்கு காரணமாக, அந்த அமைப்பு கூறி உள்ளதாவது: கடந்த, 2014ல் நடந்த லோக்சபா தேர்தலில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற,

பிரதமர்நரேந்திர மோடி, செல்லாத ரூபாய் நோட்டு, ஜி.எஸ்.டி., எனப் படும் சரக்கு மற்றும் சேவை வரி முறை, கறுப்பு பணத்துக்கு எதிரான நடவடிக்கைகள் என, மக்களை கவரும் பல்வேறு திட்டங்களால், மக்கள் விரும்பும் தலைவராக விளங்குகிறார். இவ்வாறு அந்த அமைப்பு கூறியுள்ளது.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடியா, 62 சதவீத மக்கள் ஆதரவுடன், பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். அதிபர் ரிசெப் தயீப் எர்டோகன் தலைமையான, துருக்கி அரசு, 58 சதவீத ஓட்டுகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும் முயற்சிகளில் ஈடுபட்ட பிரிட்டனில்,

Advertisement

41 சதவீத மக்கள், பிரதமர் தெரசா மேக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், 30 சதவீத மக்களின் ஆதரவையே பெற்றுள்ளார்.

 நம்பிக்கை, Trust, அரசு, government,மோடி,Modi, புதுடில்லி, New Delhi,பிரதமர் நரேந்திர மோடி, Prime Minister Narendra Modi, பொருளாதார ஒத்துழைப்பு, Economic Cooperation, செல்லாத ரூபாய் நோட்டு,Invalid Rupee note,  ஜி.எஸ்.டி., GST,கனடா, Canada, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடியா,Prime Minister Justin Trudeau, அதிபர் ரிசெப் தயீப் எர்டோகன், President Recep Tayyip Erdogan,  பிரதமர் தெரசா மே, Prime Minister Teresa May,மக்கள், People,


பொருளாதார வீழ்ச்சி, ஐரோப்பிய அகதிகள் பிரச்னைகளால் திணறி கொண்டிருக் கும், கிரீஸ் அரசு, 13 சதவீத மக்கள் ஆதரவுடன், பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (106)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ayappan - chennai,இந்தியா
15-ஜூலை-201722:59:08 IST Report Abuse

AyappanT senthill sir keep it up

Rate this:
appaavi - aandipatti,இந்தியா
15-ஜூலை-201722:35:03 IST Report Abuse

appaaviநல்ல செக் பண்ணுங்கப்பா மக்கள் மத்தியிலா இல்லை வெளிநாட்டுக்கு டூர் அடிப்பதிலேயா...

Rate this:
Mohan Nadar - Mumbai,இந்தியா
15-ஜூலை-201722:24:54 IST Report Abuse

Mohan Nadarஅமெரிக்காவிலே சொல்லுறாங்க லண்டனிலே சொல்லுராகனு கலர் கலர் ரா ரீல் சுத்துறானுக...இந்தியாவில கேட்க சொல்லுங்க

Rate this:
Manian - Chennai,இந்தியா
16-ஜூலை-201702:47:42 IST Report Abuse

Manianநன்றி கெட்ட இந்தியர்களிடமா? 95% திறமை இல்லாதவர்கள், உலகத்தில் 3ம் இடத்தில் சோம்பறி உள்ள நாட்டில், லஞ்சம் கொடுப்பது-வாங்குவது சரியே என்னும் 70-80% மக்கள் இருக்கும் நாட்டில், ஓட்டை விற்று உல்லாசப் பயணம் போனோம் என்ற நாட்டில், 1% வரி கொடுப்போர் - 99% ஓசியே வாங்கும் மனங்கெட்ட ஜன்மங்கள் இருக்கும் நாட்டில், யாரிடம் கேட்பது ?...

Rate this:
Mal - Madurai,இந்தியா
15-ஜூலை-201720:31:28 IST Report Abuse

MalWhen JJ died and modi ji came to see her before the burial, all people who were assembled there cried on seeing modi.... Because he was a very good fri of JJ.. People of Tamil nadu who had gathered there who felt the loss of JJ had looked upto him for solace.... This d a fear among the corrupt politicians and the minorities .... And there started their plans to degrade modi ji and bjp government.... Careful planning in the name of protests , various agitation s were all part of their plans... I only hope people of Tamil nadu understand this motive and throw away people who wish to divide and rule and support bjp for overall improvement of tamilnadu

Rate this:
SSK - Chennai,இந்தியா
15-ஜூலை-201719:49:55 IST Report Abuse

SSK1991 ஆம் ஆண்டில் நரசிம்ம ராவ் மேற்கொண்ட பொருளாதார சீர்திருத்தத்தால் தான் 2004 டு 2014 மன் மோகன் சிங் ஆட்சி காலத்தில் பொருளாதாரம் பீடு நடை போட்டதாக பொருளாதார அறிஞர்களின் பார்வை உள்ளது. அது போல் மோடி இப்போது மேற்கொள்ளும் பொருளாதார சீர் திருத்த நடவடிக்கைகள் பூ பூத்து காய் காய்த்து, பழம் பழுக்க சில வருடங்கள் பிடிக்கும். சரக்கு மற்றும் சேவை வரி அமுலுக்கு வந்த பிறகு சுமார் ஒரு லட்சத்து எழுபதாயிரம் போலி கம்பெனிங்க அன்று இரவே மூடப்பட்டுள்ளது, இன்னும் ஒரு லட்சத்து முப்பதாயிரம் போலி கம்பெனீங்க செயல் படறதா திரு மோடியவர்களே தெரிவித்துள்ளார். வரி ஏய்ப்பாளர்களுக்கும், கருப்பு பண முதலைகளுக்கும் மோடியின் நடவடிக்கைகள் இருட்டில் கொட்டும் தேளாக உள்ளது.

Rate this:
Rajamani Ksheeravarneswaran - bangalore,இந்தியா
15-ஜூலை-201720:23:00 IST Report Abuse

Rajamani Ksheeravarneswaranபழக்கடை வியாபாரி ஒருவர் கொசுக்களும், ஈக்களும் தன் கடையில் மொய்த்துக் கொண்டிருப்பதை பார்த்து , மூட்டை பூச்சி மருந்து , கொசு மருந்து எல்லாம் தெளித்தும் அவைகளின் தொல்லைகள் ஓயவில்லை. GST என்ற போர்டை வைத்தார் .அதன்பின் கொசு, ஈக்கள் எல்லாம் காணாமல் போய்விட்டது .அதுதான் இன்றைய சிறுகுறு வியாபாரிகளின் நிலை .முன்பாவது ஈயோட்டிக் கொண்டிருந்தார்கள் இப்போது அதுவுமில்லை. ஒரு கடைக்கு வணிகவரி அதிகாரி வந்தார் அவர் சரக்கை தேர்வு செய்ததும் கடை ஓனர் எந்த பெயரில் பில் போடவேண்டும் என்று கேட்டார் .வரி 28 சதவிகிதம் என்றவுடன் பில் வேண்டாம் என்று பணம் கொடுத்து வாங்கி சென்றாராம் . இதுதான் இன்றைய நிலை. இங்கு மனசாட்சி உள்ள ஒருவர் சொல்லட்டும் இந்தியாவில் விலைவாசி குறைந்து விட்டது என்று ....

Rate this:
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
15-ஜூலை-201721:46:09 IST Report Abuse

Agni Shivaஅரை நூற்றாண்டுகளாக நாட்டையே ஆட்டையை போட்டுகொண்டு கான் கிராஸ் கட்சி ஆண்டதால் இதற்கு முன்பு வரியில்லாமல் வாழ்ந்து விட்டோம் அது எங்களின் DNA யில் ஒட்டி பிடித்து விட்டது ஆகவே இனியும் அப்படி தான் வாழ்வோம்..என்பது தான் எங்கள் கொள்கை. இதற்கு முன்பு நாங்கள் விற்ற பொருள்கள் அனைத்தும் வரியில்லாமல் தான் விற்றோம் ஏனென்றால் உலகத்திலேயே இந்தியாவில் தான் வரியில்லாமல் இருந்த ஒரே பொருளாதாரம்..இந்த மோடி வந்த பிறகு வரியை காட்டுங்கள் என்று பிச்சு புடுங்குகிறார்..இது தானே ராஜாமணி அண்ணாச்சி உங்கள் குறை?...

Rate this:
Shanu - Mumbai,இந்தியா
15-ஜூலை-201718:53:22 IST Report Abuse

Shanuமோடி இது வரை மக்களின் நலனுக்கு ஏதாவது ஒரு நல்ல திட்டத்தை கொண்டு வந்து உள்ளாரா? ஒரு காலத்தில் சோனியாவை இது போல் சொன்னார்கள்.

Rate this:
Palanikumar Raju - Dindigul,இந்தியா
15-ஜூலை-201718:31:04 IST Report Abuse

Palanikumar Rajuஹிட்லரை பற்றி அவசியம் தெரிந்து கொள்ளவேண்டிய சில விஷயங்கள் …. Posted on ஜூலை 8, 2017 by vimarisanam - kavirimainthan … … … நம் நாட்டில் ஹிட்லரை பற்றி முழுமையாக அறியாதவர்கள் நிறைய பேர் உள்ளனர்…. சரித்திரத்தில் மிக முக்கியமான இடத்தைப் பெற்ற ஒருவரைப்பற்றி, நாம் சரியாக தெரிந்துகொள்ளாமல் இருக்கலாமா…? அதுவும் தற்போதைய காலகட்டத்தில்…? ஹிட்லரைப்பற்றி விவரமாக ஒரு தொடர் பதிவே இட வேண்டுமென்று எண்ணி இருந்தேன். ஆனால், தற்போதைக்கு என் வேலையை மிகவும் சுலபமாக்கி விட்டார் நண்பர் சுரன்சுகுமாரன். அத்தனை விவரங்களையும், ரத்தினச்சுருக்கமாக தனது தளத்தில் தொகுத்து தந்து விட்டார். அவருக்கு எனது நன்றிகளை கூறிக்கொண்டு, அவரது இடுகையையே இங்கே மறுபதிவு செய்கிறேன்… நன்றி நண்ப – சுரன்சுகுமாரன். எதிர்காலத்தில், ஹிட்லரின் சரித்திரத்தை இன்னமும் விரிவாக எழுதக்கூடிய வாய்ப்பு உருவாகும்போது, நான் எழுதுகிறேன். —————————————————————– ஹிட்லர் பற்றி உங்களுக்கு என்னவெல்லாம் தெரியும் …? 1. ஹிட்லர் திருமணம் செய்துகொள்ளவில்லை, ஆனால் ஒரு காதலி இருந்தாள். 2. நாட்டில் ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்கள் எதிரியாக இருந்ததாக நினைத்தார். 3. ஹிட்லரின் ஆதரவாளர்கள் கண்மூடித்தனமாக ஹிட்லரை அவதார புருஷராக நம்பினார்கள், ஹிட்லர் பற்றிய உண்மைகளை, விமர்சனங்களை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 4. ஹிட்லர் தனது சிறு வயதில் ஓவியங்களை வரைந்து விற்று சம்பாதித்தார். 5. ஹிட்லர் நாளிதழ், ஊடகங்கள் அனைத்தும் தன்னை பற்றிய செய்திகளை பதியுமாறு செய்தார்..ஊடகங்களும் அவ்வாறே ஹிட்லர் புகழ் பாடி செய்தி வெளியிட்டன. 6. உழைப்பாளர் சங்கங்கள் அனைத்தையும் ஒடுக்கினார். 7. ஹிட்லர் தனக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை தேசவிரோதி என்று முத்திரை குத்தினார், நயவஞ்சகர்கள் என்று அழைத்தார். 8. ஹிட்லர், சாதாரண அடிப்படை தொண்டராக பாசிச நாஜி படையில் சேர்ந்தார்… தனக்கு எதிரானவர்களுக்கு குழிகளை பறித்து பாசிச நாஜி படைக்கு தலைமை பதவியை பிடித்தார். 9. நாட்டின் அனைத்து பிரச்சினையும் ஒரு நொடியில், மிக துரிதமாக தீர்வு காண தன்னால் முடியும் என்று வாக்குறுதி கொடுத்து ஆட்சியை பிடித்தார்… 10. ஆட்சி, அதிகாரத்திற்கு வந்த ஹிட்லரால் நாட்டின் சாதாரண ஒரு பிரச்சினைக்கு கூட தீர்வு காண முடியவில்லை… ஆனால் ஜெர்மனியை அதல பாதாளத்திற்கு கொண்டு சென்றார்.. 11. ”நாட்டிற்கு நல்ல காலம் வர போகிறது, நாடு வல்லரசு ஆக போகிறது” என்பது தான் ஹிட்லரின் தேர்தல் ஸ்லோகமாக இருந்தது… 12. ஹிட்லரின் நாஜி கட்சி வெற்றி பெற்று முதல் முறையாக பார்லிமென்றிக்கு ஹிட்லர் சென்ற போது அங்கு உணர்ச்சி மிகுதியால் அழுதார்… 13. பொய்கள் மற்றும் வெறுப்புகளை மட்டுமே மக்கள் மத்தியில் பரப்பி ஹிட்லர் ஆட்சிக்கு வந்தார்… 14. விலையுயர்ந்த ஆடைகள் அணிவதை ஹிட்லர் அதிகமாக விரும்பினார்… 15. ஹிட்லர் பொய்களை உண்மைகள் போலவும், உண்மைகளை பொய்கள் போலவும் பேச கலையை அறிந்தவர்… 16. ஹிட்லர் தன்னை முதன்மை படுத்தி ”நான், எனது” என்று மட்டும் தான் அனைத்து தருணத்திலும் பேசினார்… 17. ஹிட்லர் ரேடியோவில் பேசுவதை மக்களுக்கு ஒலிப்பரப்புவதை அதிகம் விரும்பினார்… 18. ஹிட்லருக்கு ரகசிய காதலி இருந்தால் அவளை உளவு பார்க்க தனிகுழு வைத்து இருந்தார்… 19. “நண்பர்களே, தோழர்களே” என்ற வார்த்தையை தான் தனது பிரச்சாரங்களில் அதிகம் உபயோகம் செய்தார்… 20. ஹிட்லர் தன்னை புகைப்படம் எடுப்பதை அதிகம் விரும்பினார்… குறிப்பு: இந்தப் பதிவு முழுக்க முழுக்க ஹிட்லர் பற்றிய வரலாற்றுப் பதிவு மட்டுமே. வேறு யாராவது உங்கள் நினைவுக்கு வந்தால் வரலாறு பொறுப்பு அல்ல…. ——————————————————————-

Rate this:
vadivelu - chennai,இந்தியா
15-ஜூலை-201719:43:02 IST Report Abuse

vadiveluஇன்று ஜெர்மனி மிகவும் முன்னேறி விட்டது என்பதையும் சொல்லி இருக்கலாம். திண்டுக்கல் என்றாலே தெரியுதே........

Rate this:
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
15-ஜூலை-201721:49:40 IST Report Abuse

Agni Shivaநீங்கள் கூறியது அனைத்தும் சொக்கத்தங்கம் சோனியாவின் தந்தையின் தலைவர் என்பதை சொல்ல ஏனோ தவறி விட்டீர்கள். இனி இணைத்து பாருங்கள் அனைத்தும் கான் கிராஸ் கட்சியின் தலைவர்களுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்..குறிப்பாக நேருவிற்கு....

Rate this:
R.BALAMURUGESAN - Muscat,ஓமன்
17-ஜூலை-201712:40:14 IST Report Abuse

R.BALAMURUGESAN... உண்மை உண்மை திரு. Palanikumar Raju - Dindigul,இந்தியா, அவர்களே... சூப்பர்... ஆம், ஜெர்மனி நன்றாக முன்னேறிவிட்டது உண்மைதான்.... ஆனால் அது ஹிட்லரால் அல்ல, ஹிட்லருக்கு பிறகுதான்......

Rate this:
Karikalan Govind - Chennai,இந்தியா
15-ஜூலை-201718:14:39 IST Report Abuse

Karikalan Govindதமிழகத்தை பொறுத்த வரை இந்த BJP அரசின் மீது சில ஏமாற்றங்கள் இருந்தாலும் அகில இந்திய அளவில் பல எதிர்ப்புகளை மீறி மோடி சிறப்பாகவே செயல் பட்டு வருகிறார். பெரும்பாலான விமர்சனங்கள் அவர் மீது, மதம் கட்சி ரீதியான வெறுப்பால் சொல்லப்படுபவையே. ஏனென்றால் இப்போது விட்டால் பிறகு அவரை எதிர்ப்பது மிகவும் கடினமாகி விடும் என்று அவர்கள் அறிவர்.

Rate this:
g.s,rajan - chennai ,இந்தியா
15-ஜூலை-201717:20:24 IST Report Abuse

g.s,rajanமோடியின் ஆட்சியில் பொதுவாகப் பார்த்தால் ஒன்றும் இந்தியாவில் பெரிதாக நடக்கவில்லை ஒரு வேளை மற்ற நாடுகளில் ,வளர்ச்சி இருக்குமோ தெரியல ஆனால் இந்தியாவின் வளர்ச்சியும் வெறும் மாயையே என்பது போல் உள்ளது .என்னமோ ஏதோ வெட்டியாய் பல செயல்கள் நடக்கிறது .ஹூம். ஜி.எஸ்.ராஜன் சென்னை

Rate this:
g.s,rajan - chennai ,இந்தியா
15-ஜூலை-201717:08:20 IST Report Abuse

g.s,rajanஆனா மோடிஜியின் செயல்கள் நடவடிக்கைகள் விளம்பரங்கள் பரபரப்பாக இருக்குதே ஒழிய இந்தியாவுக்கு ஒன்றும் விளங்கவில்லை ஜி,எஸ்.ராஜன் சென்னை .

Rate this:
மேலும் 90 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement