எடியூரப்பா வீட்டு கதவை தட்டிய போலீசார்| Dinamalar

எடியூரப்பா வீட்டு கதவை தட்டிய போலீசார்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
பா.ஜ.,BJP, எடியூரப்பா, Edayurappa, ஈஸ்வரப்பா,Ishvarappa,  பெங்களூரு,Bengaluru, கர்நாடகா, Karnataka,சந்தோஷ்,  Santosh,  போலீஸ் கமிஷனர், Police Commissioner,
Share this video :
நள்ளிரவில் எடியூரப்பா வீட்டை தட்டிய போலீசார்
Powered by Sathya

பெங்களூரு: பா.ஜ., மூத்த தலைவர் ஈஸ்வரப்பாவின் உதவியாளரை கடத்த முயன்ற வழக்கில் தொடர்புடையவரை தேடி, கர்நாடக பா.ஜ., முதல்வர் வேட்பாளர் எடியூரப்பாவின் வீட்டின் கதவை நள்ளிரவில் போலீசார் தட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


ஈஸ்வரப்பா உதவியாளர்

கர்நாடகாவில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. ஆனால், பா.ஜ.,வில் பெரும் கோஷ்டி பூசல் ஏற்பட்டுள்ளது. எடியூரப்பா மற்றும் ஈஸ்வரப்பா இடையே முட்டல் மோதல் நீடித்து வருகிறது. எனினும், கட்சியின் முதல்வர் வேட்பாளராக எடியூரப்பா அறிவிக்கப்பட்டுள்ளார். இது, ஈஸ்வரப்பாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இச்சூழ்நிலையில், ஈஸ்வரப்பாவின் உதவியாளரை கடத்த முயற்சி நடந்தது. இந்த விவகாரத்தில் எடியூரப்பாவின் உறவினரும், உதவியாளருமான சந்தோஷுக்கு தொடர்பு உள்ளது போலீசாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து கடந்த சனிக்கிழமை நள்ளிரவு, சந்தோஷிடம் விசாரணை நடத்த, பெங்களூருவில் உள்ள எடியூரப்பா வீட்டுக்கு போலீசார் சென்றனர். அவர் வீட்டு கதவை தட்டியுள்ளனர். அங்கேயே ஒரு மணி நேரம் காத்திருந்த போலீசார், பின் விசாரணை ஏதும் நடத்தாமல் திரும்பி சென்றனர்.



எடியூரப்பா கோபம்

நள்ளிரவில் தன் வீட்டுக்கு போலீசார் வந்ததால் கோபமடைந்த எடியூரப்பா இது குறித்து பெங்களூரு போலீஸ் கமிஷனருக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். கடத்தல் முயற்சி விவகாரத்தில் ஆதாரம் என்று கூறப்படுவது எல்லாம் போலியானவை என அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளார். எனினும், எடியூரப்பாவின் வீட்டின் அருகே சீருடை அணியாத போலீசார் தங்கி இருப்பது இந்த விவகாரத்தை மேலும் சிக்கலாக்கி உள்ளது.



Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (29)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srikanth Tamizanda.. - Bangalore,இந்தியா
17-ஜூலை-201719:36:45 IST Report Abuse
Srikanth Tamizanda.. காங்கிரஸ் ஊடகங்கள் சித்தரிப்பது போல எடியூரப்பா ஒன்றும் கெட்ட​வர் கிடையாது.. தமிழ் நாட்டில் இருக்கும் கழகங்களை பார்க்கும் பொழுது இவர் ஆட்சி பன்மடங்கு மேல்... மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவர்.. தவிர நீதிமன்றமும் இவரை பல போலி வழக்குகளிலிருந்து விடுதலை செய்துள்ளது..
Rate this:
Share this comment
Cancel
Karuthukirukkan - Chennai,இந்தியா
17-ஜூலை-201719:20:09 IST Report Abuse
Karuthukirukkan ரூபா என்ற அதிகாரி நேர்மையாக செயல்பட்டால் , பக்தாள் பாஞ்சு வந்து சொம்பு தூக்குறாங்க .. இங்கே போலீஸ் சந்தேகத்தின் பெயரில் கதவின் மேல் கை வெச்சதுக்கே கதறுறீங்க .. அதுவும் யாரு புனிதர் எடியூரப்பா உங்க கட்சியின் மற்றோரு தலைவரின் குடும்ப நபரை தூக்கியதற்கு .. நேர்மை என்றால் என்ன பக்தா ?? புதுசா விளக்கம் சொல்லுவீங்களே .. கேக்க நல்ல இருக்கும் சொல்லுங்க ..
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
17-ஜூலை-201719:10:10 IST Report Abuse
Srinivasan Kannaiya தலைவர்கள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும்...
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
17-ஜூலை-201719:08:35 IST Report Abuse
Pasupathi Subbian ஐயோ ஐயோ கொல்றாங்களே என்ற வசனம் ஒளிபரப்பப்படுமா
Rate this:
Share this comment
Cancel
E-man - TVL,இந்தியா
17-ஜூலை-201718:21:49 IST Report Abuse
E-man சீத்தாராமைய்யா தேர்தலில் நிக்கமாட்டேன்னு சொல்லி டி ஆர் பி ஏத்துறாரு ..எடியூரப்பா போலீஸ் கூப்பிட்டு கதவ தட்ட சொல்லி டி ஆர் பி ஏத்துறாரு... உங்களுக்கெல்லாம் ஓட்டு போடும் இந்திய மக்கள் பாவம்டா
Rate this:
Share this comment
Cancel
Balaji - Khaithan,குவைத்
17-ஜூலை-201718:16:48 IST Report Abuse
Balaji போலீசார் விசாரணைக்கு வர நேரம் காலமெல்லாம் நிர்ணயிக்க தேவையில்லை ....... ஆனால் விசாரிப்பதற்கு முறையான அனுமதி பெற்றிருந்தனரா என்பதை மட்டுமே சரிபார்த்திருக்க வேண்டும்......... இந்த செய்தியை படித்தால் கதவை நாடு இரவில் தட்டினாலும் அவர்கள் கதவை திறந்தது போன்று இல்லை....... பிறகு ஏன் மீண்டும் பதறுகிறார் என்பது தான் சந்தேகமாக இருக்கிறது...........
Rate this:
Share this comment
Cancel
vnatarajan - chennai,இந்தியா
17-ஜூலை-201716:55:22 IST Report Abuse
vnatarajan எடியூரப்பாவை முன் நிறுத்தினால் கண்டிப்பாக பிஜேபி க்கு வெற்றி கிடைப்பது சந்தேகமே.
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
17-ஜூலை-201716:45:43 IST Report Abuse
இந்தியன் kumar கர்நாடகா மக்கள் எல்லாவற்றையும் பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள் , தங்களுக்கு யார் வேண்டும் என்று முடிவு செய்வார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
17-ஜூலை-201716:34:21 IST Report Abuse
Endrum Indian புது டிக்ஷனரி தயாரிக்க வேண்டும் தமிழில். அதில் அரசியல்வாதி என்றால்- அயோக்கியன், கொலைகாரன், திருடன், ஊழல் மட்டுமெ செய்பவன், கற்பழிப்பவன், பொய் புனை சுருட்டு செய்பவன் ......................அந்த பக்கம் முழுவதும் விளக்கமாக எழுதப்படவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
17-ஜூலை-201716:29:11 IST Report Abuse
Lion Drsekar மொத்தத்தில் சுதந்திரம் என்பது தவறானவர்கள் கைகளில் அகப்பட்டுக் கொண்டு தனி மனிதர்களுக்குள் இருக்கும் நாற்காலி சண்டையில் நாட்டை சீரழிக்கும் ஒரு நிலைக்கு சென்று கொண்டு இருக்கிறது, வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.