சொகுசு வசதிக்காக ரூ.2 கோடி லஞ்சம் தந்த சசிகலா வேறு சிறைக்கு மாற்றம்? Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
லஞ்சம்,Bribery,சிறை,jail, பெங்களூரு,bangalore, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை,Bengaluru Parapana Akrahar Central prison, அ.தி.மு.க., AIADMK, சசிகலா, Sasikala,கர்நாடகா,Karnataka, விஸ்வரூபம் , Viswaroopam, முதல்வர் சித்தராமையா ,Chief Minister Siddaramaiah, டி.ஐ.ஜி ரூபா,DIG Rupa,  சிறைதண்டனை,Prison, காங்கிரஸ், Congress,ஆயுள் தண்டனை கைதி, life imprisonment,

பெங்களூரு: பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க.,வின் சசிகலாவை, கர்நாடகாவில் உள்ள வேறு சிறைக்கு மாற்றலாமா என்பது குறித்து உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

லஞ்சம்,Bribery,சிறை,jail, பெங்களூரு,bangalore, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை,Bengaluru Parapana Akrahar Central prison, அ.தி.மு.க., AIADMK, சசிகலா, Sasikala,கர்நாடகா,Karnataka, விஸ்வரூபம் , Viswaroopam, முதல்வர் சித்தராமையா ,Chief Minister Siddaramaiah, டி.ஐ.ஜி ரூபா,DIG Rupa,  சிறைதண்டனை,Prison, காங்கிரஸ், Congress,ஆயுள் தண்டனை கைதி, life imprisonment,


பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளதால், பெங்களூரு சிறை விவகாரம் பற்றி பேச உயர் அதிகாரிகளுக்கு, முதல்வர் சித்தராமையா தடை விதித்துள்ளார். இதற்கிடையில், சிறையில் சொகுசு வசதிகள் வழங்கப்பட்டது குறித்து டி.ஐ.ஜி., ரூபாவிடம் தகவல் கொடுத்த கைதிகள் 32பேர் பலமாக தாக்கப்பட்டதுடன் வேறு சிறைகளுக்கும் மாற்றப்பட்டனர்.

சொத்து குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறைதண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப் பட்டுள்ள அ.தி.மு.க.,வின் சசிகலா, சிறையில் சொகுசு வசதிகள் பெற வேண்டும் என்பதற்காக

இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி., ரூபா வெளியிட்ட தகவலால் கர்நாடக அரசே ஆடிப் போயுள்ளது.

கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு விரைவில் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வரும் நேரத்தில், சிறை பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை, முதல்வர் கடுமையாக கண்டித்துள்ளார். பெங்களூரு சிறைவிவகாரம் குறித்து, எந்த அதிகாரியும் வெளிப்படையாக கருத்து தெரிவிக்கக் கூடாது என தடை விதித்துள்ளார்.

இதற்கிடையில் சிறையில் நடந்த முறைகேடு கள் குறித்து டி.ஐ.ஜி., ரூபாவுக்கு தகவல் தெரிவித்ததாக ஆயுள் தண்டனை கைதி கள் 32 பேர் சிறை அதிகாரிகளின் கண்காணிப்பு வளையத்திற்குள் நேற்று முன்தினம் கொண்டு வரப்பட்டனர். அவர்களை அழைத்து அதிகாரி கள் சரமாரியாக அடித்து உதைத்ததாக தெரிகிறது.

இதன்பின், அந்த கைதிகளை இடமாற்றுவது குறித்து உயர் அதிகாரிகள் தீவிர ஆலோசனை யில் ஈடுபட்டனர். பகல் நேரத்தில் வெளியில் அனுப்பினால் பிரச்னை எழும் என்பதால் இரவு நேரத்தில் அனுப்ப முடிவு செய்து நேற்று முன் தினம் நள்ளிரவே 'முறையான கவனிப்பு'க்கு பின், மாநிலத்திலுள்ள பல சிறைகளுக்கு 32 கைதிகளையும் பிரித்து அனுப்பினர்.

Advertisement


இந்நிலையில் சசிகலாவை வேறு சிறைக்கு மாற்ற அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
ஏற்கனவே சென்னையை சேர்ந்த 'டிராபிக்' ராமசாமி 'சசிகலாவை தமிழக அமைச்சர்கள் அடிக்கடி சந்திக்கின்றனர். அதனால் அவரை துமகூரு மகளிர் சிறைக்கு இடமாற்றம் செய்ய வேண்டும்' என கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
'விதிமுறைப்படி தான், சசிகலாவை சந்திக்க அனுமதி தரப்படுகிறது' என அரசு தரப்பில் கூறியதையடுத்து, அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
சிறைத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர் கூறுகையில் 'சசிகலாவை பெங்களூரு சிறையிலிருந்து கர்நாடகத்தின் எந்த சிறைக்கு வேண்டுமானா லும் மாற்றலாம். துமகூருவில் மகளிர் சிறை இருப்பதால் அங்கு மாற்றுவது சரியாக இருக்க வாய்ப்புள்ளது. இடமாற்றத்துக்கு எந்த காரண மும் சொல்ல வேண்டிய அவசியமில்லை' என்றார்.
சிறையில் நடந்த முறைகேடுகள் குறித்து மாநில அரசின் அதிகாரிகள் குழு இன்று விசார ணையை துவக்குகிறது. இந்நிலையில் டி.ஐ.ஜி., ரூபாவை வேறு இடத்துக்கு துாக்கியடிக்க லாமா என்பது குறித்து, முதல்வர் சித்தராமையா ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (140)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா
24-ஜூலை-201705:53:43 IST Report Abuse

Ramasami Venkatesanethu eppadiyo Roopa kootru sariyakivittathu, ivarukku idamaatram nitchayam. aduththa thaerthalukku BJP-kku nalla oru point paesuvatharku.

Rate this:
bairava - madurai,இந்தியா
18-ஜூலை-201700:29:29 IST Report Abuse

bairava இந்த துரோகி சிறையிலிருந்து வெளியில் வராமல் இருக்க என்ன வேண்டுமென்றாலும் செய்துகொடுங்க... நாட்டுக்குள்ள வந்தா கொடுமை தாங்காது எல்லாரையும் முட்டாளாக்குவார்கள்.... சிறையிலே இருப்பர் என்றால் என்னவேண்டுமானாலும் செய்து கொடுக்க உத்தரவு போடுங்கள்

Rate this:
N. Sridhar - Kanchipuran  ( Posted via: Dinamalar Windows App )
17-ஜூலை-201722:49:43 IST Report Abuse

N. Sridharதிகார்தான் சரி, மீதம் உள்ள நாட்களாவது களி மட்டும் தின்று, செய்த பாவங்களை கழிக்கட்டும்!

Rate this:
elangovan - TN,இந்தியா
17-ஜூலை-201722:22:05 IST Report Abuse

elangovanKarnataka government and higher official in Jail support SASI

Rate this:
Laxmanan Mohandoss - ambur,இந்தியா
17-ஜூலை-201720:46:40 IST Report Abuse

Laxmanan MohandossPoliticians and some police officials become slaves of bribery,no self respect and shameless people

Rate this:
Chandrasekar - Manglaore ,இந்தியா
17-ஜூலை-201718:04:27 IST Report Abuse

Chandrasekarஐயோ இது திமுகவின் சதி. என்னை சிறையில் அடைத்தபின் உளவு பார்ப்பதற்கு 32 திமுக கைக்கூலிகளை ஏற்பாடு செய்திருக்கிறார் ஸ்டாலின். நான் எந்த வசதியும் பெறவில்லை. என் அறையில் பேன் கூட கிடையாது. CCTV யை பாருங்கள்.

Rate this:
Rajamani Ksheeravarneswaran - bangalore,இந்தியா
17-ஜூலை-201721:22:26 IST Report Abuse

Rajamani Ksheeravarneswaranஇந்தியாவில் சிறையில் வாடும் எத்தனையோ கைதிகளுக்கு கொடுக்காத விளம்பரம் சசிகலாவிற்கு கொடுப்பதேன். ? பல லச்சம் கொள்ளை அடித்த திமுக குடும்பத்தை பற்றி விசாரிக்காதது ஏன் ? ஊழலில் திளைத்து முத்தெடுத்த எத்தனை காங்கிரஸ் மற்றும் பிஜேபி பிரமுகர்கள் சிறையில் உள்ளனர்? அதிமுக மீது மட்டும் ஊடகங்கள் அதிகம் கவனம் செலுத்துவது ஏன்?...

Rate this:
N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா
17-ஜூலை-201717:36:41 IST Report Abuse

N.Kaliraj சித்தராமையாவிற்கான பங்கு எவ்வளவு..?

Rate this:
Appu - Madurai,இந்தியா
17-ஜூலை-201723:06:19 IST Report Abuse

Appuஒன் சி குறையாமல் இருக்கலாம்.......

Rate this:
R Sanjay - Chennai,இந்தியா
17-ஜூலை-201717:35:42 IST Report Abuse

R Sanjayவகுப்பில் முதல் வரிசையில் உட்கார்ந்து ஆசிரியர் சொல்லிக்கொடுக்கும் பாடங்களை நன்றாக படித்து பிறகு வீட்டிற்கு சென்று மீண்டும் நன்றாக படித்து தாய் தந்தை உறவினர்கள் ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள் என்று அனைவரிடமும் நல்ல பெயர் எடுத்து கஷ்டப்பட்டு IAS/IPS படித்து இந்த உயர் நிலைக்கு வந்தால். அதே வகுப்பில் கடைசி வரிசையில் அமர்ந்து ஆசியர் சொல்லிக்கொடுப்பதையெல்லாம் காற்றில் பறக்கவிட்டு வகுப்பறையில் கவனம் செலுத்தாமல் வெறுமனே பெஞ்சை சில பல அங்குலங்கள் குறைத்துவிட்டு உடன் படிக்கும் மாணவிகளை கலாய்த்துவிட்டு ஒன்றுமே படிக்காமல் ஊதாரித்தனமாக ஊர் சுற்றிவந்துவிட்டு வீட்டிலும் தாய் தந்தை உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் "இது வீட்டிற்கு உதவாத தறுதலை" என்ற மானங்கெட்ட பெயரை சம்பாத்தித்துவிட்டு பத்து பன்னிரண்டாம் வகுப்புகளில் பல கோட்டை விட்டபிறகு தருதலையாகத்திரிவது, அல்லது அதற்க்கு அடுத்த முயற்சியாக கல்லூரியில் சேர்ந்து முறையாக கல்லூரிப்படிப்பை முடிக்காமல் அனைத்து பாடத்திலும் தோல்வி கண்டு சினிமா தியேட்டர் பார்க்கென்று ஊர்ப்பொறுக்கி தனமாக சுற்றி இந்த ஜடம் ஒன்றிக்குமே உதவாது என்ற நிலைக்கு சென்றுவிட்ட பிறகு எதோ ஒரு கூத்தாடி /குடுமிப்புடி அரசியல் கட்சியில் சேர்ந்து பல பல முல்லை மாற்றங்கள்(ரி) வேலைகள் செய்து அவன் இவன் கையை பிடித்து MLA சீட்டு வாங்கி பிறகு அமைச்சர் முதலமைச்சர் ஆகி தான் உட்கார்ந்த கடைசி பெஞ்சிற்கு நன்றி நினைப்பது பிறகு தனக்கு தொல்லை கொடுக்கும் முதல் வகுப்பில் பாஸாகி IAS/IPS மாணவர்களை மட்டும் தனக்கு விருப்பம் போல் இந்தியால எங்கு வேண்டுமானாலும் தூக்கி இடம் மாற்றம் செய்து தான் பெற்ற கெட்ட பெயர்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பது. ஐயோ கடவுளே. இது தான் கலியுகம். திருமதி ரூபா அவர்களை கடவுள் ஆசிர்வதிக்கட்டும்.

Rate this:
ezhumalaiyaan - Chennai,இந்தியா
17-ஜூலை-201721:48:51 IST Report Abuse

ezhumalaiyaanகசப்பான உண்மை....

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
17-ஜூலை-201716:51:43 IST Report Abuse

Pugazh Vஜெயலலிதாவுக்கு நூறு கோடியும் சசி கும்பலுக்கு தலா பத்து கோடியும் ஆறு ஆண்டு சிறை தண்டனையும் அபராதம் விதித்த நீதித்துறையைக் கேலிக் கூத்தாக்கி விட்டார்கள். அந்தம்மா செத்துட்டதால நூறு கோடி குடுக்க வேண்டாம் என்று இன்னொரு நீதிமான் சொல்லிட்டார் இந்தம்மாவுக்கு பத்து கோடி எல்லாம் ஜுஜுபி. நீதிபதியவே மாத்தின கும்பல், 22 வருஷம் கேஸை இழுத்தடிச்ச கும்பல் கிட்ட இதெல்லாம் நடக்குமா? அடுத்த தேர்தலில் பாருங்கள் இவர் செயலாளராக இருக்கிற கட்சியுடன் கூட்டணி பிஜேபி கூட்டணி போட்டு நிக்கப் போறாங்க.

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
17-ஜூலை-201716:43:49 IST Report Abuse

Endrum Indianஇதற்குத்தான் "சமத்துவம்" என்பது. அது ஏன் வெறும் பரப்பன சிறை மட்டும் ரூ. 2 கோடி மற்றும் மாதத்திற்கு 10 லட்சம் பெறவேண்டும். மற்ற சிறையில் உள்ள ஊழியர்களும் இதன் பயன் அடைய வேண்டும் என்ற உயரிய "சீர் நோக்கு" "சீரிய சிந்தனை" "சமத்துவ எண்ணத்துடன்" தான் இந்த சிறை மாற்றம் "சின்னா பின்னமான அம்மாவுக்கு" செய்யப்பட்டுள்ளது என்பதை தாழ்மையுடன் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். என்று சித்தராமையா கூறுகின்றார். மற்றும் தமிழ் மக்களுக்கு நான் நன்றி கூறிக்கொள்ள விரும்புகின்றேன் எனக்கு அப்போ அப்போ ரூ 50 கோடி வரவு வைப்பதற்காகத்தான் தாங்கள் சின்னா பின்னமான அம்மாவை இங்கு அனுப்பியதற்காக சென்னையில் புழல் சிறை இருந்தாலும்.

Rate this:
மேலும் 127 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement