இதே நாளில் அன்று| Dinamalar

இதே நாளில் அன்று

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement
  இதே நாளில் அன்று

2013 ஜூலை 18

தமிழ் கவிஞரும், திரைப்பட பாடலாசிரியருமான வாலி, திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அருகே, திருப்பராய் துறையில், ஸ்ரீனிவாசன் ஐயங்கார் - பொன்னம்மாள் தம்பதிக்கு மகனாக, ௧௯௩௧ அக்., ௨௯ல் பிறந்தார்.ஓவியராக வேண்டும் என்ற எண்ணத்தில், சென்னை வந்த அவர், மலைக்கள்ளன் படம் மூலம், பாடலாசிரியராக அறிமுகமானார். 15 ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். பொய்க்கால் குதிரை, சத்யா, ஹேராம், பார்த்தாலே பரவசம் போன்ற படங்கள், 'கையளவு மனசு' என்ற, 'டிவி' தொடரிலும் நடித்துள்ளார்.
கடந்த, 1973-ல், பாரத விலாஸ் படத்தில், 'இந்திய நாடு என் வீடு...' என்ற பாடலுக்காக தேசிய விருது பெற்றவர். ஐந்து முறை, மாநில அரசின் விருது, 2007ல், பத்மஸ்ரீ விருதும் பெற்றார்.இவர் எழுதிய, 'பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம்' ஆகிய கவிதை தொகுப்புகள் புகழ் பெற்றவை. ௨௦௧௩ ஜூலை, ௧௮ல் காலமானார். அவர் இறந்த தினம், இன்று.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.