கருங்கல் ஜல்லி விலை யூனிட்டுக்கு ரூ.1,000 உயர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கருங்கல் ஜல்லி விலை யூனிட்டுக்கு ரூ.1,000 உயர்வு

Added : ஜூலை 17, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

தமிழகத்தில் மணலை தொடர்ந்து, கருங்கல் ஜல்லி விலையும், யூனிட்டுக்கு, 1,000 ரூபாய் உயர்ந்துள்ளது. ஓவர் லோடு பிரச்னையால், லாரிகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டதே, இதற்கு
காரணம். தமிழகத்தில், கட்டுமான பணிகளில், சிமென்ட், மணலுக்கு அடுத்தபடியாக கருங்கல் ஜல்லிகள், மிக முக்கிய பொருளாக பயன்படுத்தப்படுகின்றன. அஸ்திவாரம் முதல், மேல்தளம் வரை, அனைத்து நிலைகளிலும், கான்கிரீட் தயாரிப்பிற்கு, கருங்கல் ஜல்லிகள் அவசியம். கட்டடங்களுக்கு மட்டுமின்றி, சாலை பணிக்கும் கருங்கல் ஜல்லிகள் தேவை. இந்நிலையில், கிரஷர்களில் இருந்து கட்டுமான பணியிடங்களுக்கு, ஜல்லிகளை கொண்டு செல்லும் லாரிகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டதால், ஜல்லி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, மணல் தட்டுப்பாட்டால், கட்டுமான பணிகள் முடங்கியுள்ள நிலையில், கருங்கல் ஜல்லி தட்டுப்பாடு மேலும், ஒரு சோதனையாக அமைந்துள்ளதாக கட்டுமானத்துறையினர் கூறுகின்றனர்.

இதுகுறித்து, இந்திய கட்டுனர் வல்லுனர் சங்க தென்னக மையத்தின் கவுரவ செயலர், எஸ்.ராமபிரபு கூறியதாவது: தமிழகத்தில், கட்டுமான பணிகளுக்கு தினமும், 25 ஆயிரம் லோடு ஜல்லிகள் தேவை. இதில், சென்னையில் மட்டும், 10 ஆயிரம் லோடு தேவை. ஒரு கன அடி, 25 ரூபாயாக இருந்த ஜல்லி விலை, 35 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதன்படி, 2,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட, யூனிட் ஜல்லி விலை, 3,500 ரூபாயாக உயர்ந்துள்ளது. போக்குவரத்து கெடுபிடியால், லாரிகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டதே, தட்டுப்பாட்டுக்கு காரணம். மணல் தட்டுப்பாடு விவகாரத்தில், எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், ஜல்லி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது கட்டுமானத்துறையை முற்றிலுமாக முடக்கி உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை