உள்ளாட்சித் தேர்தலுக்கு 'தடா' போட்ட உளவுத்துறை Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
உள்ளாட்சித் தேர்தலுக்கு
'தடா' போட்ட உளவுத்துறை

சிவகங்கை: உள்ளாட்சித் தேர்தல் நடத்தாமல் இழுத்தடிப்பதற்கு இரட்டை இலை சின்னம்
முடக்கப்பட்டது மட்டும் காரணமில்லை... சட்டம் ஒழுங்கு பிரச்னையில் உளவுத்துறை அளித்த எச்சரிக்கையும் முக்கிய காரணம் என தெரிந்துள்ளது.

 உள்ளாட்சி,Local Authority, தேர்தல் , Election, உளவுத்துறை,Intelligence, சிவகங்கை, Sivaganga,உள்ளாட்சித் தேர்தல்,Local election, இரட்டை இலை சின்னம் , Double Leaf Symbol, சட்டம் ஒழுங்கு ,Law Order, அ.தி.மு.க, AIADMK, உயர்நீதிமன்றம்,High Court, சசிகலா,Sasikala, தி.மு.க., DMK, காங்கிரஸ்,Congress, முதல்வர் பழனிசாமி , Chief Minister Palani,


கடந்த 2016 அக்., 24 வுடன் உள்ளாட்சி பிரநிதிகளின் பதவிகாலம் முடிவடைந்தது. தேர்தலுக்கு தடை விதித்த உயர்நீதிமன்றமே, 'எப்போது நடத்துவீர்கள்' என, தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறது.

அ.தி.மு.க., இரு அணியாக பிரிந்ததால் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது.

தற்போது சசிகலா அணியும் பழனிசாமி, தினகரன் அணி என, மேலும் இரண்டாக உடைந்தது. இது தி.மு.க.,--காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளுக்கு சாதகமாக உள்ளதால், உள்ளாட்சித் தேர்தலை நடத்தினால் ஆளுங்கட்சிக்கு தோல்வியே கிடக்கும் என கருத்து நிலவுகிறது.
நீதிமன்ற நெருக்கடியால், கட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு முடிவு செய்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர். இது குறித்து மூத்த அமைச்சர்கள், உளவுதுறை அதிகாரி களிடம் முதல்வர் பழனிசாமி ஆலோசனையும் நடத்தினார். மாவட்ட வாரியாக உளவுத்துறை அறிக்கையும் பெறப்பட்டது.

அதில், 'அ.தி.மு.க.,வில் பல அணிகள் இருப்பதால் வெற்றி, தோல்வியை விட சட்டம், ஒழுங்கு பிரச்னையை சமாளிப்பது சிரமம். இதனால் அரசுக்கு அவப்பெயர் ஏற்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதையடுத்து தான் வார்டுகளின் எல்லை வரை யறையை செய்ய ஆணையம் அமைக்கும் திட்டத்தை ஆளுங் கட்சி கையில் எடுத்துள்ளது.
ஆணையத்தின் காலத்தை நீட்டிப்பு செய்து கொண்டே நாட்களை ஓட்டி விடலாம் என ஆளுங்கட்சி முடிவு செய்துள்ளது.அதற்குள் இரு அணிகளையும் இணைக்கும் பொறுப்பு, ஒரு தொழிலதிபரிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிகிறது.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (9)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
Varun Ramesh - Chennai,இந்தியா
17-ஜூலை-201718:41:57 IST Report Abuse

Varun Rameshகட்சி உடையாமல் இருந்தால் கூட, இனி இந்த கட்சி எந்த தேர்தலிலும் வெற்றி பெறுவது நாட்டிற்கு நல்லதல்ல.

Rate this:
Balaji - Khaithan,குவைத்
17-ஜூலை-201717:47:06 IST Report Abuse

Balajiதற்போதைய சூழலில் எந்த தேர்தலையும் சந்திக்க அதிமுக தயங்குகிறது என்பதில் எள்ளளவும் சந்தேகம் தேவையில்லை......... மக்களிடையே நொண்ணம்மா நொண்ணம்மா என்று ஒவ்வொருவரும் சென்று குற்றவாளி காலில் விழுந்தது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை அதிமுகவின் நொன்னாம்மா பிரிவினர் நன்றாகவே அறிந்து வைத்துள்ளனர்......... அதனால் தான் தினகரன் சிறை சென்றதும் கட்சியை முதல்வர் தலைமையில் ஒருங்கிணைக்க நினைத்தார்கள்........ ஆனால் அவரை போறாதகாலம் போலும் அதற்குள் அந்தாளு வெளிய வந்துட்டாரு........ இப்போ அவர் இவரிடமிருந்து ஆட்களை எழுத்து விளையாட்டு காட்டிக்கொண்டு இருக்கிறார்......... கொடுமை இதையெல்லாம் மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கவேண்டும் என்பது தான்.........

Rate this:
Pasupathi Subbian - trichi,இந்தியா
17-ஜூலை-201715:01:24 IST Report Abuse

Pasupathi Subbianஒன்று மூன்றாகி , ஒன்றுமே தேறாது. அப்படி இருக்கையில் என்ன சாதித்துவிட முடியும். உள்ளாட்சி தேர்தல்களுக்கு என்றுமே தி மு க வெற்றிபெறும் வழக்கம் உள்ளது. மற்ற கட்சிகளுக்கு தேர்தல் என்ன, எப்படி என்றே தெரியாது.

Rate this:
17-ஜூலை-201713:24:02 IST Report Abuse

அண்ணாமலை ஜெயராமன்தேர்தலை நடத்தி மட்டும் என்னத்த கிழிக்கப்போகிறார்கள். அந்த கவுன்சிலர்களுக்கு தனியாக தண்ட தொகை கட்டவேண்டும்

Rate this:
Harinathan Krishnanandam - Chennai,இந்தியா
17-ஜூலை-201711:27:51 IST Report Abuse

Harinathan Krishnanandamமக்கள் ஆட்சியில் தேர்தல் ஒரு மிகவும் முக்கிய அங்கம் அந்த தேர்தலையே நடத்தாமல் இருப்பது என்ன நியாயம்

Rate this:
krishna - cbe,இந்தியா
17-ஜூலை-201710:49:20 IST Report Abuse

krishnaஇனி அதிமுகவிற்கு அழிவு காலம் தான்.சில ஆண்டுகளில் கட்சி காணாமல் பொய் விடும்.

Rate this:
தேச நேசன் - Chennai,இந்தியா
17-ஜூலை-201706:54:28 IST Report Abuse

தேச நேசன் வலிமையான அதிமுகவை எதிர்க்க காங்கிரசுடன் சுடலை கூட்டு வைத்தது ஓகே ஆனால் பிளவுபட்டு சுக்குநூறாக ஆகிவிட்ட அதிமுகவை எதிர்க்கக்கூட கூட்டணியை நம்புகிறார் என்றால் அவர் ஒன்றுக்கும் உதவாத கோழை என்பது புரிகிறது

Rate this:
Rafi - Riyadh,சவுதி அரேபியா
17-ஜூலை-201721:22:59 IST Report Abuse

Rafi யாரையும் உதறிவிடும் அநாகரீகம் தி மு கவிற்கு எப்போதும் கிடையாது. கூட்டணிக்கு தகுதிக்கு மேல் கூடுதலாக சீட் கொடுத்து அவர்களால் ஆளும் கட்சியை எதிர்க்க பலமில்லாமல் சிலதொகுதிகளை சில நூறு வாக்கு வித்தியாசத்தில் இழக்க நேர்ந்ததனால் ஆட்சியை தி மு க கடந்த முறை இழந்தது வரலாறாகி விட்டது....

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
17-ஜூலை-201704:53:57 IST Report Abuse

Kasimani Baskaranதமிழகத்தை பொறுத்தமட்டில் உள்துறை மற்றும் உளவுத்துறை இரண்டும் ஆளும் கட்சியின் கொறடா போல செயல்படும் அமைப்புக்கள்... இவர்களை திருத்துவது முடியாத காரியம்...

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement