சங்கரன்கோவில் விசைத்தறி ஸ்டிரைக்: 13 நாள் போராட்டம் முடிவுக்கு வந்தது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சங்கரன்கோவில் விசைத்தறி ஸ்டிரைக்: 13 நாள் போராட்டம் முடிவுக்கு வந்தது

Added : ஜூலை 17, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருநெல்வேலி நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில், சுப்புலாபுரம், புளியங்குடி சுற்றுவட்டார பகுதிகளில்5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் உள்ளன. இவற்றின் மூலம் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.
தற்போது விதிக்கப்பட உள்ள ஜி.எஸ்.டி., வரிவிதிப்பால் நெசவுத்தொழில் மிகுந்த பாதிப்படையும்எனவும் விவசாயத்திற்கு அடுத்தபடியாக உள்ள நெசவுத்தொழிலுக்கு வரி விதிப்பினை குறைக்கவலியுறுத்தி ஜூலை 5ம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் தினசரி ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான துணிகள் உற்பத்தி பாதிக்கப்பட்டது. 13 நாட்களாகியும் சங்கரன்கோவில் அமைச்சர் ராஜலட்சுமியோ மாவட்ட நிர்வாகமோ இதுகுறித்து பேச்சுவார்த்தை எதுவும் நடத்தவில்லை. 13 நாட்களாக தொழிலாளர்கள் வேலையிழந்தனர். எனவே இனியும் பட்டினி கிடக்க முடியாது என்ற சூழலில் தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்கு செல்ல முடிவெடுத்தனர்.இன்று முதல் விசைத்தறிகள் இயங்கும் என உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்தனர்,

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை