மணிப்பூரில் கனமழை: பாலம் உடைந்ததால் போக்குவரத்து பாதிப்பு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

மணிப்பூரில் கனமழை: பாலம் உடைந்ததால் போக்குவரத்து பாதிப்பு

Added : ஜூலை 17, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
மணிப்பூரில், கனமழை, பாலம் உடைந்தது, போக்குவரத்து பாதிப்பு

இம்பால்: மணிப்பூரில் கனமழையால் முக்கிய பாலம் உடைந்து விழுந்தது. இதனால், தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முடங்கியது.

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழை காரணமாக நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் தண்ணீரில் தத்தளிக்கின்றனர்.

மணிப்பூர் மாநிலத்தை மற்ற மாநிலங்களுடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள முக்கிய பாலமான 'பாரக் பாலம்' இன்று (ஜூலை17) காலையில் திடீரென உடைந்து விழுந்தது. இதனால், ஜிரிபம் நகரில் இருந்து இம்பால் நோக்கி வந்த 200 சரக்கு லாரிகள் ஸ்தம்பித்து நிற்கின்றன.

மணிப்பூரில் கனமழை: போக்குவரத்து பாதிப்பு

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை