கமலுக்கு ஸ்டாலின் ஆதரவு; அமைச்சர்களுக்கு கண்டனம் Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
கமலுக்கு ஸ்டாலின் ஆதரவு
அமைச்சர்களுக்கு கண்டனம்

சென்னை: நடிகர் கமலை மிரட்டிய அமைச்சர் களுக்கு, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தனக்கு ஆதரவு தெரிவித்துள்ள ஸ்டாலினுக்கு, கமல் நன்றி தெரிவித்துள்ளார்.
முதல்வர் பழனிசாமி தலைமையிலான, அ.தி.மு.க., அரசு மீது, சமீபத்தில், நடிகர் கமல் ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தினார். 'குற்றச் சாட்டுக்கு ஆதாரம் இருக்கிறதா... ஆதாரம் இல்லாமல் கமல் பேசக் கூடாது. அவர் மீது அவதுாறு வழக்கு தொடர்வோம்'என, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, நேற்று முன்தினம் கூறினார்.
அதுபோல, 'கமல் ஒரு ஆளே கிடையாது' என, அமைச்சர் அன்பழகனும், 'கமல் மீது

வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும்' என, அமைச்சர் சி.வி.சண்முகமும் தெரிவித்தனர். தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின், கமலுக்கு ஆதரவுக்கரம் நீட்டி உள்ளார்.
இது குறித்து ஸ்டாலின் கூறியதாவது: மக்கள் கருத்தை பிரதிபலித்த கமலை, சட்டத்தை காட்டி அமைச்சர்கள் மிரட்டுகின்றனர். ஆட்சியாளர்கள் தங்கள் மீதான விமர்சனங்களில் உள்ள உண்மை களை தெரிந்து, தவறுகளை திருத்தி கொள்ள வேண்டும்; அது தான் ஜனநாயக ஆட்சி.

கமல் மீது வன்மம் கொண்டு கருத்துதெரிவித்து, விமர்சிப்பது, ஜனநாயகத்தின் அடிப்படை உரிமையை பறிக்கும் செயல். கமலின் கருத்து, தமிழக மக்களின் ஒட்டு மொத்த கருத்தாக உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். உடனே, கமல் தன்,

Advertisement

 கமலுக்கு,ஸ்டாலின்,ஆதரவு,அமைச்சர்களுக்கு,கண்டனம்

'டுவிட்டர்' சமூக வலைதளத்தில், 'அன்புச் சகோதரர் ஸ்டாலின் அவர்கட்கு, நன்றி தவிர உடனே ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை.

என் ஆதங்கங்களில் பல உங்கள் கோப செய்தி யிலும் கூட தென்பட்டதில் எனக்குப் பெரிய ஆறுதலே. ஒவ்வொரு வாக்காளனிலும் ஒரு தலைவன் இருக்கின்றான் என்பதை உணர மறுப்பவர், தலைவர்களாக நீடிக்கும் கனவு ஜனநாயகத்தில் பலிக்காது. பலிக்கவும் கூடாது', என தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (65)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ராமசாமி - விருத்தாச்சலம்,பிரிட்டிஷ் கன்னித் தீவுகள்
17-ஜூலை-201723:49:03 IST Report Abuse

ராமசாமிஇந்த விஷயத்தில கமல் தான் சூப்பர் ஸ்டார் தமிழ் மக்கள் இதற்காக உங்களை ஆதரிப்பார்கள். இந்த மானங்கெட்ட மந்திரி பசங்க ஏதாவது தெரிஞ்சாதானே வேலை செய்வானுங்க எல்லாம் ஜாதியை வச்சி மந்திரியான முட்டாள்கள். மக்களே இதுல ஒன்றை கவனியுங்கள் கட்சி ஆரம்பிச்சி முதல்வர் ஆவேன்னு சொன்ன நடிகர் கப்சிப்ன்னு இருக்கார், ஆனா எதுலயும் சேர மாட்டேங்கிற நடிகர் பட்டைய கிளப்புறார்

Rate this:
Krish Swam - CHENNAI,இந்தியா
17-ஜூலை-201720:02:52 IST Report Abuse

Krish Swamகமல் உலக நாயகன் அல்ல ஒரு மஹா உளறல் நாயகன்.

Rate this:
Gopalakrishnan - Kuzhumani,இந்தியா
17-ஜூலை-201718:47:45 IST Report Abuse

Gopalakrishnanவாசகர்களே நான் ஆரம்பத்தில் இருந்தே கூவி கொண்டு உள்ளேன் யாரும் நம்ப மாட்டேன் என்கிறீர்கள் ...எனக்கு இன்னும் சந்தேகம் தான் . திருடர்கள் முன்னேற்ற கட்சியில் இருந்து இவன் பணம் வாங்கியிருப்பானோ என்று .... திருடர்கள் முன்னேற்ற கட்சியின் சதிசெயல் ... திரு ரஜினி அவர்கள் அரசியல் பிரவேசத்தை தடுக்க இவன் உள்ளே இறக்கப்பட்டுள்ளான் .... admk இவ்வளவுகாலம் உயர் ஜாதி கையில் இருந்தது ... இப்பொது திருடர்கள் முன்னேற்ற கட்சின் நேரம் ... உயர்ஜாதிக்கையில் போய்விடும் . பாவம் தளபதிக்கு பணத்தை எண்ணதான் தெரியும் மக்களின் மனதை எண்ண தெரியாது

Rate this:
kowsik Rishi - Chennai,இந்தியா
17-ஜூலை-201718:24:51 IST Report Abuse

kowsik Rishiஇந்த கமல் மாறனை ராஜாவை கனிமொழி பற்றி இல்லை மு.கருணாநிதி ஆட்சியில் நடந்த பற்றி ஒன்றும் பேசவில்லை - அண்ணாதிமுக ன்னா இவருக்கு இளைத்ததா கமல் மு.கருணாநிதி ஸ்டாலின் கூட்டம் உங்களுக்கு ஆதரவு சொல்லிவிட்டது இல்லையா இனி நீங்கள் வடிவேலு போலெ தான் முடிந்தது உங்கள் கதை

Rate this:
Balaji - Khaithan,குவைத்
17-ஜூலை-201717:29:42 IST Report Abuse

Balajiஎன்ன தான் கமல் அவர்கள் சொன்னது சரியாக இருந்தாலும் அதைப்பற்றி விமர்சித்து தான் யோக்கியன் என்று பறைசாற்றிக் கொள்ளவே தளபதி விழைகிறார் என்பது தெளிவாக தெரிகிறது..........

Rate this:
Nakkal Nadhamuni - Chennai,இந்தியா
17-ஜூலை-201715:11:00 IST Report Abuse

Nakkal Nadhamuniகமல் ரஜினியை பார்த்து சூடு போட்டு கொள்கிறார்... ரஜினியே எந்தளவு அரசியலில் நிற்க போகிறார் என்று தெரியாது... கமலின் ஒழுக்கம் கெட்ட தனத்துக்கு இன்றைய அரசியல் ஏதுவானது தான்... ஆனால் அவருக்கு சினிமா தெரிந்த அளவு அரசியல் தெரியாது... இவர் பேசுவது யாருக்கும் புரியப் போவதில்லை... இவர் தனக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச பேரையும் சிதைத்து கொண்டு ஓடப்போகிறார்... ஸ்டாலின் தலைமையில் அரசியல் விளங்காது... இப்பொழுது அவர் தன அப்பாவின் பேரைவைத்து குளிர் காய்ந்து கொண்டிருக்கிறார் ... தாத்தாவுக்கு பிறகு இவருடைய மதிப்பு இன்னும் கீழே போகும்..

Rate this:
Karuthukirukkan - Chennai,இந்தியா
17-ஜூலை-201719:41:01 IST Report Abuse

Karuthukirukkanஒழுக்கம் கெட்ட தனம் ?? இதுக்கு என்ன அர்த்தம் ஒழுக்க சீலரே ??...

Rate this:
Snake Babu - Salem,இந்தியா
17-ஜூலை-201714:26:04 IST Report Abuse

Snake Babu//அஞ்சி அஞ்சிச்சாவார் இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே என்பதற்கிணங்க எல்லோரும் பயந்து பயந்து வாய்மூடி அநியாயங்களை பொறுத்துக் கொண்டிருக்கையில் யாருக்கும் அஞ்சாமல் கருத்துக்கள் சொல்லி வரும் கமலுக்கு வாழ்த்துக்கள். நீங்கள் சொல்வது உண்மை. ஒவ்வொரு வாக்காளனும் ஒரு தலைவன் தான். நம் தமிழகத்தில் பிறந்திருக்கும் ஒவ்வொரு கருவுக்கும் உள்ள ஆற்றல் வெள்ளிடைமலை. America ஐரோப்பா ஆஸ்திரேலியா எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள். திறமை, உழைப்பு, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு இவை எல்லாம் கொண்டு ஒரு ஜீவன் உழைக்கிறது என்றால் அது நிச்சயம் தமிழன் தான். எங்கள் துறையில் பல மாநிலத்தவரோடும், பல நாட்டவரோடும் வேலை பார்க்கும் அனுபவங்கள் உண்டு. புனே வில் டீம் இருக்கும், சொல்லாமல் கொள்ளாமல் மூன்று வாரம் விடுப்பு எடுத்துக்கொண்டு யாரிடமும் அனுமதி பெறாமல் செல்வார்கள். வேலை என்னவாகும் என்ற அக்கறை அவர்களுக்கு இல்லை. எவனோ சாகட்டும் என்ற எண்ணம் தான். ஆந்திராவில் டீம் இருக்கும், அவர்களுக்கு பணம் ஒன்று தான் குறி, ஒவ்வொரு ப்ராஜெக்ட்-க்கும் பதவி உயர்வு அல்லது வெளிநாட்டு வாய்ப்பு கொடுக்க வேண்டும். இரண்டும் இல்லை என்றால் அவர்கள் ஆபீஸ்-க்கே வர மாட்டார்கள். டெல்லியை எடுத்துக்கொள்வோம் - தன் குடும்பம், தன் பிரச்சினைகள், இவை தான் முக்கியம். ஆறு மணியானால் யார் எக்கேடு கெட்டாலும் போட்டு விட்டு சென்று விடுவார்கள். ஒரு வேளை தனக்கு சொந்தம் என்ற எண்ணமும் இல்லாதவர்கள். கேரளாக்காரர்கள் திறமையானவர்கள், ஆனால் அவர்களால் தமிழனின் வேகத்துக்கு உழைக்க முடியாது. எந்த பலனும் எதிர்பாராது நேரம் காலம் பார்க்காது கருமமே கண்ணாக உழைப்பவன் தமிழன். ஆனால் இந்த தமிழினம் மற்ற மாநிலத்தவரையும் நாட்டினரையும் நேசிக்கிறது. எனவே தமிழ் தமிழ் என்று சொல்லி ஏனைய சகோதர சகோதரிகளிடம் இருந்து தமிழனை பிரித்து விடாதீர்கள். இதற்கு சமீபத்திய ஏ. ஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட கலவரம் ஒரு உதாரணம். அவரை எல்லாம் மொழி என்ற வட்டத்துக்குள் அடைக்க முடியாது. தமிழ் தமிழ் என்று சொல்லி நம்மை மற்றவர்கள் வெறுக்கும் நிலைக்கு ஆளாக்கி விடாதீர்கள். நம்மை உலகம் மதிக்கிறது. நாம் மற்றவர்களுக்கு கொடுத்து மகிழ்பவர்கள். தானே உண்டு மகிழ்பவர்கள் அல்ல. நம்மை தாழ்த்தி சுய கெளரவம், சுய நலம் என்ற வட்டத்துக்குள் யாரும் அடைத்து விட வழி வகை செய்யாதீர்கள். பாரையே ஆளத்தகுதி படைத்தவர்கள் நாம். எல்லோரும் இன்புற்றிருப்பதுவேயல்லால் வேறொன்றறியேன் பராபரமே.... /// அருமை அய்யா. நன்றி வாழ்க வளமுடன்

Rate this:
Thiyagarajan - Bangalore,இந்தியா
17-ஜூலை-201718:32:21 IST Report Abuse

Thiyagarajanயார் தமிழகத்தில் அஞ்சுகிறது, யார் யார் எல்லாம் அரசுக்கு எதிராக கருத்து சொல்கிறார்கள் இவர் சொல்லாமல் இருந்தால்தான் தப்பு...

Rate this:
Chidambaranathan Ramaiah - usilampatti,இந்தியா
17-ஜூலை-201720:16:39 IST Report Abuse

Chidambaranathan Ramaiahஇப்ப என்னதான் சொல்லவரிங்க கமல் பேச்சு மாதிரியே இருக்கே...

Rate this:
Karuthukirukkan - Chennai,இந்தியா
17-ஜூலை-201713:09:39 IST Report Abuse

Karuthukirukkanஎப்பா இங்கே திமுகவின் மீது தான் எவ்வளவு வெறுப்பு .. ஒரு நடிகரை சட்டத்துறை அமைச்சர் மிரட்டி பேட்டி கொடுத்து கொண்டு இருக்கிறார் .. அதை கண்டித்தால் , அதே திமுகவின் மீதே பொங்கல் .. இதே ஜெயலலிதா தானே 2011 தேர்தல் பிரச்சாரத்தில் நடிகர்களை துன்புறுத்துது திமுக என்று சொல்லி ஓட்டு கேட்டார் ?? ஆனால் இந்த ஆட்சிக்கு திமுக 100 மடங்கு பரவா இல்லை போல ..

Rate this:
Jaya Ram - madurai,இந்தியா
17-ஜூலை-201711:49:36 IST Report Abuse

Jaya Ramகாரியம் ஆகவேண்டும் என்றால் கழுதையின் காலை கூட பிடிப்பவர்கள் தான் இந்த திமுகக்காரர்களின் வழக்கமே ஏற்கனவே அப்பாவிற்கு 60 ஆண்டு சாதனை என்று கூறி ஒரு கூட்டணிக்கு வித்திட்டார் அதிலே சறுக்கல் போலும் இப்போ கமலுக்கு ஆதரவு தருவதன் மூலம் அவரது ரசிகர்களை தங்களுக்கு ஆதரவாக்கலாம் என்று திட்டம் போட்டு இக்கருத்தினை தெரிவித்துள்ளார். ஏற்கனவே நடிகன் நாடாளமுடியுமா என்று எம் ஜி ஆரை பார்த்து இவருடைய அப்பா கேட்டார்? ஆனால் இப்போ நடிகர்களை வைத்து அரசியல் செய்யும் அளவிற்கு தி முக இறங்கிவிட்டது ஏனெனில் அவர்களிடம், நேர்மையில்லை, பொதுவாழ்வில் தூய்மை இல்லை, முக்கியமாக கொள்கை என்பதே இல்லை, கேட்டால் மாநில சுயாட்சிதான் எங்கள் கொள்கை என்பர் ஆனால் இவர்களின் ஆட்சிகாலங்களில்தான் மாநிலங்களின் அணைத்து உரிமைகளும் பறிபோயின, முக்கியமாக தமிழகத்தின் நிலப்பரப்புகளில் ஒன்றான கச்சத்தீவு தமிழக மக்களின் கருத்துகேட்காமல் இல்லாமல் இலங்கைக்கு கொடுக்கப்பட்டது, இதேபோல் கல்வியிலும் நம்மை கேட்காமல் அவர்கள் இஷ்டப்படி நடந்து கொள்ள விட்டதின் விளைவு இப்போ நீட் தேர்வினை சந்திக்க வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது, கரையான் புற்றெடுக்க கருநாகம் குடிபுகுவது போல் நம்முடைய வரிப்பணங்களில் கட்டப்பட்டுள்ள இந்த மருத்துவக்கல்லூரிகளில் நமது பிள்ளைகள் படிக்க வழியில்லாமல், வேறு மாநிலங்களில் இருந்து இங்கு படிக்க அனுப்புவார்களாம் நாம் அதை ஏற்று கொண்டு விரல் சூப்பவேண்டுமாம் இதை திமுக 1965 இல் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் போல் நடத்தியிருந்தால் கூட மன்னித்திருக்கலாம் ஆனால் அதற்க்கு அறிக்கைகள் கூட இல்லை இவர்கள் தான் மீண்டும் ஆட்சியினை பிடிக்க நினைக்கிறார்கள், இன்னொரு செய்தி தற்போது குளம் தூர் வாருகிறேன் என்று கூறி அதில் உள்ள வண்டல் மண்களை எல்லாம் எடுத்து திமுகவினர் அங்கங்கே விற்பனை செய்வதாக கேள்வி இப்படி ஆட்சியில் இல்லாத போதே செய்கிறவர்கள் பின் எப்படி ஆட்சி நடத்துவாங்க வேண்டாமப்பா இவர்கள் ஏற்கனவே இவர்களால் கப்பங்கிழங்கை தின்றோம், கல்விக்கு கட்டணம் செலுத்த முடியாமல் தவிக்கிறோம், குடிதண்ணீரை விலைக்கு, வாங்குகிறோம் இன்னும் இவர்கள் கையில் ஆட்சி போனால் என்ன தின்போம் என்ன குடிப்போம் என்பதே கேள்விக்குறியாகிவிடும்

Rate this:
Karuthukirukkan - Chennai,இந்தியா
17-ஜூலை-201713:04:41 IST Report Abuse

Karuthukirukkanஓஹோ ஆமா ஆமா கமலுக்கு ரசிகர்கள் பல கோடி பேர் இருக்கிறார்கள் .. அதை நம்பி தான் திமுக இருக்கு .. ஏன்யா இப்பிடி காழ்ப்புணர்ச்சி ??...

Rate this:
Ramanathan V - chennai,இந்தியா
17-ஜூலை-201715:33:24 IST Report Abuse

Ramanathan Vஉங்கள் கருத்து மிகவும் கேவலமாக உள்ளது. ADMK தமிழ் நாட்டை கொள்ளை அடித்து விட்டது. மேலும் மேலும் அந்த கட்சிக்கு ஆதரவு வேண்டாம். கட்ச தீவு, காவேரி பிரச்னை எல்லாம் இரு கட்சிகளும் ஒன்றா இருந்தபோது இருவராலும் செய்யப்பட்டது. முதலில் DMK இல் இருந்த அனைத்து திருடர்களும் ADMK கு MGR கொண்டு சென்று விட்டார். ADMK இரு அணிகளும் ஜனாதிபதி தேர்தலில் பிஜேபி கு ஆதரவு தெரிவித்து வோட்டு போட வேண்டாம். தமிழகத்தை புறங்கணித்த பிஜேபி கு எதற்கு இவர்கள் ஆதரவு கொடுக்கிறார்கள்....

Rate this:
17-ஜூலை-201710:44:45 IST Report Abuse

PrasannaKrishnanBoth of you get out from my state.

Rate this:
மேலும் 50 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement