முத்திரை தாள் மோசடி தெல்கிக்கு உதவியாளர்களாக சிறை கைதிகள் Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
முத்திரை தாள் மோசடி தெல்கிக்கு
உதவியாளர்களாக சிறை கைதிகள்

பெங்களூரு: முத்திரை தாள் மோசடி வழக்கில், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை பெற்று வரும் அப்துல் கரீம்லால் தெல்கிக்கு, சிறைத்துறை விதிமுறைகளை மீறி, உதவியாளராக விசாரணை கைதிகள் நியமிக்கப்பட்டுள்ள, வீடியோ காட்சிகள் வெளியானதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 முத்திரைதாள், stamp paper, மோசடி,fraud, தெல்கி,Telgi, ,கைதிகள், prisoners, பெங்களூரு, Bengaluru, முத்திரை தாள் மோசடி , stamp paper fraud, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை,  Bangalore Parapana Akrahar jail, அப்துல் கரீம்லால் தெல்கி,  Abdul Karimal Telgi, சிறைத்துறை , prison department, எச்.ஐ.வி.,  HIV, நீரிழிவு,diabetes, ரத்த அழுத்தம்,blood pressure,

முத்திரை தாள் மோசடி வழக்கில், அப்துல் கரீம்லால் தெல்கி, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.இவருக்கு, எச்.ஐ.வி., நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற பல நோய்கள் உள்ளன. இதனால், கடந்த ஆறு மாதங்களுக்கு

முன், நடக்க முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது, தனக்கு உதவியாளர்கள் தேவை என்று நீதிமன்றத் தில் முறையிட்டார். நீதிமன்ற உத்தரவின்படி, 'வீல் சேர்' வசதியும், உதவியாளர்களும் வழங்கப்பட்டது.

சமீபத்தில், சிறைக்கு சென்ற,சிறைத்துறை, டி.ஐ.ஜி., ரூபா, பல முறைகேடுகளை கண்டறிந்துள்ளார்.இது தொடர்பாக, சிறைத்துறை, டி.ஜி.பி., சத்யநாராயண ராவுக்கு அளித்துள்ள அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

தெல்கி, தனியாக நடக்கிறார். ஆனாலும், அவருக்கு மூன்று முதல் நான்கு உதவியாளர்கள் அனுமதிக் கப்பட்டுள்ளனர். அவர்கள், தெல்கிக்கு, கால், கை, முதுகு, அமுக்கி விடுவது உட்பட பல வேலைகள் செய்கின்றனர்.
இந்த காட்சிகளை, நீங்களும், உங்கள் அறையிலிருந்து, கண்காணிப்பு கேமராவில் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். தெல்கி போன்ற தண்டனை அனுபவித்து வரும் கைதி களுக்கு விசாரணை கைதிகள், உதவி செய்வது, சிறைத்துறை விதிமுறை மீறப்பட்டும், நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை.

Advertisement


இது தவறு என்று, அதிகாரிகளுக்கு, 20க்கும் மேற்பட்ட முறை கூறியும், தொடர்ந்து நடந்து வருகிறது. தெல்கி, நன்றாக நடப்பதால், நீதி மன்ற கவனத்துக்கு கொண்டு சென்று, உதவி யாளர்களை திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், பரப்பன அக்ரஹாரா சிறை யில், தெல்கிக்கு ஒதுக்கப்பட்ட அறையில், மெத்தை மீது அவன் படுத்திருப்பதும், அருகில் ஒருவர் இருக்கும் வீடியோ காட்சிகளும், மீடியாக்களில் நேற்று வெளியானதால் போலீஸ்வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-ஜூலை-201722:41:35 IST Report Abuse

சுவாமி சுப்ரஜனாந்தாSo in future all politicians and culprits can demand Parapana akrahara prison.

Rate this:
Karuthukirukkan - Chennai,இந்தியா
17-ஜூலை-201719:45:27 IST Report Abuse

Karuthukirukkanஆமா ஆமா இந்த மாதிரி இந்தியாவில் காசு குடுத்தா வசதி செய்து கொடுக்கும் முதல் மற்றும் ஒரே சிறை பெங்களூரு தான் ..

Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
17-ஜூலை-201718:14:23 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்காவி கப்பிகள் காங்கிரசை திட்டி கொட்டுகிறார்கள். இதற்கு முன் ஆட்சியில் இருந்தது இதே காவி கப்பிகள் கட்சி தான். இந்த நிலைமை அபோதும் இப்படியே தான் இருந்துள்ளது. ஊழலில் உலகிலேயே முதல் இடத்துக்கு கொண்டுவந்த பெருமை இந்த காவிப் பண்டாரங்களின் ஆட்சியில் தான் என்பதை மறந்து கூவுகிறார்கள்..

Rate this:
Balaji - Khaithan,குவைத்
17-ஜூலை-201718:03:07 IST Report Abuse

Balajiபணம் படைத்தவன் சிறை சென்றாலும் சொகுசாகத்தான் இருக்கிறான் என்பதை இனி எதை வைத்து மறைக்குமோ கர்நாடக அரசு தெரியவில்லை...... இது அங்கு மட்டும் தான் நடக்கிறது என்று சொல்லவில்லை..... அனைத்து இடங்களிலும் இதுபோன்ற சட்ட மீறல்கள் பணம் படைத்தவர்களுக்காக நடந்து கொண்டு தான் இருக்கிறது............

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
17-ஜூலை-201716:56:41 IST Report Abuse

Pugazh Vஇவர்களே இந்த போடு போடறாங்களே, இனி மல்லையாவை வேற கூட்டிகிட்டு வந்து விசாரணை பண்ணி ஜெயிலில் போட்ட அவர் ஜெயில் உள்ளேயே ஒரு பாரே துறந்திடுவார்.

Rate this:
r.sundaram - tirunelveli,இந்தியா
17-ஜூலை-201716:03:49 IST Report Abuse

r.sundaramபணம் பத்தும் செய்யும் என்பது எவ்வளவு உண்மை. உம்மைப்பிடித்த சனி என்னையும் சேர்த்துபிடித்தது என்கிற மாதிரி, சின்னம்மா கூட சிறையில் இருந்ததால் இவரும் மாட்டிக்கப்போகிறார்.

Rate this:
Krishnan Periyasamy - Sharjah,ஐக்கிய அரபு நாடுகள்
17-ஜூலை-201714:27:50 IST Report Abuse

Krishnan Periyasamyஇவங்களே இவ்வளுவுனா நம்ம சதிகலா எவ்வளவு சுகமா இருந்திருப்பாங்க...

Rate this:
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
17-ஜூலை-201711:17:41 IST Report Abuse

D.Ambujavalliமக்கள் செலவில் மஹா சொகுசுவாழ்க்கை அனுபவிக்கும் இடத்தின் பெயர்தான் 'சிறைச்சாலை '. புது இலக்கணம்

Rate this:
ARUL - chennai,இந்தியா
17-ஜூலை-201710:50:40 IST Report Abuse

ARULபடத்தில் இருப்பது சிறையா? பணக்கார விடுதி அறையா? காவல் துறையே இது முறையா? காசு பார்க்கின்ற வெறியா?

Rate this:
RL Nandhakhumar - coimbatore,இந்தியா
17-ஜூலை-201710:37:51 IST Report Abuse

RL Nandhakhumarஇதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் அரசியலில் எல்லோருமே கூட்டு களவாணிகளாகி விடுகின்றார்கள்.

Rate this:
மேலும் 15 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement