தினகரன் வழக்கில் மேல் முறையீடு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தினகரன் வழக்கில் மேல் முறையீடு

Updated : ஜூலை 17, 2017 | Added : ஜூலை 17, 2017 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
தினகரன், அமலாக்க துறை, அன்னிய செலவாணி மோசடி, தடை, சென்னை, உயர்நீதிமன்றம்

சென்னை: தினகரன் மீதான அன்னிய செலவாணி மோசடி வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்ததை எதிர்த்து அமலாக்க துறை மேல் முறையீடு செய்துள்ளது.


21 ஆண்டுகளாக விசாரணை

தினகரன் மீது, ஜெ.ஜெ.,'டிவி'க்கு உபகரணங்கள் வாடகைக்கு வாங்கியது தொடர்பாக, அன்னிய செலாவணி மோசடி வழக்கை அமலாக்க துறை பதிவு செய்துள்ளது. இந்த வழக்கை சென்னை எழும்பூரில் உள்ள பொருளாதார குற்றங்களை விசாரிக்கும் நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் தடை விதித்தது. இதை எதிர்த்து அமலாக்க துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. இதற்கான மனுவில், கடந்த 21 ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது. தினகரனுக்கு பல அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. விசாரணைக்கு தடை விதித்தால், வழக்கு பின்னோக்கி போய்விடும் என்று கூறப்பட்டுள்ளது. மனுவின் மீதான உத்தரவை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

தினகரன் வழக்கில் மேல் முறையீடு
Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Elango - Chennai,இந்தியா
18-ஜூலை-201703:55:58 IST Report Abuse
Elango தடை விதித்த நீதிபதி எவ்வளவு பணம் வாங்கினார் தெரியவில்லையே?
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
17-ஜூலை-201721:22:00 IST Report Abuse
K.Sugavanam அய்யோபாவம் ..
Rate this:
Share this comment
Cancel
NRK Theesan - chennai,இந்தியா
17-ஜூலை-201720:17:22 IST Report Abuse
NRK Theesan நீதிமன்றங்கள் சட்டப்படி நடக்கிறதா ? திட்டப்படி நடக்கின்றதா?
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
17-ஜூலை-201719:02:56 IST Report Abuse
Srinivasan Kannaiya தினகரன் வழக்கில் மேல் முறையீடு... மேல் முறையீடு என்றால் பணம் கொடுத்தல் என்று அர்த்தமா... ?
Rate this:
Share this comment
Cancel
kalyanasundaram - ottawa,கனடா
17-ஜூலை-201718:59:01 IST Report Abuse
kalyanasundaram why you people are in great haste. should not justices have few more centuries time to decide on this case. or they should be duly taken care to dismiss all cases irrespective of its merits. TTD should cough few more crores to hush up the case.
Rate this:
Share this comment
Cancel
Chandrasekar - Manglaore ,இந்தியா
17-ஜூலை-201717:45:03 IST Report Abuse
Chandrasekar 21 ஆண்டுகள் தானே ஆகிறது. என்ன அவசரம். இன்னும் ஒரு 20 ஆண்டுகள் நடக்கட்டும். அவர் இறந்த பின். குற்றவாளி என்று அறிவித்து விட்டு தண்டனையையும் அபராதத்தையும் நிறுத்திவைத்து அவர் குடும்பம் அனுபவிக்க வழிவிடுங்கள். இந்திய நீதித்துறையை தான் தூக்கில் இடவேண்டும். இப்படி ஒரு வழக்கு நடப்பதற்கு பதில் நீதிமன்றங்களை மூடிவிடலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை