மீண்டும் விசாரிக்கப்படும் போபர்ஸ் வழக்கு?| Dinamalar

மீண்டும் விசாரிக்கப்படும் போபர்ஸ் வழக்கு?

Added : ஜூலை 17, 2017 | கருத்துகள் (29)
Advertisement
போபர்ஸ்,Bofors,  வழக்கு,case, ராஜிவ்,Rajiv, காங்கிரஸ்,
Congress, இந்துஜா சகோதரர்கள்,Hindu Brothers, குட்ரோச்சி, Kudrakchi, லண்டன் வங்கி, London Bank, புதுடில்லி, New Delhi,மத்திய அரசு,Central Government,  போபர்ஸ் பீரங்கி , Bofors Artillery,

புதுடில்லி: காங்கிரசுக்கு தீராத தலைவலியாக உள்ள போபர்ஸ் பீரங்கி பேர வழக்கை மத்திய அரசு மீண்டும் விசாரிக்க உத்தரவிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.போபர்ஸ் வழக்கு மீண்டும் விசாரிக்கப்படுமா?

இந்துஜா சகோதரர்கள்

ராஜிவ் பிரதமராக இருந்த போது, போபர்ஸ் பீரங்கி பேர வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், இந்த வழக்கில் தொடர்புடைய இந்துஜா சகோதரர்கள் மீதான வழக்கை மீண்டும் விசாரிக்க அப்போதைய மத்திய அரசு அனுமதி தராதது, சுப்ரீம் கோர்ட் உத்தரவையும் மீறி, லண்டன் வங்கியில் இருந்த பல கோடி ரூபாயை, காங்., தலைவர் சோனியாவின் உறவினர் குட்ரோச்சி எடுத்து சென்றது போன்ற விஷயங்கள் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளன.
பார்லிமென்ட்டின் பொது கணக்கு குழுவிற்கு ஒரு துணை பிரிவு உண்டு. மத்திய அமைச்சகங்களில் நிலுவையில் உள்ள விவகாரங்களை இந்த குழு விசாரித்து வருகிறது. இந்த குழு தான் இந்துஜா சகோதரர்கள் விவகாரம், குட்ரோச்சி விவகாரம் குறித்து, ராணுவ அமைச்சகம் மற்றும் சி.பி.ஐ.,க்கு கேள்வி எழுப்பி இருந்தது. இந்துஜா சகோதர்கள் மீது விசாரணை தொடர கூடாது டில்லி உயர்நீதிமன்றம், 2005ம் ஆண்டு மே 31ம் தேதி உத்தரவிட்டு இருந்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யலாம் என மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி துறையிடம் சி.பி.ஐ., ஆலோசனை கூறியது. ஆனால், அப்போது மத்திய அமைச்சர் பரத்வாஜ் தலைமையிலான மத்திய சட்ட அமைச்சகம் அப்பீல் மனு தாக்கல் செய்ய சி.பி.ஐ., அனுமதி தரவில்லை. எனினும், வழக்கறிஞர் அஜய் குமார் அகர்வால் என்பவர் இதுபோன்ற மனுவை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தார்.


குட்ரோச்சி விவகாரம்

போபர்ஸ் வழக்கில், குட்ரோச்சி லஞ்சம் வாங்கி இருந்ததாக புகார் எழுந்தது. இது குறித்து விசாரித்த சுப்ரீம் கோர்ட், லண்டனில் உள்ள பி.எஸ்.ஐ., - ஏ.ஜி., வங்கியில் குட்ரோச்சி கணக்கில் இருந்த 3 மில்லியன் டாலர் பணத்தை முடக்கும்படி, 2006ம் ஆண்டு ஜன., 16ல் உத்தரவிட்டது. ஆனால், இது குறித்து சி.பி.ஐ., அதிகாரிகள், பிரிட்டன் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கும் முன், சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட ஜன., 16ம் தேதியே குட்ரோச்சி வங்கி கணக்கில் இருந்த மொத்த பணமும் எடுக்கப்பட்டதாக இன்டர்போல் அமைப்பு ஜன., 19ல் தெரிவித்தது. இந்த விஷயத்தை பார்லி நிலைக்குழுவிடம் ராணுவ அமைச்சகம் சமீபத்தில் தெரிவித்தது. இதையடுத்து போபர்ஸ் வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என பார்லி நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Sugavanam - Salem,இந்தியா
17-ஜூலை-201721:18:16 IST Report Abuse
K.Sugavanam இன்னிக்கி நேதாஜி பிளேன் விபத்துல சாகலை இன்னு ஒரு பிரெஞ்சு செய்தி சொல்லுதே..என்ன செய்ய போறாங்க?திரும்ப விசாரிப்பு,ஆவண வெளியீடு இன்னு மீண்டுமா ?
Rate this:
Share this comment
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
17-ஜூலை-201720:59:22 IST Report Abuse
Sanny வெறும் விளம்பரத்துக்காக மத்திய அரசு, இந்த வழக்கை மீண்டும் எடுத்திருக்கு, இதில் சம்பத்தப்பட்ட பலர் பரலோகம் போய்விட்டார்கள், பலர் நாட்டிலே இல்லை, இந்த நேரத்தையும் பணத்தையும் வேறு தேவைக்கு பயன்படுத்தலாம். குட்ரோச்சியின் பணத்தைவிட, உயிரோடு இருக்கும் மல்லையாவின் பணத்தையும், மல்லையாவையும் மீட்டுக்கொண்டு வாருங்க,
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
17-ஜூலை-201719:11:15 IST Report Abuse
Pasupathi Subbian எப்படியெல்லாம் எத்தனை தடவை விசாரித்தாலும் முடிவு ஒன்றுதான். போதிய சாட்சியங்கள் இல்லாமல், வழக்கு தள்ளுபடி செய்யப்படும். அன்றே அத்தனை விஷயத்தையும் மூடியாகி விட்டது. ஆளைக்காணோம், ரெகார்ட் காணோம், போதிய சாட்சி வரவில்லை. சாட்சியங்கள் தடம்மாறி விடும். சும்மாவா , காங்கிரஸ் ஆச்சே,
Rate this:
Share this comment
Cancel
yaaro - chennai,இந்தியா
17-ஜூலை-201717:33:41 IST Report Abuse
yaaro ஒரு காலத்தில் சில கோடி ஊழல் ஒரு அரசையே கவிழ்த்தது என நினைக்கவே நம்ப முடியாத ஒன்றாக இருக்கு . இன்னய தேதியில் பேப்பரில் "இருபது கோடி ஊழல் " என நியூஸ் வந்தா .."ஓ பரவாயில்ல இருபது கோடி தான்.." அப்படின்னு கவனிக்காம போற நிலைமைக்கு வந்திட்டோம். இது அன்னை சோனியாவின் மற்றும் தமிழின தலைவர்கள் கருணாநிதி ஜேஜே அவர்களின் சாதனை. இன்னொரு விஷயம் - போபோர்ஸ் நல்ல தரமான பீரங்கி தான். கமிஷன் அடிச்சது தான் தப்பு. மேற்குறிப்பிட்ட மூவர் - தரத்திலயும் கைய வெச்சு நாட்டை நாசம் பண்ணிட்டாங்க
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
17-ஜூலை-201717:19:37 IST Report Abuse
Endrum Indian என்னாது மறுபடியும் ஆரம்ப முதல் விசாரணையா? இதனால் என்ன லாபம்? மீடியாவுக்கு மட்டும் தான் லாபம்? அதில் ஊழல் செய்த 98 % மக்கள் காந்தி என்று சொல்லிக் கொள்ளும் நேரு குடும்பம் முதல் கடை நிலை ஊழியர் வரை இந்தியாவில் மற்றும் அயல் நாட்டில் எப்பொழுதோ மேலுலகம் சென்று விட்டனரே? இப்பொழுது பாக்கி இருப்பது அவர்கள் வம்சத்தார் மட்டும் தான்?? வேறே வேலையை பாருங்கய்யா?
Rate this:
Share this comment
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
17-ஜூலை-201719:11:21 IST Report Abuse
Agni Shivaபாரதத்தை பிளந்த போது விட்டு சென்ற எச்சங்கள் தான் தற்போது இந்தியாவிற்கு பெரும் தலைவலியை தந்து கொண்டு இருப்பதை அறிவீரா? கேரளாவில் மலப்புரம் தனியாக பிரிக்கப்பட்டதும், காஷ்மீர் துண்டாகி நிற்பதும் இந்த எச்சங்களினால் தான். ஆகவே எச்சங்களை தவறாக மதிப்பிடாதீர்கள்..அந்த ஊழல் குடும்பத்தில் இருந்து கடைசி எச்சம் இருப்பது வரை விசாரணை நடத்துவதற்கு எந்த தடையும் இல்லை....
Rate this:
Share this comment
Cancel
ஜெய சேகர் - ஆண்டிபட்டி,இந்தியா
17-ஜூலை-201716:38:54 IST Report Abuse
ஜெய சேகர் மொத்த வியாபாரத்தில் புரோக்கர் commission 0.01 % என்பது நடந்து கொண்டு தான் இருக்கும், முன்பு தெரியாமல் வாங்கினார்கள், இப்போது சேவை கட்டணம் போட்டு அதற்கு சேவை வரி போட்டு வாங்கி கொள்கிறார்கள். அணைத்து நாடுகளிலும் இது நடைமுறையில் உள்ளது.
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
17-ஜூலை-201716:34:31 IST Report Abuse
Pugazh V கிட்ட தட்ட எட்டு வருடங்கள் 95 கோடி செலவழித்து ரிப்ரோட் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் சுப்ரீம் கோர்ட் இனி இதில் விசாரிக்கவோ விமர்சிக்கவோ எதுவும் இல்லை என்று ஒரே வரியில் ஊத்தி மூடியது. மீண்டும் இதை ஆரம்பித்து வயசான சிலருக்கு மக்கள் வரிப்பணத்தில் ஆபீஸ், கார், டூர் அயல்நாட்டுப் பயணம், கூடவே மக்களிடையே , காங்கிரசை பிடிக்கிறேன் பார், அழைக்கிறேன் பார் என்று ஒரு பிரச்சாரம் - இதற்காகத் தான் ஆரம்பிக்கிறார்கள். ஆரம்பித்தாலும் ஒரு புண்ணாகும் நடக்கப் போவதில்லை . ஸ்டார்ட் ம்யூசிக்..
Rate this:
Share this comment
Cancel
Balamurugan Balamurugan - cuddalore,இந்தியா
17-ஜூலை-201716:14:53 IST Report Abuse
Balamurugan Balamurugan ஊழல் என்பது காங்கிரசுக்கு கைவந்த கலை
Rate this:
Share this comment
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
17-ஜூலை-201716:09:25 IST Report Abuse
Malick Raja வாத்தியாருக்கு பாடம் எடுத்த கதையாகிவிடும் .. பதவியை விட்டு சென்றவுடன் உள்ளே தூக்கி போட்டு விசாரணை நடத்துவான் காங்கிரெஸ்க்காரன் இது சரித்திர உண்மை தரித்திரியங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை என்பதும் சரிதானா ?
Rate this:
Share this comment
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
17-ஜூலை-201719:13:50 IST Report Abuse
Agni Shivaகான் கிராஸ் இனி ஆட்சிக்கு வருவது, அடுத்த பிரளயம் முடிந்து பூமி திரும்ப பிறக்கும் போது தான். அப்போது கூட இங்க்லீஷ் காரன் இந்த நாட்டை பிடித்தால் தான் கான் கிராஸ் என்ற கொள்ளை கூட்டம் உருவாக்கமே நடக்கும். அதுவரை மூர்க்கங்கள் ஆசுவாசப்படலாம்....
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
17-ஜூலை-201716:02:20 IST Report Abuse
Kasimani Baskaran பணம் யாருக்கு சென்றது என்று அறிந்தே ஆகவேண்டும்.. மக்களின் பணத்தை யார் சரியாக கையாளவில்லை, யார் கன்னமிட்டார்கள் போன்ற விஷயங்கள் கண்டிப்பாக மக்களுக்கு தெரிந்தே ஆகவேண்டும்...
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
17-ஜூலை-201718:24:53 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்இந்த குறிக்கோள் பா.ஜ.க வுக்கு இருக்கா? அரசியல் ஆதாயத்தை மட்டுமே பார்க்கும் கேடுகெட்ட கட்சி தான் பா.ஜ.க. போபோர்ஸ் வழக்கு நடக்கும் காலகட்டத்தில் பா.ஜ.கவும் மத்தியில் ஆட்சி செய்தது. அப்போது ஆணி பிடுங்காமல் இப்போது பிடுங்க போகிறார்களாக்கும்....
Rate this:
Share this comment
K.Sugavanam - Salem,இந்தியா
17-ஜூலை-201721:12:14 IST Report Abuse
K.Sugavanam2019 ...அவ்வளவே .....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை