உப்பு விலை வீழ்ச்சி : 1 லட்சம் டன் தேக்கம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

உப்பு விலை வீழ்ச்சி : 1 லட்சம் டன் தேக்கம்

Added : ஜூலை 17, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
உப்பு விலை வீழ்ச்சி : 1 லட்சம் டன் தேக்கம்

ராமநாதபுரம்: உப்பின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால், ராமநாதபுரம் மாவட்டம், வாலிநோக்கத்தில் உள்ள அரசு உப்பு கழகத்தில், 1 லட்சம் டன் உப்பு தேக்கமடைந்துள்ளது.

இது தொடர்பாக, அரசு உப்பு கழக மேலாளர் விஜயன் கூறியதாவது: இந்தாண்டு மழை இல்லாததால், உப்பு உற்பத்தி அதிகமாக உள்ளது. அரசு உப்பு கழகத்தில் மட்டும், 1 லட்சம் டன் உற்பத்தியான உப்பு விற்பனையாகாமல் உள்ளது. இங்கு உப்பு உற்பத்தி செய்யப்பட்டு, 1 டன், 950 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சுத்தம் செய்யப்படாத உப்பு டன்னுக்கு, 450 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு, 1 டன், 1,050 வரை விற்பனை செய்யப்பட்டது. இப்போது டன் ஒன்றுக்கு, 1,300 - 1,400 ரூபாய் வரை உப்பை விற்பனை செய்தால் மட்டுமே லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை