கர்நாடக சிறைத்துறை ஏடிஜிபி சத்யநாராயணாவும் மாற்றம்| Dinamalar

கர்நாடக சிறைத்துறை ஏடிஜிபி சத்யநாராயணாவும் மாற்றம்

Updated : ஜூலை 17, 2017 | Added : ஜூலை 17, 2017 | கருத்துகள் (29)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
சசிகலா,Sasikala, கர்நாடகா, Karnataka,சிறைத்துறை ஏ.டி.ஜி.பி., Prisons ADGP, சத்யநாராயண ராவ், Satyanarayana Rao,ரூபா, Rupa பெங்களூரு ,Bengaluru, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை, Bengaluru Parapana Agrahar Jail, கர்நாடக முதல்வர் சித்தராமையா ,Karnataka Chief Minister Siddaramaiah,

பெங்களூரு : பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு தனியாக சமையலறை அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு தனி உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்காக, இரண்டு கோடி ரூபாய் லஞ்சமாக தரப்பட்டுள்ளது என கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி., ரூபா குற்றம் சாட்டி இருந்தார்.
சிறைத்துறை ஏ.டி.ஜி.பி., சத்யநாராயண ராவ் தான் இந்த பணத்தை வாங்கி உள்ளார் என்றும் குற்றம் சாட்டினார். இது தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து விசாரிக்க, கர்நாடக முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். இந்த சூழ்நிலையில், சிறைத்துறை டி.ஐ.ஜி.,யாக இருந்த ரூபா, பெங்களூரு நகர போக்குவரத்து பிரிவு ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை, கர்நாடக அரசு, இன்று( ஜூலை, 17) பிறப்பித்துள்ளது.
ரூபாவை தொடர்ந்து சசிகலாவிடம் லஞ்சம் வாங்கியதாக குற்றம்சாட்டப்பட்டிருந்த கர்நாடக சிறைத்துறை ஏ.டி.ஜி.பி., சத்யநாராயண ராவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஏ.எஸ்.என்.மூர்த்தி சிறைத்துறை ஏ.டி.ஜி.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார்.சசி சர்ச்சை: சத்யநாராயண ராவ் இடமாற்றம்

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (29)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
Palanisamy PK - Chennai,இந்தியா
18-ஜூலை-201706:02:58 IST Report Abuse
Palanisamy PK அய்யா சத்யநாராயணா ராவ் அவர்களே. திருட்டு பயல் மோசடி தினகரன் தலைமையில் எங்கள் கூவத்தூர் கும்மாள எம் எல் ஏ க்கள் கேரளாக்காரிகளுடன் சசி அறையில் குத்தாட்டம் போட வருகிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Jaya Prakash - Medan,இந்தோனேசியா
17-ஜூலை-201719:41:59 IST Report Abuse
Jaya Prakash ஏன் எல்லாரும் அவர்களுக்கு பிடித்த கட்சியை வச்சே கருத்து கூறுகிறார்கள். அதனால்தான் யாரும் அரசியல்வாதியை எதிர்க்க பயப்படுறான். ஏன் அவனுக்கு என்று ஒரு வெட்டி கும்பல் குரல் கொடுக்க பின்னால் இருக்கு. அப்போ அவன் மீசையை முறுக்கதான் செய்வான். நேர்மையானவர் பம்மதான் செய்வார்கள். சரி இப்போ நான் கேட்கிறேன்... இப்போ நாம நம்ம கருத்தை பதிவு மட்டும் செய்கிறோம். வேறு என்ன செய்கிறோம்? ரோட்டில் இறங்கி அந்த நேர்மையான அதிகாரிக்கு குரல் கொடுக்க எத்தனை பேர் தயார்? இதே ஒரு அரசியல்வாதி என்றால்? பந்த் நடந்திருக்கும்.. பஸ்கள் எரிந்திருக்கும்.... அதிகாரிகளை குறை சொல்லாதீர்.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
17-ஜூலை-201719:24:08 IST Report Abuse
Srinivasan Kannaiya ஒரு மன்னார்குடி பெண்மணி உங்கள் எல்லோரையும் பணத்தால் வாங்கி விட்டார் என்பதை அறியும் பொழுது உங்களது பிரதாபம் தெரிகிறது...வாட்டாள் நாகராஜ் உங்கள் ஆளுகள் எவ்வளவு புத்திசாலிகள் என்று பார்த்துக் கொள்ளுங்கள்..
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
17-ஜூலை-201719:15:27 IST Report Abuse
Pasupathi Subbian விற்பனைக்கு வரும் சிறைச்சாலைகள். தண்டனை என்பது குற்றவாளி தவறுகளை திருத்திக் கொள்ள கொடுக்கப்படும் சந்தர்ப்பம். இன்னும் கெட்டுப்போறேன் என்ன பந்தயம் என்று இருப்பவர்களுக்கு , இதெல்லாம் போதாது.
Rate this:
Share this comment
Cancel
Balaji - Khaithan,குவைத்
17-ஜூலை-201718:41:45 IST Report Abuse
Balaji திருமதி ரூபாவை மட்டும் மாற்றி விட்டு இவரை மாற்றாமல் இருந்தால் தனக்கு கெட்ட பெயர் வரும் என்பதனால் தற்போது முதலில் நேர்மையாக இருந்தவரை மாற்றிவிட்டு தாமதமாக ஊழல் குற்றம் சுமத்தப்பட்டவரை (அதுவும் எந்தத்துறை என்று எந்தவொரு அறிவிப்பும் இல்லை) மாற்றியிருக்கிறார் கர்நாடக முதல்வர்.........
Rate this:
Share this comment
Cancel
Maverick - Corpus Christii,யூ.எஸ்.ஏ
17-ஜூலை-201717:45:41 IST Report Abuse
Maverick இவரை எங்கே மாத்துவானுங்க.... கதர் வாரிய தலைவர் பதவி ரெம்ப பவர்புல் ...அங்க போட்டால் ...இவரு தான் எல்லாம்...
Rate this:
Share this comment
Cancel
Maverick - Corpus Christii,யூ.எஸ்.ஏ
17-ஜூலை-201717:17:52 IST Report Abuse
Maverick "சசிகலா என்ன சுதந்திர போராட்ட தியாகியா " ன்னு எவ்வளவு வீரமா கேட்டாரு.. இப்புடி "ஆயி"ப்போச்சே....
Rate this:
Share this comment
Cancel
Rajinikanth - Chennai,இந்தியா
17-ஜூலை-201716:59:43 IST Report Abuse
Rajinikanth அடேய் ....ஊழல்பெருச்சாளிகளே .... மாற்ற வேண்டியது அவர்களை அல்ல ..நம்பி வாக்களித்த மக்களுக்கு நாமம் போடும் உங்களைத்தான் ... செப்பனிட வேண்டியது சிறைத்துறையை அல்ல... சீரழிந்து கிடைக்கும் உங்கள் சிந்தனைகளை .... நான் ஏற்கெனவே சொன்னது மாதிரி ரூபாவை மாற்றி விட்டார்கள்.. அதற்கு சப்பைக்கட்டாக சத்யநாராயணாவையும் மாற்றுவது போல ஸீன் கிரியேட் பண்ணியிருக்காங்க .... இது கூட தெரியாத பப்பாவா நாங்க ...?
Rate this:
Share this comment
Cancel
anand - Chennai,இந்தியா
17-ஜூலை-201716:45:49 IST Report Abuse
anand தமிழக காங்கிரஸ் தலைவர் தான் ஜாதி பாசத்தால் எல்லா ஏற்படும் பண்ணி கொடுக்கிறதா கேள்வி.. உண்மையா?
Rate this:
Share this comment
Cancel
Maverick - Corpus Christii,யூ.எஸ்.ஏ
17-ஜூலை-201715:57:44 IST Report Abuse
Maverick சரீ..இனிமேலாவது சித்திக்கு மொத்த களி குடுப்பீங்களா...இல்லை இனிமேலும் முனியாண்டி விலாஸ் சாப்பாடு தானா? சீக்கிரம் சொல்லுங்க...நிறையா வேலை கிடக்குது....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை