சசிகலாவுக்கு சிறப்பு வசதி; உதவிய தமிழக பிரமுகர்கள்? Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
சசிகலாவுக்கு சிறப்பு வசதி
உதவிய தமிழக பிரமுகர்கள்?

சசிகலாவுக்கு, பெங்களூரு சிறையில் சிறப்பு வசதிகள் கிடைக்க, தமிழக காங்., பிரமுகர்கள் சிலர், திரைமறைவில் உதவியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், காங்., துணைத் தலைவர் ராகுல் அதிருப்தி அடைந்துள்ளார்.

 சசிகலா, Sasikala,சிறப்பு வசதி,Special Facility, தமிழக பிரமுகர்கள், Tamil Nadu personalities,பெங்களூரு சிறை, Bangalore Jail,  தமிழக காங்கிரஸ் பிரமுகர்கள், Tamilnadu Congress , Personalities,காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், Congress Vice-President Rahul, சொத்து குவிப்பு வழக்கு,Property accumulation case,  பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை,Bengaluru Parupana Agrahar Jail,டி.ஐ.ஜி ரூபா ,  DIG Rupa,முதல்வர் சித்தராமையா, Chief Minister Sitaramaya,

சொத்து குவிப்பு வழக்கில், நான்காண்டு சிறை தண்டனை பெற்ற சசிகலாவுக்கு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சிறப்பு வசதிகள் செய்து தரப்பட்டதாகவும், அதற்கு, சிறைத் துறை உயர் அதிகாரிகள், இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும், டி.ஐ.ஜி., ரூபா குற்றம் சாட்டினார்.

உத்தரவு


இது குறித்து விசாரணை நடத்த, கர்நாடக முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையில், தமிழக காங்., கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் சிலர், சசிகலா வுக்கு சிறையில், சிறப்பு வசதிகள் கிடைக்க

காரணமாக இருந்ததாகவும், அதற்காக, சிறை அதிகாரிகள் மற்றும் கர்நாடக மாநில காங்., பிரமுகர்களை ரகசியமாக சந்தித்து பேசியதாகவும், அம்மாநில போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இது குறித்து, காங்கிரஸ் வட்டாரம் கூறியதாவது: கர்நாடகாவில், விரைவில், சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நேரத்தில், சசிகலாவுக்கு சிறையில் சொகுசு வசதிகள் அளிக்கப்பட்ட விவகாரம், அம்மாநில முதல்வரான, சித்தராமையா தலைமையிலான, காங்கிரஸ் அரசுக்கு தலை வலியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே, ஜெ., மரணத்தில் மர்மம் உள்ளது என, சிலர் தரப்பில் செய்யப்பட்ட பிரசாரம் உண்மையாக இருக்குமோ என, கர்நாடகாவில் வாழும், 4 சதவீத பிராமண சமுதாயத்தினரும், 3 சதவீத ஓட்டுகளை கொண்டுள்ள தமிழர்களும் நம்புகின்றனர்.
இந்த நேரத்தில், சசிகலா விவகாரம் எழுந்துள்ளது, காங்கிரஸ் மீதான அவர்களின் அதிருப்தியை அதிகரித்துள்ளது. அந்த அதிருப்தியை சாதகமாக்கி, 7 சதவீத ஓட்டுகளையும் தங்கள் பக்கம் திருப்ப, கர்நாடக மாநில பா.ஜ., மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் முற்பட்டு உள்ளன.

திரைமறைவு:


இதற்கிடையில்,சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் கிடைக்க, கர்நாடக மாநில காங்., பிரமுகர்கள்

Advertisement

மற்றும் சிறை அதிகாரிகளின் உதவியை, தமிழக காங்., பிரமுகர்கள் நாடியதாகவும், இது தொடர்பான திரைமறைவு வேலைகளில் அவர்கள் ஈடுபட்டதாகவும், தகவல் வெளியாகி உள்ளது.
அதனால், சசிகலாவுக்கு ரகசியமாக உதவிய, தமிழக காங்., பிரமுகர்கள் குறித்து, விசாரணை நடத்த, கர்நாடக போலீசார் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. எனவே, கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், சசிகலாவுக்கு உதவிய, தமிழக காங்., பிரமுகர்கள் மீது, ராகுல் கடும் அதிருப்தி அடைந்துள்ளார்.இவ்வாறு காங்., வட்டாரம் கூறியது.

- நமது நிருபர் -


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
17-ஜூலை-201717:16:43 IST Report Abuse

இந்தியன் kumarகாங்கிரஸ் கர்நாடகாவில் மண்ணை கவ்வ வேண்டும் , தென் இந்தியாவில் காங்கிரஸ் ( ஊழல் ) துடைத்தெறிய பட வேண்டும்.

Rate this:
KKsamy - Jurong,சிங்கப்பூர்
17-ஜூலை-201722:45:19 IST Report Abuse

KKsamyஆனா நிலைமை வேறயால இருக்கு, புதிய இந்தியா பிறக்கும் என்று நம்பி ஓட்டு போட்டவங்களெல்லாம் பிறந்த புதுப்புது இந்தியாக்களை பார்த்து மெர்சலாயிட்டாங்கன்னா பார்த்துக்கங்களே...

Rate this:
r.sundaram - tirunelveli,இந்தியா
17-ஜூலை-201716:18:39 IST Report Abuse

r.sundaramபாவம் தமிழகத்தில் தான் ஒன்றும் செய்யமுடியாமல் இருக்கிறார்கள், இதிலாவது கொஞ்சம் பார்க்கட்டுமே.

Rate this:
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
17-ஜூலை-201716:09:59 IST Report Abuse

Thiagarajan Kodandaramanராகுலுக்கு தெரிஞ்சு என்ன ஆவப்போது கிடைக்கும் போது கல்லா கட்டவேண்டியது தானே .பொழைக்க தெரிஞ்சவங்க

Rate this:
Maverick - Corpus Christii,யூ.எஸ்.ஏ
17-ஜூலை-201715:51:05 IST Report Abuse

Maverickகாங்கிரஸ் தலைவர் பதவிக்கு வேற ஆளே கிடைக்கலையா? எல்லா கட்சியிலயும் ரெண்டு ரெண்டு வருஷம் இருந்த இந்த ஆளு தான் கிடைச்சாரா? கருமம்...அப்புறம் எப்படி கட்சி உருப்படும்..மிஸ்டர் பப்பு ?

Rate this:
த.இராஜகுமார் - tenkasi,இந்தியா
17-ஜூலை-201715:02:49 IST Report Abuse

த.இராஜகுமார் இன்னும் 10 நாளைக்கு சின்னமா செய்திதான்... எப்படியும் விடுதலை ஆவது உறுதி.

Rate this:
Maverick - Corpus Christii,யூ.எஸ்.ஏ
17-ஜூலை-201715:40:41 IST Report Abuse

Maverickபொச கேட்ட பய..லூசு தனமா சொல்லுதான்....வேற யாரும் கோச்சுக்காதீய.....

Rate this:
த.இராஜகுமார் - tenkasi,இந்தியா
17-ஜூலை-201719:11:18 IST Report Abuse

த.இராஜகுமார் சின்னமா வெளியில் வருவது உறுதி ஆகிவிட்டது அவர் வெளியில் வருவதற்குள் அவர் பெயரை கெடுப்பதற்கு பிஜேபி ஆட்டம் போடுகிறது அவ்ளோதான்....

Rate this:
தேச நேசன் - Chennai,இந்தியா
17-ஜூலை-201714:43:49 IST Report Abuse

தேச நேசன் இதில் சாதியை நுழைக்கவேண்டாம் ஜெயாவை எதிர்த்து வாதாடிய ஆச்சார்யா தனது சாதி என்பதற்காக ஜெயா மீது கருணையா காட்டினார்? இதுபோல கருணாநிதியை எதிர்த்து அவரதுஇனத்தார் வாதாடுவது நடக்குமா ?

Rate this:
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
17-ஜூலை-201713:54:45 IST Report Abuse

Vaithilingam Ahilathirunayagamதிகாருக்கு அனுப்புவதே களி உண்ண வசதியாக இருக்கும்.

Rate this:
krishna - cbe,இந்தியா
17-ஜூலை-201711:30:42 IST Report Abuse

krishnaகாங்கிரஸ் என்றாலே ஊழல் பேர்வழிகள் கட்சி என்றாகிவிட்டது.

Rate this:
இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா
17-ஜூலை-201711:30:20 IST Report Abuse

இடவை கண்ணன் கர்நாடகா புகழேந்தி, திருநாவுக்கரசர், வேலுச்சாமி....இவர்கள்தான் கண்டிப்பாக இந்த உதவிகளுக்கு ஏற்பாடு செய்திருக்கணும்....

Rate this:
John - Chennai,இந்தியா
17-ஜூலை-201711:13:44 IST Report Abuse

Johnதிருநாவுக்கரசரின் வேலை..இவருக்கு மாபியா கும்பல் பல கோடிகள் கொடுத்ததாக தகவல்.. சாமி புரோக்கர் வேலை பார்த்ததாகவும் தகவல்..

Rate this:
மேலும் 30 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement