டி.ஐ.ஜி., ரூபா திடீர் மாற்றம்| Dinamalar

டி.ஐ.ஜி., ரூபா திடீர் மாற்றம்

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement
கர்நாடகா,Karnataka, சிறை, Jail,சசிகலா, Sasikala, டி.ஐ.ஜி ரூபா,DIG Rupa,  பணியிட மாற்றம், Workplace Transfer,பெங்களூரு நகர போக்குவரத்து பிரிவு ஆணையர், Bengaluru Urban Transport Commissioner,பெங்களூரு, Bengaluru,  சிறைத்துறை ,Prison Department,  பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை, Bengaluru parappana Agrahar Jail,
Share this video :
சிறைத்துறை டி.ஐ.ஜி., ரூபா திடீர் மாற்றம்

பெங்களூரு: சசிகலாவுக்கு சிறையில் பல்வேறு வசதிகள் செய்து தர இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் தரப்பட்டுள்ளது என குற்றம் சாட்டிய கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி., ரூபா பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


சிறையில் சலுகை

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு தனியாக சமையலறை அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு தனி உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்காக, இரண்டு கோடி ரூபாய் லஞ்சமாக தரப்பட்டுள்ளது என கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி., ரூபா குற்றம் சாட்டி இருந்தார். சிறைத்துறை டி.ஜி.பி., சத்யநாராயண ராவ் தான் இந்த பணத்தை வாங்கி உள்ளார் என்றும் குற்றம் சாட்டினார். இது தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து விசாரிக்க, கர்நாடக முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். இந்த சூழ்நிலையில், சிறைத்துறை டி.ஐ.ஜி.,யாக இருந்த ரூபா, பெங்களூரு நகர போக்குவரத்து பிரிவு ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை, கர்நாடக அரசு, இன்று( ஜூலை, 17) பிறப்பித்துள்ளது.

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (103)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-ஜூலை-201719:55:42 IST Report Abuse
உகதி ரூபா மாற்றம் ஒரு புறம் இருக்கட்டும். ஒரு வேளை ஜெ உயிருடன் இருந்து சசியுடன் சிறையில் இருந்து இருந்தால் இதைவிட அதிக அளவில் சலுகைகள் கிடைத்திருக்கும். அந்த சூழலில் இது போல் நடந்து இருந்தால் வரவேற்று இருக்கலாம். ஆனா இப்போது எல்லாம் அரசியலாகவே தோன்றுகிறது.
Rate this:
Share this comment
Cancel
Karuthukirukkan - Chennai,இந்தியா
17-ஜூலை-201719:33:45 IST Report Abuse
Karuthukirukkan இவர் மட்டுமா மாற்றப்பட்டுள்ளார் ?? இவர் குற்றம் சுமத்திய மேல் அதிகாரியும் தான் .. அந்த மேல் அதிகாரிக்கு குற்றம் விசாரித்து முடியும் வரை எந்த பணியும் ஒதுக்கவில்லை .. ரூபாவுக்கு பணி ஒதுக்கி இருக்கிறார்கள் .. அந்த மேல் அதிகாரியும் ரூபா மீது குற்றம் சுமத்தியுள்ளார் .. தான் குடுத்த மெமோக்களுக்கு பழி வாங்க தான் இவ்வாறு கூறுகிறார் என்று .. அரசு எடுத்த நடவடிக்கை மிகவும் சரி .. சசிகலாவுக்கு ஆதரவா செயல்பட 35 கோடி வாங்கி இருக்கின்றனர் என்று பக்தா எழுதிருக்கின்றனர்.. ஜெயா சசிகலாவுக்கு எதிரா மேல் முறையீடு செய்யாம இருந்து இருந்தா 3500 கோடி கூட வாங்கி இருக்கலாமே ?? அந்த முழு அதிகாரம் கர்நாடக அரசுக்கு தானே இருந்தது ?? சித்தராமையா நேர்மையாளர் என்றோ , சிறையில் சலுகை கிடைக்காது என்றோ நான் சொல்லல .. இந்தியாவின் அத்தனை சிறைகளிலும் காசு இருந்தா என்ன வேணா கிடைக்கும் .. ஆனா கொஞ்சம் லாஜிக் ஓட பேசணும் ..
Rate this:
Share this comment
Cancel
christ - chennai,இந்தியா
17-ஜூலை-201719:26:36 IST Report Abuse
christ இந்தியாவில் நேர்மைக்கு கிடைத்த பரிசு இதுதான் .வெட்கப்பட வேண்டிய விஷயம். இந்திய வல்லரசு என சொல்லி என்ன பயன் ? தீவிரவாதிகளை விட கொடியவர்கள் அடைக்கலம் புகுந்த இடம் அரசியல்
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
17-ஜூலை-201719:26:27 IST Report Abuse
Srinivasan Kannaiya ஊழலில் ஊறிப்போன ஒரு குற்றப்பின்னணி உடைய ஒரு பெண் குற்றவாளியை கேட்க தகுதி இல்லாத நீங்கள் ரூபாவை மாற்றியது நீங்கள் தவறு செய்ததை ஊர்ஜிதம் செய்கிறது...
Rate this:
Share this comment
Cancel
Appu - Madurai,இந்தியா
17-ஜூலை-201719:16:47 IST Report Abuse
Appu எதிர்பார்க்கப்பட்ட ஒன்று.. நேற்றும் முந்தைய நாளும் எனது கருத்தில் இதை தெரிவித்திருந்தேன்.. ஆனால் இவ்வளவு தடாலடியாக ஒன்றிரண்டு நாளில் நடக்கும் என்று நினைக்கவில்லை...
Rate this:
Share this comment
Cancel
samuelmuthiahraj - Canberra /kancheepuram,இந்தியா
17-ஜூலை-201719:03:07 IST Report Abuse
samuelmuthiahraj கர்நாடக முதல்வர் ஏன் தவறு செய்கிறார் இரண்டு கோடி வாங்கலில் அவரது பெயரும் இருக்கும் போல் தோன்றுகிறது
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
17-ஜூலை-201718:58:08 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் இந்தியா உலகில் ஊழலில் முதலிடம் பிடிக்க எப்படியெல்லாம் கஷ்டப்பட வேண்டியிருக்கு பாருங்க.. அதுக்கு சதிகலாவின் சேவை மகத்தானது. அது கூட முப்பது வருஷம் உல்லாசமா கொள்ளையடிச்ச ஜெயலலிதா தான் அதிமுக அடிமைகளுக்கு வழிகாட்டியாம். நாசமாப் போக..அந்த அடிமைகளை மிரட்டி ஒரு நாத்தம் பிடிச்ச கட்சி தனது வேலையை சாதிச்சிக்குது. அந்த நாத்தம் பிடிச்ச கட்சி தான் நாட்டை காப்பாத்தப் போகுதாம்.. பண்டாரங்கள் சொல்லிக்கிட்டு அலையிறாங்க.
Rate this:
Share this comment
Nakkal Nadhamuni - Chennai,இந்தியா
17-ஜூலை-201720:12:50 IST Report Abuse
Nakkal Nadhamuniதிமுககிட்ட ஆட்சியை ஒரு அஞ்சு வருஷம் குடுங்க.... ஊழலுக்கு புது விளக்கமே கொடுப்பாங்க... எல்லா திராவிட கட்சிகளும் ஒண்ணுதான்... எரியற கொள்ளில எந்த கொள்ளி நல்ல கொள்ளி...
Rate this:
Share this comment
Cancel
Arumugam - Paris,பிரான்ஸ்
17-ஜூலை-201718:31:03 IST Report Abuse
Arumugam நுதலை (தவளை) தன் வாயால் கெடும். தனக்கு கிரண்பேடி ஆதரவு தருவதை வெளிப்படையாக டுவிட்டர் செய்த இந்த பா ஜ க ஏஜன்டின் சேவை குஜராத் அல்லது உ பி க்கு தேவைப்படலாம்.
Rate this:
Share this comment
Cancel
Balaji - Khaithan,குவைத்
17-ஜூலை-201718:20:44 IST Report Abuse
Balaji குத்தமுள்ள நெஞ்சு குறுகுறுக்கத்தானே செய்யும்........ இதன் மூலம் அவர் தொடர்ந்து அங்கு இருந்தால் மேலும் மேலும் பல வண்டவாளங்கள் தண்டவாளம் ஏறும் என்பதனால் தூக்கியடிக்கப்பட்டுள்ளார்........... நேர்மையாக இருப்பவர்களுக்கு இதுதான் (இந்தியா) ஆட்சியாளர்கள் தரும் மரியாதை...........
Rate this:
Share this comment
Cancel
thanthi - Chennai,இந்தியா
17-ஜூலை-201718:08:29 IST Report Abuse
thanthi இது எதிர்பார்த்தது தான். சசிகலா கும்பலை எதிர்ப்பவர்கள் சாக துணிந்தவர்களாக தான் இருக்க வேண்டும். இனி இந்த பெண்ணின் உயிருக்கும், இவரது குடும்பத்தின் உயிருக்கும் உத்திரவாதம் இல்லை. இது தான் இந்தியா.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.