சபாஷ் இளைஞர்கள் கூடி குளம் வெட்டி சாதனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சபாஷ் இளைஞர்கள் கூடி குளம் வெட்டி சாதனை

Updated : ஜூலை 16, 2017 | Added : ஜூலை 15, 2017 | கருத்துகள் (12)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
சபாஷ்  இளைஞர்கள் கூடி குளம் வெட்டி சாதனை

பெ.நா.பாளையம்:நிலத்தடி நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வந்ததால், அரசை எதிர்நோக்காமல், கோவை சின்னதடாகம் அருகே கிராம இளைஞர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து புதிய குளத்தை வெட்டியுள்ளனர். இது, பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், நஞ்சுண்டாபுரம் ஊராட்சிக்குட்பட்டது, உச்சையனுார் கிராமம். விவசாயமும், கால்நடை வளர்ப்புமே பிரதான தொழில்.
கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்ததால், விவசாயத்துக்கான ஆழ்குழாய் கிணறு, திறந்த வெளிக்கிணறுகளில், நீர்மட்டம் வெகுவாக குறைந்தது. நிலத்தடி நீர்மட்டம் உயர ஒரே வழி, கிராமத்தை ஒட்டியுள்ள பகுதியில் குளம் அமைப்பது தான் என, அவ்வூர் இளைஞர்கள் முடிவு செய்தனர்.

உச்சையனுார் கிராமத்தின் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து வரும், பெரிய பள்ளத்தின் அருகே உள்ள, 1.5 ஏக்கர் பரப்பில், பள்ளவாரியில் குளத்தை அமைக்க முடிவு செய்தனர்.
இதற்கு தேவையான நிதியை, முதல் கட்டமாக, தாமே செலவிடுவது என முடிவு செய்தனர். 15 நாட்களில் மண் அள்ளும் இயந்திரத்தின் உதவியுடன் குளத்தை வெட்டி, கரைகளை பலப்பலத்தினர்.

இதுகுறித்து, உச்சையனுார் இளைஞர் சண்முகவேல் கூறியதாவது:

உச்சையனுார் கிராம ஆழ்குழாய் கிணறுகளில், 24 மணி நேரம், நீர் வந்து கொண்டிருந்தது. ஆனால், கடந்த சில மாதங்களாக நான்கு மணி நேரம் கூட தண்ணீர் வருவதில்லை. இதனால், விவசாயம், கால்நடைகளுக்கு சிக்கல் ஏற்பட்டது. பிரச்னைக்கு காரணம், கிராமத்தையொட்டியுள்ள பகுதியில், 2 ஏக்கர் பரப்பில் இருந்த குளம் வற்றிப் போனது தான் என தெரிய வந்தது.

அது, தற்போது ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளது. அதை அகற்றுவது சிரமம் என்பதால், ஊருக்கு
ஒட்டிய பகுதியில் பள்ளவாரியில் இருந்த, 1.5 ஏக்கர் நிலத்தில் புதிய குளம் வெட்ட முடிவு செய்தோம்.இப்பணியில், 18 முதல், 40 வயது வரையுள்ள, 60 ஆண்கள் பங்கேற்றோம். இதில், அரசு, தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணிபுரிபவர்கள், தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்கள், சிறு வணிகம் செய்பவர்கள் உள்ளனர்.

இதனால், பணியை துவங்க, பெரிய அளவில் செலவு ஏற்படவில்லை. இதில், அவரவர் கொஞ்சம் பணத்தை போட்டு பணியை துவக்கினோம். முதல் கட்டமாக, 60 ஆயிரம் ரூபாய் மட்டும்
செலவானது. தற்போது, குளத்தை அதன் வடிவத்துக்கு கொண்டு வந்து விட்டோம். தற்போது, 7 அடி ஆழம் உள்ளது. இதை, 10 அடி வரை ஆழப்படுத்தவும், கரைகளை பலப்படுத்தவும் முடிவு செய்துள்ளோம். ஆனால், அதற்கு இன்னும் நிதி தேவைப்படும் என்பதால், இனி வெளியாட்
களிடம் நிதி திரட்டலாம் என முடிவு செய்துள்ளோம்.

தற்போது, தென்மேற்கு பருவமழை காலம் என்பதால் குளத்தில் நீர் சேரும் என எதிர்பார்க்கிறோம். பருவமழைக்கு பின், மீண்டும் பணியை முழுவீச்சில் துவங்கலாம் என திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு, சண்முகவேல் கூறினார்.

விவசாயம் மற்றும் கால்நடைகளைக் காப்பாற்ற, இந்த இளைஞர்கள் எடுத்துள்ள முயற்சி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அரசை நம்பி இருக்காமல், தாமே செலவு செய்து,
புதிதாக குளத்தை வெட்டத் துணிந்திருக்கும் இந்த இளைஞர்களின் பணி, தமிழக மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.'மன்னர் காலத்தில், நீர்நிலைகளை மக்களே பராமரித்து வந்த நிலையில், மறுபடியும் அதே நிலை ஏற்படும் சூழல் தென்படுகிறது' என, சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krish - Erode,இந்தியா
17-ஜூலை-201714:49:26 IST Report Abuse
Krish கோவை மாவட்ட சாக்கடை நீர் அனைத்தும் சூலூர் குளம், பள்ளபாளையம் குட்டைக்கு அனுப்பப்படுகிறது. சாக்கடை நீரை சுத்தப்படுத்தி பாப்பம் பட்டி, கள்ளபாளையம், செல்லக்கரைச்சல் ஆகிய கிராமங்களுக்கும், அங்கு உள்ள குளம், குட்டைகளுக்கு அனுப்பினால் விவசாயம்வளரும். இல்லை தனியார் நிறுவனங்கள் முயற்சித்தால் சிறப்பாகும். மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. அவிநாசி அத்திக்கடவு திட்டத்துக்கு 100 கோடி ஒதுக்கியது என்னவாயிற்று?
Rate this:
Share this comment
Cancel
R.சுதாகர் - Jeddah,சவுதி அரேபியா
16-ஜூலை-201717:52:01 IST Report Abuse
R.சுதாகர் // ஆழ்குழாய் கிணறுகளில், 24 மணி நேரம், நீர் வந்து கொண்டிருந்தது. ஆனால், கடந்த சில மாதங்களாக நான்கு மணி நேரம் கூட தண்ணீர் வருவதில்லை. இதனால், விவசாயம், கால்நடைகளுக்கு சிக்கல் ஏற்பட்டது. பிரச்னைக்கு காரணம், கிராமத்தையொட்டியுள்ள பகுதியில், 2 ஏக்கர் பரப்பில் இருந்த குளம் வற்றிப் போனது தான் என தெரிய வந்தது// எதைப்பற்றியும் கவலையில்லாமல் 24 மணி நேரமும் இலவச மின்சாரம் கிடைக்கிறது என்பதற்காக அளவு கடந்து தண்ணீரை இறைத்து பயிர் செய்துவிட்டு, இப்போது பழியை தூக்கி இரண்டு ஏக்கர் குளத்தின் மீது போடுவதா? அதெப்படி இரண்டு ஏக்கர் குளம் சுற்றுவட்டார அனைத்து பம்புசெட்டுகளுக்கும் தண்ணீரை தங்கு தடையின்றி அளித்தது? நேரடியாக தண்ணீரை உறிஞ்சியிருந்தால் கூட ஒரு வாரத்தில் குளம் வற்றி இருக்குமே... இயற்கையை நாம் மதிக்காவிடில் இயற்கை நம்மை பழிக்கும். மேலும் அரசு செய்ய வேண்டியதை அரசு தான் செய்ய வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் அதை கேள்வி கேட்பதே மக்கள் பொறுப்பு. அதை விடுத்து ஆளாளுக்கு இப்படி மண்வெட்டி தூக்கிக் கொண்டு கிளம்பினால், அரசை வேலை வாங்க நமக்கு துப்பில்லை என்று தான் அர்த்தம்.
Rate this:
Share this comment
Cancel
vns - Delhi,இந்தியா
16-ஜூலை-201717:29:48 IST Report Abuse
vns யாருடைய நிலம் ? இந்த "இளைஞர்கள்" தான் இருந்த இரண்டு ஏக்கர் குளத்தை ஆக்ரமித்தவர்கள் என்ற செய்தி நாளை வரும். நிலத்தை பணம் கொடுத்து வாங்கி அதில் குளம் வெட்ட வேண்டும்.. புறம்போக்கு அல்லது மற்றவர்களின் நிலத்தில் குளம் வெட்டுவது குற்றம்.
Rate this:
Share this comment
Cancel
Harinathan Krishnanandam - Chennai,இந்தியா
16-ஜூலை-201714:16:55 IST Report Abuse
Harinathan Krishnanandam அரசு அங்கங்கு உள்ளூர் பொது மக்கள் இளைஞர்கள் ஒன்று கூடி ஏரி,குளம் தூர் வாரி, சுத்தமாக வைக்க உதவி செய்து மூன்று மாதங்கள் கழித்து நன்கு பராமரிப்பு செய்யப்பட பொது நீர்நிலைகள் கண்டறிந்து அவற்றை நிறைவேற்றிய அனைவருக்கும் தலா ரூபாய் 2500 பரிசுகள் தந்து கௌரவிக்கலாம்
Rate this:
Share this comment
Manian - Chennai,இந்தியா
17-ஜூலை-201700:42:37 IST Report Abuse
Manianமொதல்லே 2,500 ரூவா புது நோட்டா சீக்கிரம் அனுப்பவும் - உழைத்தவன்...
Rate this:
Share this comment
Cancel
Rajkumar - Dammam,சவுதி அரேபியா
16-ஜூலை-201713:07:44 IST Report Abuse
Rajkumar இதன் பலன் என்ன தெரியுமா.. வெட்டியவர்கள் அனைவருக்கும் ஜெயில் .. பின்னே அந்த ஊரு எம்எல்ஏ / கலெக்டர் உதவி இல்லாம எப்படி வெட்டினீங்க, எப்படி தொறந்தீங்க, எப்படி அனுமதி இல்லாம நீங்களே பண்றீங்க.. அப்புறம் நாங்க எதுக்கு அப்படின்னு கிளம்புவாங்க.. சுருக்கமா சொல்லன்னுமினா - நல்லது அதுவும் நமக்கு நாமே பண்ணிகனுமினா கூட இவங்க உதவி அல்லது அப்ரூவல் (வேறென்ன கமிஷன் அல்லது ஒரு போஸ்டர்) வேணும்
Rate this:
Share this comment
Cancel
Ramaswamy Sundaram - Mysore,இந்தியா
16-ஜூலை-201712:59:42 IST Report Abuse
Ramaswamy Sundaram சபாஷ் இளைஞர்களே...எல்லாவற்றிக்கும் அரசாங்க உதவிக்கு கை ஏந்தாமல்.. அதிகாரிகளுக்கு லஞ்சம் அழாமல்... நீங்களே சுய முயற்சியால் ஒரு மகத்தான காரியத்தை செய்து முடித்துவிட்டீர்கள். இதை அனைத்து கிராம இளைஞர்களும் பின்பற்றினால் தமிழ்நாடே வளம் கொழிக்கும் பூமி ஆகிவிடுமே?
Rate this:
Share this comment
Cancel
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
16-ஜூலை-201712:58:01 IST Report Abuse
Kuppuswamykesavan பாராட்டுக்கள், அனைத்து ஊர்களிலும் இப்படி நடந்தால், தமிழகம் பசுமையால் நிறையுமே?.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
16-ஜூலை-201709:33:42 IST Report Abuse
Srinivasan Kannaiya குளம் வெட்டினால் மட்டும் போதாது. அருகில் உள்ள ஆற்றில் இருந்து மண் எடுப்பதை தடை செய்யவேண்டும். அப்பொழுதுதான் நிலத்தடி நீர்மட்டம் ஏறும். குளத்திலும் நீர் நிலைத்து நிக்கும்...
Rate this:
Share this comment
Cancel
mani k - trichy,இந்தியா
16-ஜூலை-201704:31:24 IST Report Abuse
mani k ஊருக்கு ஊர் ஒரு அற போராட்டம் ஏற்பட்டு அது ஒரு செயல் வடிவமாக மாறி பயன் அளிக்கட்டும். நன்றி அவ்வூர் மக்களுக்கு.கி.மணி.திருச்சி.
Rate this:
Share this comment
Cancel
Manian - Chennai,இந்தியா
16-ஜூலை-201702:04:42 IST Report Abuse
Manian ஐய்யா, அடுத்த ஆக்கிரமிபிக்கு ஐடியா கெடச்சுப் போச்சு இன்சுபெக்டரு ஏமாங்கதனை ஜல்தியா பாத்துட்டு வாங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை