கேபிள் 'டிவி'யில் புதிய திரைப்படங்கள் ஆகஸ்ட் 15 முதல் மக்கள் பார்க்கலாம்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

தமிழகத்தில், கேபிள், 'டிவி' மூலம் புதிய திரைப்படங்களை வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை, கேபிள் ஆப்பரேட்டர்கள் கூட்டுறவு சங்கம் துவக்கி உள்ளது. இது, ஆகஸ்ட், 15 முதல் நடைமுறைக்கு வருகிறது. தமிழகத்தில், கேபிள் ஆப்பரேட்டர்கள் இணைந்து, டி.சி.சி.எல்., என்ற, கூட்டுறவு சங்கத்தை உருவாக்கி, மாநிலம் முழுவதும், கேபிள் இணைப்பு கொடுத்துள்ளனர்.
சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில், 'செட் - டாப்' பாக்ஸ் மூலமாகவும், இரண்டு ஆண்டுகளாக கேபிள் சேவை வழங்குகின்றனர். இந்நிலையில், வாடிக்கை யாளர்களுக்கு, ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய முடிவெடுத்து உள்ளனர்.

இது குறித்து, டி.சி.சி.எல்., உறுப்பினரும், தமிழக கேபிள் ஆப்பரேட்டர்கள் நலச் சங்கத் தலைவருமான ஆறுமுகம் கூறியதாவது: கேபிள் துறையில் அதிகரிக்கும் போட்டியை சமாளிக்க, வாடிக்கையாளர்களை கவரும் வகையில், புதுப் புது திட்டங்களை அறிமுகம் செய்கிறோம்.
இதன் ஒரு பகுதியாக, சினிமா தியேட்டரில், புதிய படங்கள் வெளியாகும் நாளிலேயே, கேபிள், 'டிவி'யில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். அதன்படி, முதலில் மலையாளத்தில் வெளியாகி உள்ள திரைப்படத்தை, அதே தேதியில், தமிழில் வெளியிடுகிறோம்; மொழி மாற்றம் செய்யும் பணி நடந்து வருகிறது.விருப்பம் உள்ளோர், அதற்கான கட்டணத்தை ஆப்பரேட்டர்களிடம் செலுத்தினால், அந்த படத்தை பார்க்கலாம். இது, ஆக., 15ல் அறிமுக மாகிறது. அதேபோல, பாதியில் நிற்கும் திரைப்படங்களின் தயாரிப்பாளர்களுக்கு நிதி உதவி அளித்து, அதை முடித்து, கேபிளில் வெளியிடுவோம்.அடுத்த கட்டமாக, ஆப்பரேட்டர்களிடம் போகாமல், வீட்டில் இருந்த படி, 'வீடியோ ஆன் டிமாண்ட்' என்ற முறையில், வாடிக்கையாளர்கள், புதிய திரைப்படம் உட்பட விரும்பிய திரைப்படங்களை, ஆன்லைனில் பணம் செலுத்தி பார்க்கும் வசதி அறிமுகம் செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.