எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு கிடைக்குமென பிரதமர் மோடி நம்பிக்கை! பார்லி., கூட்டத் தொடரை சுமுகமாக நடத்த வலியுறுத்தல் Dinamalar
பதிவு செய்த நாள் :
நம்பிக்கை!
எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு கிடைக்குமென பிரதமர் மோடி..
.பார்லி., கூட்டத் தொடரை சுமுகமாக நடத்த வலியுறுத்தல்

புதுடில்லி: ''ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறைக்கு, அனைத்து எதிர்க்கட்சிகளும் அளித்த ஆதரவு, நடப்பு பார்லி., மழைக்கால கூட்டத்தொடரிலும் தொடரும்,'' என, பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகள்,ஒத்துழைப்பு,கிடைக்குமென,பிரதமர்,மோடி,நம்பிக்கை,பார்லி.,கூட்டத் தொடரை, சுமுகமாக, நடத்த, வலியுறுத்தல்


பார்லி., மழைக்கால கூட்டத்தொடர், நேற்று துவங்கியது. முன்னதாக, கூட்டத்தொடர் குறித்து, பிரதமர் மோடி கூறியதாவது:இந்த கூட்டத்தொடர் மிகவும் முக்கியமானது. புதிய ஜனாதிபதி, துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க உள்ளோம்.

சுதந்திர தினம்நாட்டின், 70வது சுதந்திர தினத்தையும், 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தின், 75வது ஆண்டையும் கொண்டாட உள்ளோம்.கோடை முடிந்து, மழைக்காலம் துவங்கியதும், மழை பெய்து, மண் வாசனை ஏற்படும். தற்போது, மழைக்கால கூட்டத்தொடர் துவங்கி உள்ள நிலையில், மக்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறையை அறிமுகம் செய்த பின், தற்போது இந்த கூட்டத்தொடர் துவங்கி உள்ளது. ஜி.எஸ்.டி.,க்கு, அனைத்து கட்சிகளும் முழு ஆதரவளித்து, அதை

நிறைவேற்றி உள்ளோம். அனைத்து கட்சிகளும், அனைத்து மாநில அரசுகளும், தேச நலனுக்காக இணைந்து செயல்பட்டோம். அது போன்ற ஒரு எழுச்சிமிக்க மன உணர்வு, இந்த கூட்டத்தொடரிலும் இருக்கும் என, மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளேன்.

சிறந்த விவாதங்கள்


அனைத்து கட்சிகள் ஆதரவுடன், பார்லிமென்டில்,மிகவும் சிறந்த விவாதங்கள், அலுவல்கள் நடக்கும் என, எதிர்பார்க்கிறேன். பருவமழை துவங்கி உள்ள நிலையில், மக்களின் உணவு பாதுகாப்பை உறுதி செய்ய, மிகவும் கடினமாக உழைக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் நம்முடைய நன்றியையும், பாராட்டையும் தெரிவித்து கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

லோக்சபா ஒத்திவைப்பு


பார்லி., மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளான நேற்று, மறைந்த, எம்.பி.,க்கள் மற்றும் முன்னாள், எம்.பி.,க்களுக்கு இரங்கல் தெரிவித்து, சபை நடவடிக்கை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்த, பா.ஜ.,வின் அனில் தவே, பிரபல நடிகரும், காங்., - எம்.பி.,யுமான, வினோத் கன்னா ஆகியோருக்கு, சபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, லோக்சபாவுக்கு சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில், ஸ்ரீநகர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட, தேசிய மாநாட்டுகட்சி நிறுவனர் பரூக் அப்துல்லா, கேரளாவின் மலப்புரம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் குஞ்ஞாலி குட்டி ஆகியோர் பதவியேற்றனர்.
ஜம்மு - காஷ்மீரில், அமர்நாத் யாத்திரை சென்ற யாத்ரீகர்கள் மீதான தாக்குதலுக்கு, சபையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

சபை நடவடிக்கைகள் துவங்குவதற்கு முன், சபைக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பார்லி., விவகாரத் துறை அமைச்சர் அனந்த் குமார் ஆகியோர், காங்., தலைவர் சோனியா, சமாஜ்வாதி நிறுவனர் முலாயம் சிங் யாதவ் உள்ளிட்டோரை வரவேற்றனர். சோனியா உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் வரிசைக்கு சென்று, பிரதமர் மோடி, பேசிக் கொண்டிருந்தார்.

ராஜ்யசபாவில் இரங்கல்


ராஜ்யசபா நேற்று காலை துவங்கியதும், சுற்றுச்சூழல் அமைச்சர் அனில் தவே, தெலுங்கானாவைச் சேர்ந்த, எம்.பி., கோவர்தன் ரெட்டி ஆகியோரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும், சமீபத்தில் மறைந்த, ஆறு முன்னாள், எம்.பி.,க்களுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
அமர்நாத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு, ராஜ்யசபா தலைவரான, துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி கடும் கண்டனம் தெரிவித்தார். அதை தொடர்ந்து, சபை, நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெயந்தன் - Chennai,இந்தியா
24-ஜூலை-201714:44:28 IST Report Abuse

ஜெயந்தன்நீங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது ஒரு நியாயம்... இப்போது வேறு நியாயமா??? செய்வதெல்லாம் மக்கள் விரோத ஆட்சி..அப்புறம் எப்படி எதிர் கட்சிகள் ஒத்துழைப்பார்கள்....

Rate this:
m.viswanathan - chennai,இந்தியா
18-ஜூலை-201721:18:36 IST Report Abuse

m.viswanathanஅனைத்து எதிர் கட்சியினரும் பாஜக வில் சேர்ந்துவிடுங்கள் . பூரண ஒத்துழைப்பை நல்குங்கள்

Rate this:
M.Guna Sekaran - Madurai,இந்தியா
18-ஜூலை-201718:08:08 IST Report Abuse

M.Guna Sekaranஜி.எஸ்.டி என்று கூறும் ஏன் இந்தியாவில் கல்வியையும் மருத்துவத்தையும் இனிமேல் அனைவர்க்கும் பொதுவாக அரசே ஏற்று நடத்தும் என்று கூற தைரியம் இருக்கா?

Rate this:
Karuthukirukkan - Chennai,இந்தியா
18-ஜூலை-201712:00:02 IST Report Abuse

Karuthukirukkanஇந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, நாடாளுமன்றத்தை அதிகமாக முடக்கி சாதனை படைத்தது பிஜேபி தான் .. 2009 இல் இருந்து 2014 வரை நாடாளுமன்றத்தில் செய்யாத அட்டூழியம் கிடையாது .. ஜி.எஸ்.டி கு இப்போது சாமரம் வீசும் பிஜேபி அப்போது ஒத்துழைப்பு கொடுத்து இருந்தால் இந்த மாதிரி 28 சதவீத வரிவிதிப்பில் நாம் அவதி பட்டு இருக்க மாட்டோம் .. காங்கிரஸ் கொண்டு வர விளைந்தது 3 அடுக்கு வரி தான்.. 18 சதவீதம் தான் அதிகபட்ச வரி விகிதம் ..

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
18-ஜூலை-201708:22:12 IST Report Abuse

Srinivasan Kannaiyaவெள்ளையனே வெளியேறு' என்ற இயக்கத்தை போல " தொல்லை , கொள்ளை நாயகர்கள் வெளியேறு " என்ற இயக்கதை ஆரம்பித்து லஞ்சவாதிகளை வெளியேற்ற வேண்டும்...

Rate this:
Mohamed Ibrahim - Chennai ,இந்தியா
18-ஜூலை-201706:43:44 IST Report Abuse

Mohamed Ibrahim வினை விதைத்தவன் வினை அறுப்பான் ...... எலும்புத்துண்டுக்கு ஆசைப்பட்டு நாட்டில் நிம்மதியை குழைத்து பசுவின் பேரால் கலவரம் செய்யும் காலிகள் நாட்டு அமைதி பற்றி பேச தகுதியில்லாதவர்கள்....

Rate this:
தேச நேசன் - Chennai,இந்தியா
18-ஜூலை-201707:57:54 IST Report Abuse

தேச நேசன் கலவரத்துக்கும் குண்டுவெடிப்புக்கும் உலகம் முழுவதும் பேடண்ட் வங்கியுள்ளது யார்? அமைதி மார்க்கம் தவழும் எல்லா நாட்டிலும் அமைதியின்றி தினமும் குண்டுவெடிப்பதேன்? 1400 ஆண்டுகள் விடாமல் முற்றோதியும் அந்த மறைநூலுக்கும் அதன் நாயகனுக்கும் அருள்தர சக்தியில்லையே...

Rate this:
K.Sugavanam - Salem,இந்தியா
18-ஜூலை-201713:14:20 IST Report Abuse

K.Sugavanamஅங்கெல்லாம் கலவரம் தூண்டியது யார் என அமைதியாக யோசியுங்கள்..விடை கிடைக்கும்.....

Rate this:
Anandan - chennai,இந்தியா
18-ஜூலை-201704:52:25 IST Report Abuse

Anandanநீங்க கத்துக்குடுத்த பாடத்தை அவர்களும் இப்போ செய்கிறார்கள்.

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
18-ஜூலை-201704:09:15 IST Report Abuse

Kasimani Baskaranதேசத்துக்கு எதிராக நடந்துகொள்ளும் காங்கிரஸ் தருதலைகளை மோடி உள்ளே தூக்கி வைக்கவேண்டியது நீண்டகால அடிப்படையில் நன்மை பயக்கும்... இல்லை என்றால் சீனா மற்றும் பாகிஸ்தான் போடும் எலும்புத்துண்டுக்கு ஆசைப்பட்டு நாட்டில் கலவரத்தை, எதிர்ப்பை, உண்டுபண்ணிக்கொண்டு இருக்கத்தான் செய்வார்கள்.. ஸ்டாலின் போன்ற ஆட்களையும் அடக்க வேண்டியது அவசியம்...

Rate this:
தங்கை ராஜா - tcmtnland,இந்தியா
18-ஜூலை-201706:49:40 IST Report Abuse

தங்கை ராஜாசிரிப்புத்தான் வருது. வார இதழ்களுக்கு காமெடி துணுக்குகள் எழுதினால் சன்மானமாவது கிடைக்கும்....

Rate this:
Sriram Narashum L - Jamnagar,இந்தியா
18-ஜூலை-201713:17:41 IST Report Abuse

Sriram Narashum Lஎனக்கும் சிரிப்புத்தான் வருது...

Rate this:
குஞ்சுமணி சென்னை - Chennai ,இந்தியா
18-ஜூலை-201703:05:42 IST Report Abuse

குஞ்சுமணி சென்னைமழைக்கால கூட்டத்தொட ர் ன்னா எப்படி மழைக்கு மட்டும் பாரளுமன்றத்துல ஒதுங்குறதா ?

Rate this:
தங்கை ராஜா - tcmtnland,இந்தியா
18-ஜூலை-201706:50:57 IST Report Abuse

தங்கை ராஜாகுடை கொண்டு போகாதவங்க மட்டும்....

Rate this:
தேச நேசன் - Chennai,இந்தியா
18-ஜூலை-201707:58:47 IST Report Abuse

தேச நேசன் நம்ம ஊர்ல ஆரூர் எம் எல் ஏ அதுக்குகூட ஒதுங்காமல் சம்பளம் வாங்கறாரே...

Rate this:
K.Sugavanam - Salem,இந்தியா
18-ஜூலை-201713:15:23 IST Report Abuse

K.Sugavanamஉங்களுக்கு ஏன் வயிற்றெரிச்சல்?...

Rate this:
அன்பு - தஞ்சை,இந்தியா
18-ஜூலை-201701:37:42 IST Report Abuse

அன்புபணத்தை முடக்கி, தரமான புது பணம் கொடுத்து, கருப்பு பணம் அத்தனையும் ஒழித்துவிட்டோம். GST கொண்டுவந்து, வரிகளை ஏற்றி, மக்களை சந்தோஷப்படுத்தி விட்டோம். பாகிஸ்தானுடன் வெட்டி பேச்சுவார்த்தையை நிறுத்தி, தொடர்ந்து குஷியோடு சண்டை போட்டு வருகிறோம். அடுத்து சீனாவோடு பூடானில் சண்டை போட்டு குஷி காண போகிறோம். மேலும் தீவிரமாக சண்டை போட, இன்னும் வரியை உயர்த்துவோம். மோடியின் தீவிர ஆதரவாளர்கள் மிகவும் குதூகலத்துடன் ஆட்சியை ரசித்து வருகிறார்கள். "போர் போர்" என்று முழங்குகிறார்கள். விரைவில், மோடி சீனாவுடன் போர் பிரகடனம் செய்து, மக்களை குஷிப்படுத்துவார். கவலை வேண்டாம்.

Rate this:
தங்கை ராஜா - tcmtnland,இந்தியா
18-ஜூலை-201706:56:48 IST Report Abuse

தங்கை ராஜாஎப்படியோ அவரை நம்பும் மக்களை வாயளவிலாவது சந்தோஷமாக வைத்திருக்கிறார்.....ஆனால் நம்புவோர் வீட்டு அடுப்படியிலும் பூனை படுத்து தூங்கும் என்பதை புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு சந்தோஷத்தை கொடுக்கிறார்....

Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement