தேங்காய் சுடும் பண்டிகை: அழிஞ்சி குச்சி, தேங்காய் விற்பனை ஜோர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தேங்காய் சுடும் பண்டிகை: அழிஞ்சி குச்சி, தேங்காய் விற்பனை ஜோர்

Added : ஜூலை 17, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

சேலம்: அழிஞ்சி குச்சி, தேங்காய், பூஜை பொருட்களின் விற்பனை ஜோராக நடந்தது.
ஆடி மாத முதல் நாளான இன்று, தேங்காய் சுட்டு, சுவாமிக்கு பூஜை செய்வர். அதற்காக, சேலத்தில், நேற்று காலை முதலே, அழிஞ்சி குச்சி, தேங்காய், வெல்லம், அவுல், பொரிகடலை உள்பட பூஜை பொருட்களை, மக்கள் வாங்கினர்.

மாலையில் உயர்வு: சேலம் மாவட்ட உழவர் சந்தைகள், பால் மார்க்கெட், வ.உ.சி., மார்க்கெட் உள்பட முக்கிய வீதிகளில், ஓமலூர், தாரமங்கலம், வாழப்பாடி, கருமந்துறை வியாபாரிகள் மற்றும் விவசாயிகள், அதிக அளவிலான அழிஞ்சி குச்சிகளை விற்பனைக்கு குவித்திருந்தனர். அவை, காலையில், ஏழு முதல், 10 ரூபாய் வரை விற்றது. மாலையில், 10 முதல், 15 ரூபாய் வரை விலை உயர்ந்தது.

குவிப்பு: அதேபோல், தேங்காய், வாழைப்பழம், வெல்லம், அவுல், பொரிகடலை ஆகியவற்றின் விலையும், வழக்கத்தை விட அதிக விலைக்கு விற்கப்பட்டது.


* ஆத்தூர் உழவர் சந்தை, ராணிப்பேட்டை, தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட், மளிகை கடைகளில், நடுத்தர தேங்காய், பெரிய அளவிலான தேங்காயின் விலை உயர்ந்தது. சாதாரண நாட்களில், 10 ரூபாய்க்கு விற்ற நடுத்தர தேங்காய், நேற்று, 15 முதல், 20 ரூபாய், பெரிய அளவிலான தேங்காய், 15 முதல், 25 ரூபாய்க்கு விற்றது. மஞ்சள் தடவிய அழிஞ்சி குச்சி, 10 முதல், 15 ரூபாய், மஞ்சள் தடவாத அழிஞ்சி குச்சி, 10 ரூபாய், 50 குச்சி கொண்ட கட்டு, 200 ரூபாய் வரை விற்றது. இடைப்பாடி பஸ் ஸ்டாண்டில், 5,000த்துக்கும் மேற்பட்ட தேங்காய்கள் விற்பனைக்கு குவிக்கப்பட்டிருந்தன. அங்கு, எட்டு முதல், 22 ரூபாய் வரை விற்கப்பட்டது. சுற்றுவட்டார கிராமத்தினர் பலர், தேங்காயை வாங்கிச்சென்றனர்.

சிறப்பு பூஜை: ஆடி முதல் நாள் முன்னிட்டு, புதுமண தம்பதி, அதிக அளவில் கோவில்களுக்கு வருகை புரிவர். அதனால், இன்று காலை முதல், சேலம் சுகவனேஸ்வரர், கோட்டை அழகிரிநாதர், குகை காளியம்மன், மாரியம்மன், ஊத்துமலை முருகன், உத்தமசோழபுரம் கரபுரநாதர் உள்பட சேலம் மாநகர கோவில்களில், சிறப்பு பூஜை நடத்த கோவில் நிர்வாகங்கள் ஏற்பாடு செய்துள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X