பஸ் ஊழியர்கள் ஊதிய ஒப்பந்தம் : அரசுக்கு சங்கங்கள் 10 நாள் கெடு| Dinamalar

பஸ் ஊழியர்கள் ஊதிய ஒப்பந்தம் : அரசுக்கு சங்கங்கள் 10 நாள் கெடு

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை: 'ஊதிய ஒப்பந்தத்தை, ௧௦ நாட்களில் நிறைவேற்றாவிட்டால், 'ஸ்டிரைக்'கில் குதிப்போம்' என, அரசு போக்குவரத்துக் கழக தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துஉள்ளது.
அரசு போக்குவரத்துக் கழகங்களின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. இதில், எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, தொழிற்சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
போக்குவரத்துக் கழகங்களில் ஏற்படும் இழப்பை ஈடுசெய்ய, அரசு நிதி ஒதுக்க வேண்டும். தினக்கூலி ஊழியர்களுக்கான ஊதியத்தை, அரசு ஒப்பந்தப்படி வழங்க வேண்டும். ஊழியர்களிடம் பிடிக்கப்பட்ட பணப்பலன்களை உடனே வழங்க வேண்டும். 2003 ஏப்ரலுக்கு பின் பணியில் சேர்ந்தோரை, ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும். ஓய்வூதியம் உள்ளிட்டவற்றிற்கு, நிதி ஆதாரத்தை வலுப்படுத்த வேண்டும். 13வது ஊதிய ஒப்பந்தத்தை உடனே பேசி முடிக்க வேண்டும்.
இதற்கு முன் பேச்சு நடத்திய அமைச்சர்கள், 'மூன்று மாதங்களில் பிரச்னைகள் தீர்க்கப்படும்' என, உறுதி அளித்தனர். இரண்டரை மாதங்கள் முடிந்து விட்டன. ஆனாலும், ஓய்வூதியத்துக்கு, 1,250 கோடி ரூபாய் ஒதுக்கியதோடு சரி; வேறு எதையும் செய்யவில்லை. கோரிக்கைகளை, 10 நாட்களில் நிறைவேற்றாவிட்டால், வரும், 26, 27ம் தேதிகளில், அனைத்து போக்குவரத்துக் கழகங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். 29ம் தேதி, அரசிடம், 'ஸ்டிரைக்' நோட்டீஸ் வழங்கப்படும். பின், காலவரையற்ற ஸ்டிரைக்கை துவக்க முடிவு
செய்துள்ளோம்.இவ்வாறு நிர்வாகிகள் கூறினர்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.