தட்சிணாயன புண்ய காலம்: காவிரியில் நீராடிய பக்தர்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தட்சிணாயன புண்ய காலம்: காவிரியில் நீராடிய பக்தர்கள்

Added : ஜூலை 17, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
தட்சிணாயன புண்ய காலம்: காவிரியில் நீராடிய பக்தர்கள்

மேட்டூர்: தட்சிணாயன புண்ய கால, துவக்க நாளான நேற்று, மேட்டூர் காவிரியாற்றில் பக்தர்கள் புனித நீராடி வழிபாடு செய்தனர். தை முதல் ஆனி மாதம் வரையிலான, ஆறு மாதங்கள் உத்ராயண புண்யகாலம், ஆடி முதல் மார்கழி மாதம் வரையிலான, ஆறு மாதங்கள் தட்சிணாயன புண்யகாலம் என அழைக்கப்படுகிறது. பாரதத்தின் கங்கை, யமுனை, கிருஷ்ணா, நர்மதை, காவிரி உட்பட, ஏழு நதிகள் சப்த புண்ய நதிகளில், காவிரியில் மட்டுமே தட்சிணாயன புண்யகாலம் துவங்கும், ஆடி மாதத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். தட்சிணாயன புண்யநதி என்ற பெருமை,
காவிரிக்கு மட்டுமே உண்டு. தட்சிணாயன புண்யகாலம் துவங்கும், ஆடி, 1ம் தேதியான நேற்று, மேட்டூரில் பக்தர்கள் காவிரியாற்றில், புனித தண்ணீரை தலையில் தெளித்து வழிபட்டனர்.
திருமணத்துக்கு பின், வரும் முதல் ஆடியை புதுமண தம்பதியர் தலை ஆடியாக கொண்டாடுகின்றனர். தலைஆடியை முன்னிட்டு, நேற்று புதுமண தம்பதியரும் மேட்டூர் காவிரியாற்றில் புனித நீராடினர். எனினும், கடந்த ஆண்டை விட, நடப்பாண்டில் காவிரியில் புனித நீராட வரும் பக்தர்கள், புதுமண தம்பதியர் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. ஈரோடு மாவட்டம், பவானி சங்கமேஸ்வரர் கோவில் புகழ் பெற்றது. காவிரி, பவானி மற்றும் அமுத நதி சங்கமிப்பதால், தென்னகத்தின் காசி எனவும், முக்கூடல் சங்கமம், பரிகார ஸ்தலம் என, பெயர் பெற்றுள்ளது.
ஆண்டுதோறும், ஆடி, 1 அன்று தலையாடி கொண்டாடும் புதுமண தம்பதியர், பவானி, சங்கமேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள கூடுதுறை காவிரி ஆற்றில் குளித்து, படியில் படையல் இட்டு பூஜை செய்வர். பின், தங்களது மனைவிக்கு மாங்கல்ய கயிறு கட்டி, சுவாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம். போதிய அளவில் தண்ணீர் இல்லாத காரணத்தால், கூடுதுறைக்கு பக்தர்கள் குறைந்தளவே வந்தனர். மதியம் வரை, கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை